- Advertisement -

மேஷம்:

மேஷ ராசிக்கு இன்றைய ராசி பலன் படி மனம் உற்சாகமாகக் காணப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த விஷயம் சாதகமாக முடியும். இன்று உங்கள் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும்.

ரிஷபம்:

வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படக்கூடும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படக்கூடும்.

- Advertisement -

மிதுனம்:

மனம் உற்சாகமாகக் காணப்படும். இன்று நீங்கள் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

கடகம்:

மாலையில் நண்பர்களின் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். உறவினரிடம் இருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். மாலை நேரத்தில் நீண்டநாள்களாக சந்திக்காத நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். காலைப் பொழுது இதமாக விடியும். மனதுக்கு இனிய சம்பவங்களைக் கேட்க நேரிடும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு இருக்கும்.

- Advertisement -

சிம்மம்:

உற்சாகமான நாளாக அமையும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த விஷயம் சாதகமாக முடியும்.மிகவும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்களை சந்திக்க நேரிடும்.

கன்னி:

தேவையற்ற எண்ணங்களால் மனதில் இனம் தெரியாத கலக்கம் உண்டாகும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்க உகந்த நாள்.

- Advertisement -

துலாம்:

ஒரு சிலருக்குக் குடும்பத்துடன் புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். சிலருக்குத் தாய்மாமனின் மூலம் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தன லாபம் ஏற்படும்.

விருச்சிகம்:

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். புதிய காரியங்களை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

தனுசு:

வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். ஆனால், பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத்துணை வழியில் சிறுசிறு சங்கடங்கள் ஏற்பட்டு விலகும். பணப் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் கடன் வாங்கவும் நேரும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.

மகரம்:

சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். தாய்வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் மதிப்பும் மரியாதையும் கூடும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் ஆதாயம் கிடைக்கும்.
- Advertisement -

கும்பம்:

இன்று உங்கள் ராசிக்கு பலன் தரக்கூடிய கிரகங்கள் சுப கிரகங்களாக இருப்பதால், எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

மீனம்:

காலைப் பொழுது உற்சாகமாக விடியும். மனதுக்கு இனிய சம்பவங்களைக் கேட்பீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று புதிய முயற்சிகளைத் தொடங்கலாம்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -
Published by