- Advertisement -

மேஷம்:

சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். இன்று கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் தடைகள் ஏற்படக்கூடும்.

ஜூலை மாத ராசி பலன் படிக்க இங்கு கிளிக் செய்யவும்

- Advertisement -

ரிஷபம்:

அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும் சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சிலர் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பணவரவும் அதிகரிக்கும். உறவினர் வருகையும், அவர்கள் மூலம் சுபச் செய்தியும் கிடைக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும்.

உங்கள் மனம் கவந்தவரோடு பெயர் பொருத்தம் பார்க்க இதோ : Love calculator

- Advertisement -

மிதுனம்:

மனதுக்கு இனிய சம்பவங்களைக் கேட்பீர்கள். இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். நீண்டநாள்களாக நினைத்திருந்த குலதெய்வ பிரார்த்தனையை இன்று நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தந்தை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கடகம்:

- Advertisement -

வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிற்பகலுக்குமேல் தாய் வழி உறவினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்:

ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் அவசியம். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் ஏற்படக்கூடும்

கன்னி:

சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும். பிற்பகலுக்குமேல் உறவினர்கள் மற்றும் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்படும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

துலாம்:

உறவினரிடம் இருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். கோர்ட் வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் பணியில் உதவி செய்வார்கள். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படக்கூடும்.

விருச்சிகம்:

தாயின் ஆதரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். குருவருளால் மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறும் வாய்ப்பு உண்டு. தாய்வழி உறவினர்களின் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கக்கூடும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம்.

தனுசு:

சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சிலருக்கு முக்கிய பிரமுகர்களின் தொடர்பும் அதனால் ஆதாயமும் கிடைக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

மகரம்:

காரியங்களில் வெற்றி உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவு தருவார். சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

கும்பம்:

சிலர் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மீனம்:

அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்களின் ஒத்துழைப்புடன் எளிதாக முடிப்பீர்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். வாழ்க்கைத்துணை வழியில் பண உதவி கிட்டும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

இந்த நாளுக்குரிய ராசி பலன் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.

- Advertisement -