உங்கள் கையில் எப்போதும் பணம் புரள செய்யும் தாந்திரிக பரிகாரம்

panam

கடினமாக உழைப்பவர்களுக்கு செல்வம் கிடைக்கும் என்றாலும், நிரந்தரமில்லாத இந்த பூமியில் சிறிது காலம் வாழ்ந்தாலும் செல்வந்தராக வாழ்வதற்கு முன்வினை நற்பயன்கள் மற்றும் இறைவனின் அருள் ஆசிகள் வேண்டும். இவை இரண்டும் இல்லாதவர்களுக்கு செல்வ நிலை உயருவது சிறிது கடினம் தான் என்றாலும் நமது முன்னோர்கள் கூறிய சில தாந்த்ரிக பரிகார முறைகளை நம்பிக்கையுடன் கடைப்பிடிப்பதால் மிகப்பெரிய அளவில் செல்வந்தர்கள் ஆகாவிட்டாலும், தற்போது இருக்கின்ற பொருளாதார கஷ்டங்கள் நீங்கி வாழ்க்கையை சுலபமாக நடத்துவதற்கான செல்வத்தை பெற முடியும். அப்படிப்பட்ட ஒரு அற்புதமான தந்திரிக பரிகார முறை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

money

இந்தக் காலத்தில் பணத்தின் தேவை இல்லாத மனிதர் என்று எவரையும் நாம் கூற முடியாது ஒரு பக்கம் எதிர்காலத்திற்கான பணத்தை நாம் சேமித்தாலும், மறுபக்கம் அதற்கு ஈடாக ஏதாவது ஒரு வகையில் செலவு ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. மேலும் தொழில், வியாபாரங்களில் ஈடுபடுபவர்களுக்கு பணவரவுகளில் அதில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கின்றது. இப்படிப்பட்டவர்களுக்கு இறைவனின் அருளோடு பொருள் வளத்தை தரக்கூடிய ஒரு அற்புத பரிகாரம் தான் இந்த வெற்றிலை பரிகாரமாகும்.

ஒரு புதன் கிழமை அன்று ஐந்து வெற்றிலைகளை வாங்கிக் கொள்ள வேண்டும். அந்த வெற்றிகள் அனைத்தும் காம்புகளுடன் இருக்க வேண்டும். வெற்றிலையின் கீழ்நுனிப்பகுதி கூர்மையாக இருப்பது அவசியம். அந்த புதன் கிழமை அன்று மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள்ளாக உங்கள் பூஜை அறையில் வடக்கு திசையை நோக்கி அமர்ந்தவாறு, அந்த ஐந்து வெற்றிலைகளிலும் சிறிது அளவு பசு நெய்யினை நன்றாக இலைகள் முழுவதும் பரவலாக தடவ வேண்டும். பிறகு அந்த வெற்றிலைகளை ஒன்றன் மீது ஒன்றாக வைத்துக் கொள்ள வேண்டும்.

vetrilai

ஒரு கைக்குட்டை அளவிலான தூய்மையான பட்டுத்துணியை முன்னதாகவே வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. அந்த பட்டுத்துணியில் இந்த ஐந்து வெற்றி இலைகளையும் ஒன்றன் மீது ஒன்றாக வைத்து, அந்தப் பட்டுத் துணியை இந்த வெற்றிலைகள் முழுவதும் மறைக்குமாறு நான்கு புறமும் நன்றாக மூடி, ஒரு சிகப்பு நிற நூல் கொண்டு வெற்றிலை முடிந்திருக்கும் பட்டுதுணி மடிப்பை கட்டி முடிந்து கொள்ள வேண்டும். இதன் பிறகு இந்த வெற்றிலைகள் அடங்கிய பட்டுத்துணி முடிப்பை உங்கள் வீட்டில் பணம் வைக்கும் அலமாரியில் வைக்க வேண்டும். அல்லது உங்கள் தொழில், வியாபாரங்கள் நடைபெறும் இடங்களில் இருக்கும் பணப் பெட்டியில் வைக்க வேண்டும்.

- Advertisement -

money

வெற்றிலை என்பது மகா லட்சுமியின் அம்சமாகும். அந்த வெற்றிலையை கொண்டு செய்யப்படுகின்ற இந்த தாந்த்ரீக பரிகாரம் உங்கள் வீட்டில் எப்போதும் பணப் பற்றாக்குறை ஏற்படாமால் காக்கும். உங்கள் கைகளில் எப்போதும் பணம் புரண்டு கொண்டே இருக்கும் படி செய்யும். உங்கள் தொழில், வியாபாரங்களில் ஜனவசியம் ஏற்பட்டு அதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகம் கிடைத்து பொருளாதார உயர்வுகள் உண்டாகும். வாரந்தோறும் புதன் கிழமைகளில் பழைய வெற்றிலைகளை அப்புறப்படுத்திவிட்டு, புது வெற்றிலைகளை மேற்கூறிய தாந்திரீக முறையில் நெய் தடவி, அதே பட்டுத் துணியில் சிகப்பு நிற நூல் கொண்டு கட்டி வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
அத்தி வரதருக்கு கிடைத்த உண்டியல் வருமானம் எவ்வளவு?

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vetrilai nei pariharam in Tamil. It is also called as Vetrilai pariharam in Tamil or Selvam sera valigal in Tamil or Panam peruga pariharam in Tamil or Panam sera pariharangal in Tamil.