- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

சென்னையில் மிக பிரம்மாண்ட திருப்பதி ஏழுமலையான் கோயில் – விவரம் உள்ளே

ஆன்மிகத்தை மையப்படுத்திய கலாச்சாரம் இந்திய கலாச்சாரம். அதிலும் ஆயிரக்கணக்கான கோயில்கள் இருக்கின்ற இந்திய நாட்டில் தினந்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வழிபடுகின்ற ஒரு அற்புதக் கோயிலாக திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் இருக்கிறது. திருப்பதி திருமலை கோயிலுக்கு நெடுந்தொலைவில் இருந்து வந்து வழிபட்டு செல்பவர்கள் ஏராளம். அத்தகைய பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்கிறது திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகம். அதன் ஒரு பாகமாக ஒவ்வொரு முக்கியமான நகரங்களிலும் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டும் பணி செய்து வருகிறது. அது குறித்து மேலும் பல தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சமீபத்தில் திருப்பதி திருமலை தேவஸ்தானம் நிர்வாகி செய்தியாளர்களை சந்தித்த போது தற்போதைய திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகம், திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிறப்பாக தரிசனம் செய்யவும் அவர்களின் வசதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே செயல்படுவதாக கூறினார். மேலும் இத்தனை ஆண்டுகாலம் இருந்து வி.ஐ.பி தரிசன முறை தற்போது நீக்கப்பட்டு அனைத்து பக்தர்களும் ஒன்றாக தரிசனம் செய்யும் முறையை பின்பற்றபடுவதாகவும், தற்போது ஒரு மணி நேரத்திற்கு 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரையிலான பக்தர்கள் ஏழுமலையான் தரிசனம் செய்து செல்வதாகவும், கோயிலின் அனைத்து விடயங்களிலும் பக்தர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தரப்படுவதாக கூறினார்.

- Advertisement -

மிக விரைவில் சென்னைக்கு அருகில் திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் ஒரு மிகப்பெரிய திருப்பதி வெங்கடாசலபதி கட்டுப்பட உள்ளதாக தெரிவித்தார். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது திருப்பதி திருமலை கோவிலுக்கு தமிழகத்திலிருந்து தான் அதிகளவு பக்தர்கள் வருகின்றனர் என்றும், எனவே அவர்களின் வசதிக்காக சென்னைக்கு அருகிலேயே உள்ள விரைவில் திருப்பதி சீனிவாசன் கோயில் கட்டப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த கோவில் கட்டுவது தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது அவர் கோயிலுக்கான நிலத்தை ஒதுக்குவதாக உறுதியளித்திருந்தார். எதிர்பாராதவிதமாக அவர் மறைந்ததால் இந்த கோவில் கட்டும் விடயத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. எனினும் தற்போதைய ஆந்திர முதல்வர், தமிழக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு சென்னையில் திருப்பதி திருமலை கோவில் கட்டுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என கூறினார்.

- Advertisement -

ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் தமிழக மற்றும் கேரள மாநில மக்கள் சுலபமாக வழிபாடு செய்வதற்கு வசதியாக கட்டப்பட்டிருப்பதாகவும், அதே போன்று ஒரு கோயிலையே தற்போது சென்னையில் தமிழக அரசு நிலம் ஒதுக்கிய பின், ஆந்திரப் பிரதேச முதல்வருடன் திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகம் கலந்தாலோசித்து கூடிய விரைவில் திருப்பதி பெருமாள் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் எனவும் கூறினார்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் கையில் எப்போதும் பணம் புரளச் செய்யும் தாந்திரீக பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Tirupati temple chennai in Tamil. It is also called as Tirupati perumal kovil in Tamil or Tirupati kovil in Tamil or Tirupati thirumalai devasthanam in Tamil or Tirupati elumalaiyan kovil in Tamil.

- Advertisement -