
சூரனை வதம் செய்வதற்காக ஏற்பட்டது தான் இந்த கந்த சஷ்டி விரதம். எப்படி இந்த உலகத்தை அழிக்க தோன்றிய அசுரனை முருகப்பெருமான் வதம் செய்தாரோ அதேபோல் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டத்தை தீர்ப்பதற்கும் முருகப்பெருமான் அருள் புரிவார் என்பதால் இந்த கந்த சஷ்டி விரதத்தை பலரும் மேற்கொள்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் நமக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சினையாக திகழ்வது பண பிரச்சனை தான். பணத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சமாளிப்பதற்குள் உயிர் போய் வருகிறது என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு பலவிதமான கஷ்டங்களை நாம் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த பணம் தொடர்பான கஷ்டங்களை தீர்ப்பதற்கு கந்த சஷ்டி விரத நாட்களில் கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கேட்ட வரத்தை கொடுக்கக் கூடிய தெய்வமாக தான் முருகப்பெருமான் திகழ்கிறார். அப்படிப்பட்ட முருகப்பெருமானுக்கு உகந்த விரதமாக திகழ்வதுதான் இந்த கந்த சஷ்டி விரதம். இது ஆறு நாட்கள் கடைபிடிக்கக்கூடிய விரதமாக திகழ்கிறது. ஏழாவது நாள் திருக்கல்யாணத்துடன் இந்த விரதம் நிறைவடைகிறது என்று கூறப்படுகிறது. இந்த ஆறு நாட்களில் ஏதாவது ஒரு நாள் மட்டுமாவது நாம் இந்த மந்திரத்தை முழுமனதோடு முருகப்பெருமானை நினைத்து முருகப்பெருமானின் கையில் இருக்கக் கூடிய வேலை நினைத்து கூறினோம் என்றால் நம் வாழ்க்கையில் நாம் இதுவரை சந்தித்து வந்த பணக்கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அந்த மந்திரத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த மந்திரம் வேல் மாறல் பதிகத்திலிருந்து எடுக்கப்பட்ட மந்திரமாகும். வேல் மாறலை முழுவதுமாக படிக்க இயலவில்லை என்றாலும் இந்த மந்திரத்தை படித்தாலே போதும். இந்த மந்திரத்தை படிப்பதன் மூலம் இந்த உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகிறது. இதோடு மட்டுமல்லாமல் நம் வாழ்க்கையில் இருக்க கூடிய பண தொடர்பான அனைத்து பிரச்சினைகளும், பணம் தொடர்பான கஷ்டங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது. எவ்வளவு முயற்சி செய்தும் பணவரவை அதிகரிக்கவே முடியவில்லை என்று நினைப்பவர்களும், பணத்தால் பலவித பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு தவிப்பவர்களும் இந்த கந்தசஷ்டி விரதம் நிறைவடைவதற்குள் ஏதாவது ஒரு நாள் மட்டுமாவது இந்த வேல் மாறல் பதிகத்தை ஆறு முறை படித்தாலே நம் வாழ்வில் பலவிதமான மாற்றங்கள் உண்டாகும் என்று கூறலாம்.
இதற்கு நம் வீட்டில் வேல் இருக்கும் பட்சத்தில் அந்த வேலிற்கு முன்பாக அமர்ந்து படிக்க வேண்டும். வீட்டில் வேல் இல்லை என்பவர்கள் அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய வேலிற்கு முன்பாக அமர்ந்து படிக்க வேண்டும். வீட்டிலும் வேலை இல்லை அருகிலும் முருகன் கோவில் இல்லை என்பவர்கள் இணைய தளத்தினல் இருந்து வேல் படத்தை பிரதியிட்டு அதற்கு முன்பாகவும் அமர்ந்து படிக்கலாம். அதையும் செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் வீட்டில் இருக்கக் கூடிய முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக அமர்ந்து படிக்கலாம்.
இதையும் படிக்கலாமே: வட்டிக் கடனை தீர்க்கும் நவம்பர் மாத ரகசிய நாட்கள்
கந்தசஷ்டி விரதம் நிறைவடைவதற்குள் முழு மனதோடு மேற்சொன்ன இந்த மந்திரத்தை ஆறு முறை முருகப்பெருமானை நினைத்துக் கொண்டும், முருகப்பெருமானின் கையில் இருக்கக்கூடிய வேலை நினைத்துக் கொண்டும், யார் ஒருவர் கூறுகிறாரோ அவருடைய வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த பணக்கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.