- Advertisement -

மேஷம்: அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும் சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சுறுசுறுப்பாக அனைத்து வேலைகளையும் முடித்து மேலதிகாரியின் பாராட்டுகளை பெறுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். இன்று சிற்சில தடைகள் ஏற்பட்டாலும் சாமர்த்தியமாகச் சமாளித்துவிடுவீர்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகக்கூடும்.

ரிஷபம்:

- Advertisement -


வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். சகோதர வகையில் அனுகூலம் ஏற்படும். அதிகாரிகளின் சந்திப்பும் காரிய அனுகூலமும் உண்டாகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களை தரிசித்து ஆசி பெறும் வாய்ப்பு ஏற்படும்.

மிதுனம்:


மனம் உற்சாகமாகக் காணப்படும். விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களின்போது கூடுதல் கவனம் தேவை.

கடகம்:

- Advertisement -


இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்களின் ஒத்துழைப்புடன் எளிதாக முடிப்பீர்கள். அரசு அதிகாரகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புராதனமான கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

உங்கள் ராசிக்கான சித்திரை மாத பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

சிம்மம்:

- Advertisement -


தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. அதிகாரிகள் சந்திப்பும் அவர்களால் காரிய அனுகூலமும் உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

கன்னி:


சிலர் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். தேவையற்ற எண்ணங்களைத் தவிர்க்கவும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது.

துலாம்:


இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நன்மை நடக்கும் நாளாக இருக்கும்.

விருச்சிகம்:


இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். பிற்பகலுக்கு மேல் பால்ய கால நண்பர்களை சந்திக்க நேரிடும். மலைபோல் வேலைகள் குவிந்தாலும் உற்சாகமாகவும் அழகாகவும் செய்துமுடிப்பீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மை உண்டாகும்.

தனுசு:


புதிய முயற்சி எதுவும் இன்றைக்கு வேண்டாம். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

மகரம்:

வீடு, மனை வாங்க நினைத்த முயற்சி சாதகமாக முடியும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் நல்ல தகவல் வந்து சேரும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் உண்டாகும்.

கும்பம்:


எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். உறவினர்கள் வருகை மனதுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

மீனம்:


வாகனத்தில் சிறிய அளவில் பழுது ஏற்பட வாய்ப்பு உண்டு. காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பழைய கடன் பாக்கி இன்று கிடைக்கும். அவசியத் தேவைகளுக்கு எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

இந்த நாளுக்குரிய ராசி பலன் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.

- Advertisement -