பஞ்சபூத பயங்களையும் போக்கும் துர்கா சந்திரகலா ஸ்துதி.

durgai-amman-manthiram

அம்பாள் என்ற பெயரை சொன்னாலே சக்தி என்ற அர்த்தத்தைத் தான் குறிக்கும். நமக்கு தேவைப்படும் ‘உடல் சக்தியாக இருந்தாலும்’ சரி, ‘மன சக்தியாக இருந்தாலும்’ சரி அது பலவீனம் ஆகாமல் இருப்பதற்கு துர்க்கை பூஜை மிகவும் சிறந்தது. ஏனென்றால் சக்தியின் ரூபமே அம்பாள் தான். ஆயிரம் கண்களை கொண்ட அந்த அம்பாளுக்கு பஞ்சபூதங்களையும் தன்வசம் வைத்துக் கொள்ளும் சக்தியும் உள்ளது. நமக்கு இந்த பஞ்ச பூதங்களின் மூலம் எந்த ஆபத்தும் நேராமல் இருக்கவும், அப்படிப்பட்ட ஆபத்துகளில் நாம் சிக்காமல் தப்பித்துக் கொள்ளவும் துர்க்கை அம்மனை இந்த மந்திரத்தை கூறி வழிபடுவது மிகவும் சிறந்தது.

durga

துர்கா சந்திரகலா ஸ்துதி!

காந்தார மத்ய த்ருடலக்ன தயாவஸந்நா;
மக்னாச்ச வாரிதி ஜலே ரிபுபிச்ச ருத்தா;
யஸ்யா; ப்ரபத்ய சரணௌ விபதஸ்தரந்தி
ஸா மே ஸதாஸ்து ஹ்ருதி ஸர்வ ஜகத்ஸவித்ரீ

durga

அதாவது நிலத்தில் வசிக்கும் எதிரிகளின் மூலம் நமக்கு பிரச்சனைகள் வரலாம். எதிர்பாராமல் நீரில் மூழ்கி வெளியில் வர முடியாமல் தவிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். புயலில் சிக்கி உயிர் போகும் நிலைமை ஏற்படலாம். ஆகாய மார்க்கமாக செல்லும் சமயத்தில் விபத்துகள் ஏற்பட நேரிடலாம். விமான பயணம் மேற்கொள்பவர்கள் என்று வைத்துக்கொள்ளலாம். நெருப்பினால் விபத்து ஏற்படலாம்.  நமக்கு எதிர்பாராத வகையில் கூட பஞ்சபூதங்களினால் ஆபத்து வராமல் இருக்க துர்கை அம்மனை வழிபடுவது மிகவும் சிறந்த முறை. இப்படிப்பட்ட சிக்கல்களில் ஒருவேளை நாம் மாட்டிக் கொண்டாலும் அதனை எதிர்கொள்ள நமக்கு மன தைரியம் வந்துவிடும். எப்படி? இந்த  மந்திரத்தை செவ்வாய்க்கிழமை தோறும் உச்சரித்து துர்க்கை அம்மனை மனதார வழிபடுவதன் மூலம் நம்மால் அதீத சக்தியை அடைய முடியும். இதேபோன்று நவராத்திரி சமயங்களில் ஒன்பது நாளும் இந்த மந்திரத்தை உச்சரிப்பது மிகவும் சிறந்தது. நமக்கு ஏற்படும் அனாவசியமான சிந்தனைகள், எதிரிகள், துன்பம் இவைகள் அனைத்திலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இதையும் படிக்கலாமே
தனம் சேர்க்கும் குபேர சிந்தாமணி மந்திரம்

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Durga chandrakala stuti lyrics in tamil. Tamil durga chandrakala slokam in tamil. Sri durga chandrakala stuti lyrics in tamil. Durga chandrakala stuti stotram. Durga stuti.