- Advertisement -

தினமும் வரும் துன்பத்திலிருந்து தப்பிக்க எளிமையான மந்திர வரிகள்.

மந்திரங்கள் என்பது வெறும் வார்த்தை மட்டும் அல்ல. அது ஒரு பொக்கிஷம். ஆகவே ஒரு வரி மந்திரமாக இருந்தாலும் அதை சாதாரணமாக நினைக்க வேண்டாம். உங்களுடைய வாழ்க்கையில் எதுவுமே சரியாக நடக்கவில்லை, எந்த தெய்வத்தை கும்பிட்டு பலன் இல்லை, என்று விரக்தியாக இருப்பவர்கள், இந்த வழிபாட்டை மட்டும் செய்யுங்கள்.

இந்த மந்திரத்தை மட்டும் சொல்லி வாருங்கள். இந்த பிரபஞ்சம் உங்களுக்கு நல்லதை மட்டும் செய்யும். உங்கள் தலையெழுத்தை மாற்றப்போகும் மந்திரத்தைப் பற்றி ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

தினமும் சொல்ல வேண்டிய பஞ்சபூத மந்திரம்

ஓம் சூர்யாயை நமஹ
ஓம் அக்னியாயை நமஹ

ஓம் வருணாய நமஹ
ஓம் வாயுவே நமஹ

- Advertisement -

ஓம் சோமாயை(நிவவு) நமஹ
ஓம் பூமாதேவியை நமஹ
ஓம் ஆகாஷ பகவானே நமஹ

நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு இந்த பஞ்சபூதங்களை தினந்தோறும் நினைத்து வழிபாடு செய்தாலே போதும். உங்கள் பிரச்சினையில் பாதி சரியாகி விடும். எனக்கு கடவுளின் மீது நம்பிக்கையே இல்லை. இறைவழிபாடு செய்யக்கூடிய வழக்கமே இல்லை என்பவர்கள் கூட, நமக்கு வாழ்வாதாரமாக இருக்கும் இயற்கை சூழலை நம்பிக்கையோடு வழிபட வேண்டும். துன்பத்திலிருந்து சுலபமாக விடுபடலாம்.

- Advertisement -

காலையில் எழுந்தவுடன் பூமாதேவியை தொட்டு வணங்குங்கள். குளிக்கும் போது தண்ணீருக்கு நன்றி சொல்லுங்கள். தண்ணீர் பருகும் போது வருண பகவானுக்கு நன்றி. இறைவழிபாடு செய்யும்போது சுத்தமான காற்றை சுவாசித்து வாயு பகவானுக்கு நன்றி செலுத்துங்கள். வீட்டிலிருந்து முதன்முறையாக வெளியே காலை எடுத்து வைக்கும் போது, அந்த வானத்திற்கு ஒரு நன்றி தெரிவியுங்கள்.

பூஜை அறையில் சூடம் ஏற்றி வழிபாடு செய்யும்போது அக்கினி பகவானுக்கு ஒரு நன்றியை தெரிவிங்கள். சின்ன சின்ன விஷயங்கள் தான் போன போக்கில் செய்யக்கூடிய வேலைகள் தான் ஆனால் இப்படி நம்ம உலகம் இயங்குவதற்கு காரணமாக இருக்கக் கூடிய இந்த பஞ்சபூதங்களையும் எவன் ஒருவன் தினமும் நினைத்து நன்றி தெரிவிக்கின்றானோ, அவனுடைய வாழ்க்கையில் பஞ்சபூதங்களும் நன்மை செய்ய தொடங்கிவிடும்.

நம்மை சுற்றி இருப்பது இந்த பஞ்சபூதங்கள் தான். ஆகவே இவைகளை வழிபட்டாலே போதும் நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றல் விலகி நேர்மறை ஆற்றல் வர தொடங்கிவிடும். சாதாரணமாக இந்த வழிபாட்டை தொடங்கி பாருங்கள். உங்களுடைய வாழ்க்கையில் நிச்சயம் நல்ல மாற்றம் தெரியும். இந்த வழிபாட்டிற்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரங்களும் உதவி செய்யும்.

இதையும் படிக்கலாமே: குலதெய்வத்தை வசியம் செய்யும் பொருள்

தினமும் ஒரு முறை இந்த மந்திரங்களை படிக்கும் போது கஷ்டங்கள் தானாக விலகுவதை உணருவீர்கள். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -