- Advertisement -
மந்திரம்

தோல்வியும் வெற்றியாக மாற வேண்டுமா? சூரிய பகவானை இந்த மந்திரத்தை சொல்லி வழிபட்டு பாருங்கள்.

காலையில் எழுந்தவுடன் சூரியன் உதிக்கும் சமயத்தில் 6 மணி அளவில், சூரியனை பார்த்து ‘சூரிய நமஸ்காரம்’ செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். இதை இன்றைய காலகட்டத்தில் எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் இன்னுமும் சிலர் சூரிய நமஸ்காரம் செய்யாமல் தங்களது அன்றாட வாழ்க்கையை தொடங்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு சூரிய நமஸ்காரத்தின் முக்கியத்துவம் நன்றாகவே தெரிந்திருக்கும். எப்படிப்பட்ட தோல்வி மனப்பான்மையையும், வெற்றி மனப்பான்மையாக மாற்றும் ஒரு நேர்மறை ஆற்றலானது நமக்கு கிடைக்க நிச்சயமாக சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். இது நம் ஆரோக்கியத்திற்கும் நல்லது. அறிவாற்றலுக்கும் நல்லது. இப்படிப்பட்ட சூரியபகவானை ஞாயிற்றுக்கிழமை தோறும் எப்படி வழிபட்டால் அதிக பலனை பெறலாம் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்குள் குளித்து முடித்துவிட்டு, ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, இரண்டு திரிகளைப் போட்டு, தீபம் ஏற்றி கிழக்கு பக்கமாக வைத்துவிடவேண்டும். அதன் அருகில் சூரியனுக்கு நைவேத்தியமாக படைக்க ஏதாவது ஒரு இனிப்பு பொருளை வைக்கலாம். கற்கண்டாக இருந்தாலும் பரவாயில்லை. முடிந்தவரை சர்க்கரையை எந்த இறைவனுக்கும் நைவேத்தியமாகப் அடைக்க வேண்டாம். உங்களால் முடிந்தால் சூரியபகவானுக்கு தும்பைப் பூவை படைக்கலாம். சூரியனுக்கு மிகவும் பிடித்தது தும்பைப்பூ. தொடர்ந்து ஒரு 11 நாட்களாவது தும்பை பூவை வைத்து வழிபட பாருங்கள். ஒருமுறை இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி எப்போதும்போல் சூரியனை நமஸ்காரம் செய்துவிட்டு, அதன் பின்பு விளக்கின் அருகே அமர்ந்து சூரிய பகவானின் 108 போற்றிகளை உச்சரிப்பது மிகவும் நல்ல பலனைக் கொடுக்கும். உங்களுக்கான சூரியபகவானின் 108 போற்றிகள் இதோ..

- Advertisement -

1.ஓம் அதிதி புத்ரனே போற்றி
2.ஓம் அளத்தற்கரியனே போற்றி
3.ஓம் அறுகுப்பிரியனே போற்றி
4.ஓம் அருணன் சோதரனே போற்றி
5.ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
6.ஓம் அக்கினி அதிதேவதையே போற்றி
7.ஓம் ஆண் கிரகமே போற்றி
8.ஓம் ஆதிவார நாதனே போற்றி
9.ஓம் ஆய்வின் இலக்கே போற்றி
10.ஓம் ஆறாண்டு ஆள்பவனே போற்றி

11.ஓம் ஆன்மாவே போற்றி
12.ஓம் ஆதித்யஹ்ருதய ப்ரியனே போற்றி
13.ஓம் இருள் நீக்கியே போற்றி
14.ஓம் இயக்க சக்தியே போற்றி
15.ஓம் ஈசன் வலக்கண்ணே போற்றி
16.ஓம் உக்கிரனே போற்றி
17.ஓம் உஷா நாதனே போற்றி
18.ஓம் உவமைப் பொருளே போற்றி
19.ஓம் உயிர்களின் வாழ்வே போற்றி
20.ஒம் உத்திரநாதனே போற்றி

- Advertisement -

21.ஓம் உத்திரட்டாதிபதியே போற்றி
22.ஓம் என்பானவனே போற்றி
23.ஓம் எருக்கு சமித்தனே போற்றி
24.ஓம் எழுபரித் தேரனே போற்றி
25.ஓம் எண்ணெழுத்து மந்திரனே போற்றி
26.ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
27.ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி
28.ஓம் ஒளிப்பிழம்பே போற்றி
29.ஓம் ஓராழித்தேரனே போற்றி
30.ஓம் ஓய்விலானே போற்றி

31.ஓம் ஓங்காரம் துதித்தவனே போற்றி
32.ஓம் கதிரவனே போற்றி
33.ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
34.ஓம் களங்கமிலானே போற்றி
35.ஓம் கமலம் விரிப்பவனே போற்றி
36.ஓம் கர்ணன் தந்தையே போற்றி
37.ஓம் கனலே போற்றி
38.ஓம் கண்ணின் காவலே போற்றி
39.ஓம் கற்பரசிச் சேவகனே போற்றி
40.ஓம் கண்டியூரில் அருள்பவனே போற்றி

- Advertisement -

41.ஓம் காஷ்யபர் மைந்தனே போற்றி
42.ஓம் காயத்ரி தேவனே போற்றி
43.ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி
44.ஓம் காலக் கணக்கே போற்றி
45.ஓம் காய்பவனே போற்றி
46.ஓம் காலை மாலை கனிவோனே போற்றி
47.ஓம் கிழக்கு நோக்கனே போற்றி
48.ஓம் கிருத்திகை அதிபதியே போற்றி
49.ஓம் கிரக நாயகனே போற்றி
50.ஓம் கிருபாகரனே போற்றி

51.ஓம் குந்திக்கருளியவனே போற்றி
52.ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
53.ஓம் கோதுமைப்பிரியனே போற்றி
54.ஓம் கோனார்க்கில் அருள்பவனே போற்றி
55.ஓம் ஞாயிறே போற்றி
56.ஓம் ஞாலக் காவலே போற்றி
57.ஓம் சனீஸ்வரன் தந்தையே போற்றி
58.ஓம் சங்கராந்தி நாயகனே போற்றி
59.ஓம் சாட்சித் தேவனே போற்றி
60.ஓம் சமரிலானே போற்றி

61.ஓம் சிங்கக் கொடியனே போற்றி
62.ஓம் சிம்மராசி அதிபதியே போற்றி
63.ஓம் சிரஞ்சீவியே போற்றி
64.ஓம் சிதம்பரத்தாலயமுளானே போற்றி
65.ஓம் சுயம்பிரகாசனே போற்றி
66.ஓம் சூர்ய நமஸ்காரப்பிரியனே போற்றி
67.ஓம் சூரியனார் கோயில் தேவனே போற்றி
68.ஓம் செம்மேனியனே போற்றி
69.ஓம் செம்மலர்ப்பிரியனே போற்றி
70.ஓம் செந்நிறக்குடையனே போற்றி

71.ஓம் செந்தாமரை ஏந்தியவனே போற்றி
72.ஓம் சூலாயுதனே போற்றி
73.ஓம் சோழர் மூதாதையனே போற்றி
74.ஓம் சவுர மதத் தலைவனே போற்றி
75.ஓம் தனிக்கோயிலுளானே போற்றி
76.ஓம் தாமிர உலோகனே போற்றி
77.ஓம் தூயவனே போற்றி
78.ஓம் திருமேய்ச்சூரில் அருள்பவனே போற்றி
79.ஓம் நடுவிருப்போனே போற்றி
80.ஓம் நன்னிலத்து அருள்பவனே போற்றி

81.ஓம் நலமே அளிப்பவனே போற்றி
82.ஓம் நளாயினிக்கு அருளியவனே போற்றி
83.ஓம் நல்லுலகத் தந்தையே போற்றி
84.ஓம் நாடப்படுபவனே போற்றி
85.ஓம் நீதிதேவனே போற்றி
86.ஓம் நோய் தீர்ப்பவனே போற்றி
87.ஓம் பகற்காரணனே போற்றி
88.ஓம் பனையபுரத்து அருள்பவனே போற்றி
89.ஓம் பரஞ்சோதியே போற்றி
90.ஓம் பரிட்சித்துக்கு அருளியவனே போற்றி

91.ஓம் பாலைநிலத்தேவனே போற்றி
92.ஓம் பிரபாகரனே போற்றி
93.ஓம் புகழ்வாய்த்தவனே போற்றி
94.ஓம் புத்தியளிப்பவனே போற்றி
95.ஓம் மல நாசகனே போற்றி
96.ஓம் மதி ஒளிரச் செய்பவனே போற்றி
97.ஓம் மயில்வாகனனே போற்றி
98.ஓம் மயூரகவிக்கு அருளியவனே போற்றி
99.ஓம் முதல் கிரகமே போற்றி
100.ஓம் முக்கோணக் கோலனே போற்றி

101.ஓம் முழுமுதற் பொருளே போற்றி
102.ஓம் மும்மூர்த்தி அம்சமே போற்றி
103.ஓம் ரவிக்குலத்தலைவனே போற்றி
104.ஓம் ருத்ரன் பிரத்யதி தேவதையே போற்றி
105.ஓம் விடியச் செய்பவனே போற்றி
106.ஓம் வலிவலத்து அருள்பவனே போற்றி
107.ஓம் “ஹரீம்’ பீஜ மந்திரனே போற்றி
108.ஓம் சூரியநாராயணனே போற்றி போற்றி!

இந்த மந்திரத்தை உச்சரித்த பின்பு நீங்கள் ஏற்றி வைத்த தீபத்தை 21 முறை வலம் வர வேண்டும். அதன்பின் படைக்கப்பட்ட பிரசாதத்தை வீணாக்காமல் நீங்களும் சாப்பிடலாம். உங்கள் வீட்டில் இருப்பவர்களும் சாப்பிட்டுக் கொள்ளலாம். இந்த பரிகாரத்தை வெட்ட வெளியில் தான் செய்யவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. உங்களது வீட்டுக்குள்ளேயே கிழக்குப்பக்கம் பார்த்து அமர்ந்து செய்தால் போதும். உங்களது மனதில் இருக்கும் எப்படிப்பட்ட தோல்வி மனப்பான்மையும், வெற்றியாக மாறிவிடும் உங்களுக்கு வேலை கிடைப்பதில் பிரச்சினை, பணம் வருவதில் பிரச்சினை, குடும்ப பிரச்சனை, ஆரோக்கிய பிரச்சனை, இதில் எப்படிப்பட்ட நீக்க முடியாத பிரச்சனையாக இருந்தாலும், சுலபமாக தீர்வதற்கு இந்த ஒரு பரிகாரத்தை மனப்பூர்வமாக ஞாயிற்றுக்கிழமை தோறும் செய்து வந்தாலே போதும். இத்தனை ஞாயிற்றுக்கிழமைகள் தான் செய்யவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. வாழ்நாள் முழுவதும் இதை செய்தால் கூட எந்த தவறும் இல்லை.

இதையும் படிக்கலாமே
பஞ்சபூத பயங்களையும் போக்கும் துர்கா சந்திரகலா ஸ்துதி.

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Surya bhagavan manthiram Tamil. Surya bhagavan manthirangal Tamil. Surya bhagavan mantras Tamil. Surya bhagavan slokam Tamil.

- Advertisement -