- Advertisement -
மந்திரம்

உங்கள் வீட்டின் தரித்திர நிலை நீங்கி செல்வம் கொழிக்க இதை துதியுங்கள்

செல்வம் என்கிற ஒன்று தான் அனைத்து பேதங்களையும் தகர்க்கிறது. மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத செல்வத்தை ஈட்ட பலரும் தொழில், வியாபாரங்கள் போன்றவற்றை செய்கின்றனர். இதில் லாபங்கள் அதிகம் பெறவும், நஷ்டங்கள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கும். மற்றும் சிலருக்கு நேரடி, மறைமுக எதிர்ப்புகள் அதிகம் இருக்கும். இவற்றையெல்லாம் நீக்கும் ஆற்றல் மிக்க “விஷ்ணு ஸ்தோத்திரம்” இதோ.

விஷ்ணு ஸ்தோத்திரம்

ஆதியாய் அனாதியாகி ஆதிமூலப் பொருளுமாகி
ஆலிலையில் பள்ளி கொண்ட ஆதி மூலமே -ஓம் நமோ
பக்தர்களைக் காக்க வேண்டி பத்துவித வேடங்கொண்டு பல
பலவாம் லீலை செய்த புண்ணிய மூர்த்தியே -ஓம் நமோ
மத்ஸயமாகி நீரில் மூழ்கி மறைகள் நான்கும் தூக்கி வந்து
மாபெரும் பணியைச் செய்த மாயா மூர்த்தியே -ஓம் நமோ

- Advertisement -

மூழ்கி மறைந்த மந்திர கிரியை மத்தாக்கி கடல் கடையமுங்கி
முதுகில் சுமந்து நின்ற மனோமோகனா -ஓம் நமோ
பன்றியாகி ரூபம் கொண்டு பாதாளத்தில் புகுந்து சென்று
பூமிதனை தூக்கி வந்த புண்ணிய ரூபனே -ஓம் நமோ
சின்னஞ்சிறு பக்தன் வாக்கை சத்தியமாக்கிக் காட்ட வேண்டி
சபையில் தூணில் சாடிவந்த சத்திய மூர்த்தியே -ஓம் நமோ

அகிலாண்ட மத்தனையும் அடியிரண்டால் அளந்த பின்பு
அசுரன் தலையில் அடியை வைத்த ஆதி தெய்வமே -ஓம் நமோ
பரசுதனைக் கையில் கொண்டு பரமன் ராமன் எதிரில் வந்து
பத்மனாபன் தனுஸைத் தந்த பார்க்கவ ராமா -ஓம் நமோ
மமதை கொண்ட ராவணனை மூலமுடன் அழிக்க வேண்டி
மானிடனாய் அவதரித்த மாயா மூர்த்தியே -ஓம் நமோ

- Advertisement -

அண்ணனாகி சேவை செய்ய ஆர்வமுடன் கலப்பை ஏந்தி
அரும்பணிகள் பலவும் செய்த ஆதிஜோதியே -ஓம் நமோ
கர்வம் கொண்ட கம்ஸன் தனை கூண்டுடனே அழிக்க
வேண்டி கிருஷ்ணாவதாரம் செய்த கருணாமூர்த்தியே -ஓம் நமோ
கலியுகத்தில் கஷ்டம் போக்க குதிரை மீதிலேறிக் கொண்டு
கல்கியாக வரப்போகும் சாகுந்த ராமா -ஓம் நமோ

கலியுகத்தில் மக்களுக்கு கைவல்யம் கையில் தர குருவாயூரில்
கோயில் கொண்ட கிருஷ்ண மூர்த்தியே -ஓம் நமோ
ஆணவத்தால் அறிவிழந்து அகந்தை கொண்ட எந்தனுக்கு
அறிவையூட்டி ஆதரிக்கும் ஆதிமூலமே -ஓம் நமோ
பண்ணும் பாட்டும் அறியாத பித்தன் எனைப் பாடவைத்து
பக்தனாக்கப் பாடுபடும் புண்ய ரூபனே -ஓம் நமோ

- Advertisement -

நாமம் நம்பி சொல்பவர்க்கு நற்கதியைத் தருவேன் என்று
நின்றலறி சத்தியம் செய்த நிகமவேத்யனே -ஓம் நமோ
நாமம் சொல்லும் இடந்தன்னிலே நித்ய வாசம் செய்வேனென்று
நாரதர்க்கு உறுதி தந்த நித்ய வஸ்துவே -ஓம் நமோ
பூர்ணாவதாரம் கொண்டு பதினாறு கலைகள் கொண்டு
பவனபுரம் வந்தடைந்த பூரண ரூபனே -ஓம் நமோ

பாற்கடலில் வீற்றிருக்கும் பரந்தாமன் ஆகிய ஆகிய மகாவிஷ்ணுவை போற்றும் ஸ்தோத்திரம் இது. இந்த ஸ்தோத்திரத்தை தினமும் காலையில் துதிப்பது நல்லது. புதன், சனி கிழமைகளிலும் பெருமாள் வழிபாட்டிற்குரிய மாத ஏகாதசி தினங்களிலும் காலையில் 9 முறை இந்த ஸ்தோத்திரம் துதிப்பதால் உங்கள் தொழில், வியாபாரங்களில் நஷ்டங்கள் ஏற்படாமல் தடுக்கும். வீட்டில் இருக்கும் தரித்திர நிலை நீங்கி வளமை பொங்கும். நேரடி, மறைமுக எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான ஆசை உண்டு. இந்த ஆசைகள் மற்றும் விருப்பங்கள் நிறைவேற அவர்கள் அனைவருமே இறைவனை வழிபடுகின்றனர். வைதாரையும் வரவேற்கும் வைகுண்டத்தின் அதிபதியான “மகாவிஷ்ணு” ஆகிய பெருமாள், தன்னை வழிபடும் பக்தர்களின் அனைத்தையும் நிறைவேற்றுபவர் ஆவார். அவரை போற்றி இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தை படிப்பதால் உங்களுக்கு மிகுந்த நன்மைகளை உண்டாக்கும்.

இதையும் படிக்கலாமே:
தோஷங்கள் போக்கும் ராகு கேது மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vishnu stotram in Tamil. It is also called as Vishnu manthiram in Tamil or Perumal thuthi in Tamil or Vishnu sloka lyrics in Tamil or Mahavishnu manthiram in Tamil.

- Advertisement -