- Advertisement -

மேஷம்:

அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் அலுவலக பணி சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்:

- Advertisement -

முயற்சிகள் வெற்றி அடையும். அரசு சம்மந்தமான வேலைகள் எளிதில் முடியும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி கிடைக்கும். கோபத்துடன் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று எதிலும் சற்று பொறுமை காப்பது நல்லது.

மிதுனம்:

இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். பிற்பகலுக்கு மேல் மனதில் சோர்வு ஏற்படக்கூடும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை யோசித்து துவங்குவது நல்லது.

கடகம்:

- Advertisement -

உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். தாய் வழி உறவுகளிடம் எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். முயற்சிகளில் வெற்றியும் எதிர்பாராத பண லாபமும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் இன்று ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

சிம்மம்:

அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. வெளிநாட்டில் இருந்து வரும் செய்தி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று மாலை புண்ணியத் தலங்களை தரிசிக்க வாய்ப்பு உண்டு.

கன்னி:

- Advertisement -

எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். பிற்பகலுக்கு மேல் சிலருக்கு காரியங்களில் தடை தாமதம் ஏற்படக்கூடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர்களிடம் இருந்து சுபச் செய்தி வரும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம்:

இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். ஒரு சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரியோர்களின் ஆசிகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும்.

விருச்சிகம்:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வழக்கில் தீர்ப்பு சாதகமாகக் கிடைக்கும். வெளியூர்களில் இருந்து சுபச் செய்திகள் வரும். வராது என்று நினைத்திருந்த கடன் திரும்பக் கிடைக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

உங்கள் ராசிக்கான சித்திரை மாத பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

தனுசு:

இன்று எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை விடுத்தது, வழக்கமான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும் அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

மகரம்:

உற்சாகமான நாள். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரண சேர்க்கையும் பணலாபமும் கிடைக்கும்.

கும்பம்:

இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். வழக்கில் தீர்ப்பு சாதகமாகக் கிடைக்கும். வெளியூர்களில் இருந்து சுபச் செய்திகள் வரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் சகோதாரர்களால் நன்மை ஏற்படும்.

மீனம்:

புதிதாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்குவது நல்லது. காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும். வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

இந்த நாளுக்குரிய ராசி பலன் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.

- Advertisement -