- Advertisement -
மந்திரம்

ராஜ யோகம் அருளும் அற்புத துதிப்பாடல்

ன்னை மீனாட்சியின் சரிதத்தைப் போற்றி, அவளின் திருப்பாதக் கமலங்களைத் துதித்துப் போற்றச் சொல்லும் மிக அற்புதமான பாடலொன்று திருவிளையாடற் புராணத்தில் உண்டு.

செழியர் பிரான் திருமகளாய் கலைபயின்று
முடிபுனைந்து செங்கோலோச்சி
முழுதுலகும் செயங்கொண்டு திறைகொண்டு
நந்திகண முனைப்போர் சாய்த்துத்

- Advertisement -

தொழுகணவற்கு அணிமணி மாலிகைச் சூட்டித்
தன்மகுடம் சூட்டிச் செல்வந்த்
தழைவுறு தண் அரசளித்த பெண்ணரசி
அடிக்கமலம் தலைமேல் வைப்பாம்

கருத்து: அன்னை பராசக்தி பாண்டியர் குலத்தில் திருமகளாகத் தோன்றி தடாதகை என்று பெயர்கொண்டு வளர்ந்தாள். வேதாகமம் தொடங்கி போர் உள்ளிட்ட அனைத்துக் கலைகளையும் பயின்று பாண்டியநாட்டுப் பேரரசியாக மணிமகுடம் புனைந்து செங்கோல் நடத்தினாள். உலகத்திலுள்ள அரசர்களை வெற்றிகொண்டு அவர்களிடம் கப்பம் வசூலித்தாள்.

- Advertisement -

பின்னும் வெற்றி வேட்கையால் கயிலையின் மீதும் படையெடுத் துச் சென்றாள். அங்கு தம்மை எதிர்த்த நந்தி முதலான சிவசேனைகளை வென்று அடக்கினாள்.  அதைக்கேட்டுப் போர்க்களத்துக்குப் வந்த சிவனாரைக் கண்டு, முன்வினைப் பயன் தெரிந்து மணமாலை சூட்டி கணவனாகக் கொண்டாள். தனது அரசை அவருக்களித்து  மகிழும் பெண்ணரசியாகத் திகழ்கிறாள். அத்தகைய ஒப்பற்ற சாம்ராஜ்ய மகாராணியின் திருவடிக் கமலங்களை என் தலை மேல் வைத்துத் துதிக்கிறேன்.

இதையும் படிக்கலாமே:
செல்வத்தை அள்ளித்தரும் குபேர வசிய மந்திரம்

மதுரை மீனாட்சியம்மன் அரசுகளுக்கெல்லாம் பேரரசியாகத் திகழ்பவள் எனப் போற்றுகின்றன ஞானநூல்கள். மேற்காணும் பாடலை அனுதினமும் பாடி, அன்னை மீனாட்சியை வணங்கி வழிபட்டு வந்தால், உயர்ந்ததிலும் உயர்ந்த பதவிகளும், பொறுப்புகளும் வாய்க்கும்; கஷ்டங்கள் நீங்கி நமது நல்ல விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

- Advertisement -