- Advertisement -
பொது பலன்

இந்த நாளில் எதை தொடங்கினாலும் வெற்றி உங்கள் பக்கம் தான்

ரிஷிகளாலும், முனிவர்களாலும் எழுதப்பட்ட ஜோதிட சாஸ்திரத்தில் பலருக்கும் உதவும் பல தகவல்கள் உள்ளன. அந்த வகையில் ஒருவர் பிறந்த நட்சத்திரத்தின் மூலம், அவருக்கு அதிஷ்டத்தை அள்ளித்தரக்கூடிய நாட்கள் எவை, எந்த நாளில் நல்ல காரியங்களை தொடங்குவது சிறந்தது இப்படி பல விடயங்களை எளிதில் கணிக்க முடியும்.

அஸ்வினி

- Advertisement -

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூசம், பூரம், பரணி, ரோகிணி, திருவாதிரை, பூராடம், திருவோணம், அஸ்தம், சுவாதி, சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திர நாட்களில் தொடங்கும் காரியங்கள் எந்த தடையும் இன்றி வெற்றி அடையும்.

பரணி

- Advertisement -

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிருத்திகை, மிருகசீரிசம், புனர்பூசம், ஆயில்யம், உத்திரம், சித்திரை, விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திர நாட்களில் நல்ல காரியங்கள் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கிருத்திகை

- Advertisement -

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம், உத்தரட்டாதி, அஸ்வினி ஆகிய நட்சத்திர நாட்களில் செய்யும் காரியங்கள் மூலம் நன்மை அடைவர்.

ரோகிணி

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், பூரம், சித்திரை, விசாகம், அவிட்டம், கேட்டை, பூரட்டாதி, ரேவதி, பரணி ஆகிய நட்சத்திர நாட்களில் நல்ல காரியங்களை செய்வது சிறந்தது.

மிருகசீரிஷம்

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திருவாதிரை, பூசம், அஸ்வினி, கிருத்திகை ஆகிய நட்சத்திர நாட்கள் அதிர்ஷ்டமாகும்.

திருவாதிரை

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி ஆகிய நட்சத்திர நாட்கள்  நல்ல காரியம் செய்வதற்கு உகந்தது.

புனர்பூசம்

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூசம், மகம், உத்திரம், சித்திரை, அனுஷம், மூலம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம் ஆகிய நட்சத்திர நாட்களில் நல்ல காரியங்களை தொடங்கினாள் வெற்றி நிச்சயம்.

பூசம்

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆயில்யம், பூரம் அஸ்தம், சுவாதி, கேட்டை, பூராடம், திருவோணம், ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை ஆகிய நட்சத்திர நாட்களில் தொடங்கும்  செயல்பாடுகள் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

ஆயில்யம்

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு  மகம், உத்திரம், சித்தரை, விசாகம், மூலம், உத்திராடம், அவிட்டம், அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம் ஆகிய நட்சத்திர நாட்கள் சிறப்பானவை.

மகம்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பூரம், அஸ்தம், ஸ்வாதி, அனுஷம், பூராடம், திருவோணம், சதயம், பரணி ரோகிணி, திருவாதிரை, பூசம் ஆகிய நட்சத்திர நாட்கள் அதிஷ்டத்தை தரும்.

பூரம்

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திர நாட்களின் நல்ல காரியங்களை செய்வது சிறந்தது.

உத்திரம்

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம் திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம் ஆகிய நட்சத்திர நாட்களில் நல்ல காரியங்களை செய்யலாம்.

அஸ்தம்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், பூரம் ஆகிய நட்சத்திர நாட்களில் சுபகாரியங்கள் செய்தால் நல்ல பலன் உண்டு.

சித்திரை

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுவாதி, அனுஷம், மூலம்,

உத்திராடம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, திருவாதிரை, பூசம், மகம், உத்திரம் ஆகிய நட்சத்திர நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

சுவாதி

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி, பரணி, புனர்பூசம், ஆயில்யம், பூரம் அஸ்தம் ஆகிய நட்சத்திர நாட்கள் ஏற்றது.

விசாகம்

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுஷம் மூலம், உத்திராடம், அவிட்டம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை பூசம் மகம், உத்திரம், சித்திரை ஆகிய நட்சத்திர நாட்களில் முக்கியமான காரியங்களை செய்தால் சிறந்த பலன் உண்டு.

அனுஷம்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கேட்டை, பூராடம், திருவோணம், சதயம், ரேவதி, பரணி, ரோகிணி, ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி ஆகிய நட்சத்திர நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

கேட்டை

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், பூசம், மகம், உத்திரம், சித்திரை, விசாகம் ஆகிய நட்சத்திர நாட்களில் தொடங்கும்  செயல்பாடுகள் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

மூலம்

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம் ஆகிய நட்சத்திர நாட்கள் அதிஷ்டமானவை.

பூராடம்

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை ஆகிய நட்சத்திர நாட்களில் தொடங்கும் காரியங்கள் எந்த தடையும் இன்றி வெற்றி அடையும்.

உத்திராடம்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, மிருகசீரிஷம், திருவாதிரை, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம் ஆகிய நட்சத்திர நாட்கள் சுப காரியம் செய்வதற்கு உகந்த நாட்களாகும்.

திருவோணம்

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம் ஆகிய நட்சத்திர நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

அவிட்டம்

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, புனர்பூசம், பூசம், மகம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம் ஆகிய நட்சத்திர நாட்களில் நல்ல செயல்களை தொடங்குவது சிறந்த பலனை தரும்.

சதயம்

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி, பூசம், ஆயில்யம், பூரம், விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம் ஆகிய நட்சத்திர நாட்கள் சிறந்தவை.

பூரட்டாதி

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருக சீரிஷம், ஆயில்யம், மகம், உத்திரம், அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம் ஆகிய நட்சத்திர நாட்களில் செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

உத்திரட்டாதி

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, மகம், பூரம், அஸ்தம், கேட்டை, பூராடம், திருவோணம், சதயம் ஆகிய நட்சத்திர நாட்களில் செய்யும் செயல்களால் நல்ல பலன் கிடைக்கும்.

ரேவதி

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி ஆகிய நட்சத்திர நாட்கள் அதிஷ்டம் தரக்குடைய நாட்களாகும்.

- Advertisement -
Published by