- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகுலதெய்வத்தை வசியம் செய்யும் பொருள்

குலதெய்வத்தை வசியம் செய்யும் பொருள்

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை பெற வேண்டும் என்றால் குலதெய்வ அருள் என்பது முக்கியம். குலதெய்வ அருளை பெற வேண்டும் என்றால் குலதெய்வ வழிபாட்டை நாம் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு குலதெய்வத்திற்கும் ஒவ்வொரு வகையான வழிபாட்டு முறைகள் இருக்கும். அந்த தெய்வத்திற்குரிய வழிபாட்டு முறையை முறையாக பின்பற்றி வழிபடுவதன் மூலம் குலதெய்வத்தின் அருளை நம்மால் பெற முடியும். நம் வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகள் விலகவும் நமக்கு நன்மைகள் ஏற்படும் குலதெய்வம் நம் வீட்டிற்கு வரவும் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

குலதெய்வ அருள் பெற

குலதெய்வத்தை முறையாக நாம் வழிபடுவதன் மூலம் குலதெய்வத்தின் அருளை நம்மால் பெற முடியும். குலதெய்வத்தின் அருளை நாம் பெற்றோம் என்றால் நம் வாழ்க்கையில் எந்தவித குறையும் இருக்காது. மற்ற பிற தெய்வங்களின் அருள் ஆசியையும் நம்மால் எளிதில் பெற முடியும். அப்படிப்பட்ட குலதெய்வத்தை ஆண் குலதெய்வம் பெண் குலதெய்வம் என்று பிரிப்போம்.

- Advertisement -

ஆண் குலதெய்வமாக இருக்கும் பட்சத்தில் அமாவாசை நாட்களில் வழிபடுவதும், பெண் குலதெய்வமாக இருக்கும் பட்சத்தில் பௌர்ணமி நாட்களில் வழிபடுவதும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. மாதம்தோறும் இந்த நாளில் சென்று நம்முடைய குல தெய்வத்தை நாம் வழிபட்டோம் என்றால் கண்டிப்பான முறையில் குலதெய்வத்தின் அருள் நமக்கு கிடைக்கும். குலதெய்வத்தை நம் வீட்டிற்கு வரவழைப்பதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான சூட்சுமமான பரிகாரத்தை பற்றி தான் பார்க்க போகிறோம்.

நாம் அனைவரும் கண்டிப்பாக முறையில் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வதற்காக குலதெய்வ கோவிலுக்கு செல்வோம். அங்கு செல்லும் பொழுது நம்மால் இயன்ற அளவு குலதெய்வத்திற்கு அபிஷேகத்திற்காக பொருட்களை வாங்கி தர வேண்டும். அடுத்ததாக அலங்காரம் செய்வதற்காக பன்னீர் ரோஜா மாலை, பெண் தெய்வங்களாக இருக்கும் பட்சத்தில் புடவை, ஆண் தெய்வங்களாக இருக்கும் பட்சத்தில் வேஷ்டி துண்டு இப்படி அவர்களை அலங்காரம் செய்வதற்காக பொருட்களை வாங்கி தர வேண்டும்.

- Advertisement -

இதோடு மிகவும் வாசனை மிகுந்த அத்தரை வாங்கி தர வேண்டும். அலங்காரம் அனைத்தும் நிறைவு செய்த பிறகு அத்தரை அங்கு இருக்கும் அர்ச்சகர் இடம் கொடுத்து குலதெய்வத்தின் மேல் பூச சொல்ல வேண்டும். நாமும் அத்தரை பூசிக்கொள்ள வேண்டும். இப்படி வாசனை மிகுந்த அத்தரை குலதெய்வத்திற்கு நாம் பூச தருவதன் மூலம் குலதெய்வம் மனமகிழ்ந்து நம் உடனே பின்தொடர்ந்து நம் வீட்டிற்கு வந்து விடுவார் என்று கூறப்படுகிறது.

நறுமணம் மிகுந்த பொருட்கள் அனைத்திலும் தெய்வத்தின் அம்சம் பொருந்தி இருக்கும் என்ற கூற்றுக்கிணங்க இப்படி வாசனை மிகுந்த அத்தரை வாங்கித் தருவதன் மூலம் குலதெய்வம் நம் வசமாகும் என்று கூறப்படுகிறது. ஏனோ தானோ என்று கடமைக்காக ஏதாவது ஒரு பொருளை வாங்கி கொடுக்க வேண்டும் என்று வாங்கி கொடுக்காமல் முழு மனதுடன் வாங்கி கொடுக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வைகாசி விசாக வழிபாடு

நம் குலத்தை காக்கும் குல தெய்வத்திற்கு வாசனை மிகுந்த பொருட்களை வாங்கித் தந்து நம்பிக்கையுடன் இப்படி வழிபடுவதன் முலம் குலதெய்வத்தின் அருளை நிச்சயம் என்று சொல்லப்படுகிறது.

சற்று முன்