- Advertisement -

சுக்கிர யோகத்தைப் பெற ஏற்ற வேண்டிய விளக்கு

- Advertisement -

எல்லோருக்குமே வெளியில் இருந்து வரவேண்டிய பணம் என்ற ஒன்று இருக்கும். அதாவது அடுத்தவர்கள் நமக்கு கொடுக்க வேண்டிய கடன், அடுத்தவர்களிடம் இருந்து நமக்கு வரவேண்டிய பணம், ஆனால் அந்த பணம் வராது. பல வருடங்களாக போராடி இருப்போம். ஆனால் நம்முடைய பணம் நம் கைக்கு வந்து சேராமலேயே பிரச்சனை தரும். ஒரு சொத்து பிரச்சனையை தீர்க்க முடியாமல் தவித்து வருவோம்.

பல வருடங்களாக ஒருவருக்கு கடனை கொடுத்துவிட்டு திரும்பவும் கேட்டுக் கொண்டே இருப்போம். ஆனால் அதை அவர்கள் திரும்ப கொடுக்கவே மாட்டார்கள். இப்படி உங்களுக்கு வரவேண்டிய பணம், 21 நாட்களில் உங்களுக்கு வந்து சேரும். பணத்தால் இருக்கக்கூடிய பிரச்சனைகள் சரியாகி உங்களுக்கு இருக்கும் பணத்தடை உடைந்து, சுக்கிரயோகம் ஏற்பட்டு, உங்கள் கைக்கு அந்த பணம் வர வேண்டும் என்றால், பூஜை அறையில் என்ன விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது.

- Advertisement -

சுக்கிர யோகம் தரும் விளக்கு பரிகாரம்

இன்று நவராத்திரியில் வந்திருக்கக்கூடிய வெள்ளிக்கிழமை. மூன்றாம் பிறையும் இருக்கிறது. வளர்பிறையாக இருக்கிறது. இன்று மாலை இந்த தீபத்தை உங்கள் வீட்டில் ஏற்ற துடங்குங்கள். இன்று மாலை இந்த தீபத்தை ஏற்றி விட்டீர்கள். இதேபோல தொடர்ந்து 21 நாட்கள் இந்த தீபம் உங்களுடைய வீட்டில் ஏற்றப்பட வேண்டும். பெண்கள் இந்த தீபத்தை ஏற்ற முடியாத சூழ்நிலையில், வீட்டில் இருக்கும் மற்றவர்கள் இந்த தீபத்தை கட்டாயம் ஏற்ற வேண்டும்.

ஒரு சின்ன தட்டில் மண் அகல் விளக்கை வைத்து, நெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். பஞ்சு திரியோடு, சின்ன துண்டு வெட்டிவேரை சேர்த்து இரண்டையும் ஒன்றாக திரித்து, அந்த நெய்யில் போட்டு தீபம் ஏற்றி ‘சுக்கிர பகவானே எனக்கு வர வேண்டிய பணத்தை வாங்கி கொடு’ என்று வேண்டுதல் வைத்து இரண்டு கற்கண்டு நெய்வேதியும் வைத்து, மகாலட்சுமியையும் சுக்கிர பகவானையும் தீப தூப ஆரத்தி காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இவ்வளவுதான் வழிபாடு. இந்த வழிபாட்டின் போது மகாலட்சுமி மந்திரம், மகாலட்சுமி அஷ்டோத்திரம், மகாலட்சுமி பாடல்கள் இப்படி உங்களால் ஏதாவது பாட முடியும் என்றால் பாடலாம். இல்லை என்றால் உங்கள் கைபேசியில் அந்த பாடலை ஒலிக்க விட்டுக் கொள்ளுங்கள்.

இந்த எளிமையான வழிபாட்டை இன்று துவங்கி 21 நாட்கள் செய்யும் போது, 21 நாட்களில் உங்கள் பணம் உங்கள் கையை வந்து சேரும். உங்களுக்கான சுக்கிர யோகம் அடிக்கும். எனக்கு நிலுவையில் எந்த பணமும் கிடையாது. நான் இந்த வழிபாட்டை செய்யலாமா. நிச்சயம் செய்யலாம். உங்களுடைய வருமானம் என்பது அதிகரிக்கும். கைக்கு கைக்கு பணம் வர தொடங்கும்.

இதையும் படிக்கலாமே: சக்தி வாய்ந்த நவராத்திரி மந்திரம்

செலவுக்கு பணம் இல்லை என்ற ஒரு கஷ்டம் வரவே வராது. தினமும் அந்த மண் விளக்கில் இருக்கும் திரி மற்றும் வெட்டி வேரையும் மாற்றுங்கள். பழைய நெய்யை துடைத்து விளக்கை சுத்தம் செய்து விட்டு புது நெய் போட்டு, தினமும் விளக்கு ஏற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நல்லதை நினைத்தால் நல்லது மட்டுமே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -