- Advertisement -

தேய்பிறை சஷ்டியில் கூற வேண்டிய முருகன் மந்திரம்

- Advertisement -

அபிஜித் நட்சத்திரம் என்று சொன்னதும் நம் நினைவிற்கு வருவது பெருமாளின் வழிபாடுதான். பெருமாள் எந்த அளவிற்கு அபிஜித் நட்சத்திரத்திற்கு முக்கியமோ அதேபோல்தான் அன்றைய நாளில் இருக்கக்கூடிய திதிக்குரிய தெய்வமும் மிகவும் முக்கியமான தெய்வமாக கருதப்படுகிறார். அந்த வகையில் மே மாதம் 18ஆம் தேதி தேய்பிறை சஷ்டி வருகிறது. சஷ்டி திதியில் முருகப்பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் அளவில்லா நன்மைகளை பெற முடியும் என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட முருகனுக்குரிய இந்த ஒரு மந்திரத்தை அபிஜித் நட்சத்திரம் நேரத்தில் கூறும் பொழுது கேட்ட வரம் கேட்டபடி கிடைக்கும். அந்த மந்திரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

முருகன் மந்திரம்

ஒருநாள் பிறக்கிறது என்றால் அந்த நாளில் வரக்கூடிய திதிக்குரிய தெய்வத்தையும் அந்த நாளில் வரக்கூடிய நட்சத்திரத்திற்குரிய தெய்வத்தையும் நாம் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி நாம் வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு அளவில்லா நன்மைகள் உண்டாகும். அந்த வகையில் மே மாதம் 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அபிஜித் நட்சத்திரத்துடன் சேர்ந்த சஷ்டி திதி என்பது வருகிறது. பொதுவாக சஷ்டி திதி வரும் பொழுது மாலை நேரத்தில் முருக வழிபாட்டை மேற்கொள்வோம். அந்த மாலை நேரத்தில் தான் அபிஜித் நட்சத்திரமும் வருகிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. அபிஜித் நட்சத்திர நேரத்தில் எந்த தெய்வத்தை நாம் வழிபாடு செய்தாலும் அந்த தெய்வத்தின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும் என்பதால் முருகனின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு அபிஜித் நட்சத்திர நேரத்தை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

அபிஜித் நட்சத்திரம் வரக்கூடிய நேரம் மாலை 6:40 மணியிலிருந்து 7:04 மணிக்குள் முருகப்பெருமானின் இந்த ஒரு மந்திரத்தை 24 முறை கூற வேண்டும். இந்த மந்திரம் முருகப்பெருமானின் உச்சிஷ்ட மந்திரம் என்று கூறப்படுகிறது. அதி சக்தி வாய்ந்த மந்திர உச்சாடலில் பீஜ மந்திர உச்சாடலும் மிகவும் குறிப்பிடத்தக்கது. பீஜ மந்திர உச்சாடலை நாம் கூறும்பொழுது நம் மனதில் நாம் என்ன நினைத்தோமோ அது எளிதில் நிறைவேறும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகையில் பீஜ மந்திரமான முருகனின் உச்சிஷ்ட மந்திரத்தை அபிஜித் நட்சத்திர நேரத்தில் கூறுவதன் மூலம் கேட்ட வரத்தை முருகப்பெருமான் அருள்வார். இதற்கு மாலை நேரத்தில் எப்பொழுதும் சஷ்டி வழிபாட்டை எப்படி செய்வோம்? அதேபோல் செய்து முடித்து விட வேண்டும். பிறகு முருகப்பெருமானுக்கு முன்பாக அமர்ந்து இந்த மந்திரத்தை கூறினால் போதும்.

மந்திரம்

“ஓம் ஸ்ரீம் ஐயும் கிலியும் சவ்வும் மவ்வும் சரஹணபவா”

- Advertisement -

இதையும் படிக்கலாமே:செல்வ செழிப்புடன் வாழ பெருமாளுக்கு வைக்க வேண்டிய நெய்வேத்தியம்

முருகப்பெருமானின் பரிபூரணமான அருளை பெற்று கேட்ட வரத்தை கேட்டபடி பெறுவதற்கு இந்த ஒரு மந்திரத்தை முழுமனதோடு கூறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -