தோஷங்கள் போக்கும் ராகு கேது மந்திரம்

ragu-kedhu

கிராமப்புறங்களில் யாரேனும் இருவர் எப்போதும் ஒன்றாக இணைந்து வம்பு வழக்குகளில் ஈடுபட்டால், அவர்களை “ராகுவும்-கேதுவும்” போல என்று கேலி செய்வார்கள். இந்த இருகிரகங்களும் ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை, ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறும். இந்த இருகிரகங்களும் விலங்குகளில் பாம்பை தொடர்பு கொண்டதாக இருக்கிறது. ஒரு சிலர் பாம்புகளை கொல்வதால் அவர்களுக்கு “நாக தோஷம்” ஏற்படுகிறது. அப்படிப்பட்டவர்கள் ராகு கேதுவுக்குரிய மந்திரம் அதை கூறி வழிபட, நாகத்தால் ஏற்பட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும். அதோடு ஜாதகத்தில் உள்ள ராகு கேது தோஷம் விலகும்.

Rahu mantra

ராகு கேது மந்திரம்

ஓம் தம் ரம் ராஹவே நமஹ
ஓம் ஹம் கேம் கேதவே நமஹ

ஆற்றல் மிகுந்த இம்மந்திரங்களை ராகு – கேது பெயர்ச்சி அன்றும், சனி மற்றும் செவ்வாய் கிழமைகளில், சிவன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள நவகிரக சந்நிதியில் உள்ள ராகு மற்றும் கேதுவின் சிலைகளுக்கு சிவப்பு நிற பூக்களை வைத்து, கருப்பு எள் மற்றும் உளுந்தை சமர்ப்பித்து, இம்மந்திரங்களை 108 முறை கூறி வழிபடுவதால் பிற உயிரினங்கள் குறிப்பாக பாம்புகளை கொண்ட தோஷங்கள் நீங்கும். நெடுநாட்களாக இருக்கும் நோய்கள் நீங்கும். உங்களின் வெளிநாடுகளுக்கு செல்லும் முயற்சிகளில் இருப்பவர்களுக்கு அதில் வெற்றி உண்டாகும்.

ஒன்பது கோள்களில் நிழல் கிரகங்களாக இருப்பது ராகு மற்றும் கேது கிரகம். சூரியன் மற்றும் சந்திர கிரகணத்தின் போது ஏற்படும் நிழல்களே இந்த ராகு மற்றும் கேது கிரகங்கள் என ஜோதிடத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த இரு கிரகங்களும் மற்ற கிரகங்களான குரு மற்றும் சனி போல வலிமையான கிரகங்களே ஆகும். சூரியன் சந்திரன் போன்ற கிரகங்களின் தாக்கத்தையே முறியடிக்கும் சக்தி ராகு கேதுவுக்கு உண்டு என பொதுவாக ஒரு கருத்து உள்ளது.

Rahu Ketu

நவகோள்களில் “செவ்வாய்” கிரகத்தின் தன்மையை ராகுவும், “சனி” கிரகத்தின் தன்மையை கேதுவும் கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு கிடைக்க வேண்டிய குழந்தை பாக்கியத்திற்கு இந்த இரு கிரங்கங்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டியது அவசியமாகும். இந்த ராகு கேது கிரகங்கள் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல இடங்களில் இருந்தால் அவர்களுக்கு பல சிறப்பான நன்மைகள் ஏற்படும். அப்படி இல்லாதவர்கள் ராகு கேதுவுக்குரிய இம்மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து அத்தகைய நன்மைகளை பெறலாம்.

இதையும் படிக்கலாமே:
செல்வத்தை அதிகரிக்கச் செய்யும் லட்சுமி குபேர மந்திரம்

English overview:
Here we have Rahu ketu mantra in Tamil. By chanting this mantra, one can get away from all kind of Rahu Ketu dhosam and Naga dhosam.