- Advertisement -

திருப்பதி கோயிலுக்கு இப்படியும் பல கோடி ரூபாய் லாபம் கிடைக்கிறது தெரியுமா?

திருப்பதி தேவஸ்தானம் அமைப்பு திருமலை திருப்பதி கோவிலின் மொத்த நிர்வாகத்தையும் இன்றுவரை சிறப்பாக கவனித்து வருகிறது. திருப்பதி கோவில் இந்தியாவிலேயே அதிகமாக உண்டியல் காணிக்கை வரும் கோயிலாக இன்றுவரை உள்ளது. திருப்பதியில் ஏலம் போகும் முடி கூட கோடிகளில் புரளுகிறது. அதனை பற்றிய பதிவு தான் இது.

பொதுவாக திருப்பதிக்கு பெருமாலை சந்திக்க போகும் அனைத்து பக்தர்களும் தங்களது வேண்டுகோளை பெருமாலிடம் வைப்பார்கள். அவர்கள் நினைத்த காரியம் நன்றாக நடக்கவேண்டும் என்பதற்காக அதற்கு காணிக்கையாக தங்களது தலையில் மொட்டை அடித்துக்கொள்வார்கள். அவ்வாறு காணிக்கையாக அளிக்கப்படும் முடிகள் ஒவ்வொரு ஆண்டும் ஏலம் விடப்படும்.

- Advertisement -

முடிகளின் நீளத்தினை வைத்து அதன் அடிப்படையில் முடிகள் 5 வகைகளாக பிரிக்கப்படுகின்றன. தரத்தின் அடிப்படையில் பிரிக்கப்படும் முடிகளின் நீளம் இதோ :

முதல் தரம் : 27 இன்ச் மற்றும் அதிகமான நீளம் கொண்டது.
இரண்டாம் தரம் : 19 முதல் 26 இன்ச் வரை நீளம் கொண்டது.
மூன்றாம் தரம் : 10 முதல் 18 இன்ச் வரை நீளம் கொண்டது.
நான்காம் தரம் : 5 முதல் 9 இன்ச் வரை நீளம் கொண்டது.
ஐந்தாம் தரம் : 5 இன்ச்சுக்கும் குறைவான நீளம் கொண்டது.

- Advertisement -

அவ்வாறு கடந்த வருடத்திற்கான முடிகள் இந்த ஆண்டு ஏலம் விடப்பட்டன. அவ்வாறு இந்தாண்டு 1 லட்சத்து 43 ஆயிரத்து 900 (1,43900)கிலோ முடிகளை இணையம் மூலம் ஏலம் விட்ட தேவஸ்தான நிர்வாகம் அதனை 11 கோடியே 17 லட்சத்துக்கு ஏலம் விட்டுள்ளது. இந்த ஏலத்தில் 5 தரமுடைய முடி வகைகள் மற்றும் வெள்ளைமுடிகள் ஆகிய அனைத்தும் அடங்கும்.

மொத்தம் 1,43,000 கிலோ முடிகளில் 1,35,000 கிலோ முடிகள் ஐந்தாம் தர முடிகள் ஆகும். அந்த முடிகள் கிலோ 36 ரூபாய் என்ற கணக்கில் 48.62 கணக்கில் ஏழாம் போகியுள்ளது. அதிகபட்சமாக இரண்டாம் தர முடிகள் மொத்தம் 3,100 கிலோ அதில் ஒரு கிலோ முடி 17,011 ரூபாய் என்ற கணக்கில் சுமார் 5 கோடியே 48 லட்சத்திற்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. இதில் நான்காம் தர முடிகள் 2,500 கிலோ ஏலம் போகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
திருப்பதி செல்ல முடியாதவர்கள் இங்கே சென்றாலே போதும்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Tirupati temple hair auction in Tamil. It is also called as Tirupati kovil in Tamil or Tirupati temple revenue in Tamil or Tirupati mudi kanikkai in Tamil.

- Advertisement -