கேட்டை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

Astrology
- Advertisement -

‘கேட்டை’யும் வெண்கொற்றக் குடை போல் திகழும் மூன்று நட்சத்திரங்களின் தொகுப்புதான். விருச்சிக ராசியைச் சேரும். இதன் அதிபதி செவ்வாய். இதில் பிறப்பவர்களுக்கு முதலில் புதன் தசை நடக்கும். நட்சத்திர வரிசையில் 18-வது நட்சத்திரம். வடமொழியில் இதை ‘ஜ்யேஷ்டா’ எனக் குறிப்பிடுவர்.

ketai

‘கேட்டையில் பிறந்தவன் கோட்டையும் கட்டுவான்; கேட்டையும் விளைவிப்பான்’,  ‘கேட்டையில் பிறந்தால், சேட்டனுக்கு ஆகாது’ என்றெல்லாம் பழமொழிகள் உண்டு. பழமொழி என்பது ஒருவரது அனுபவத்தில் தோன்றிய வாசகம்தான். அதற்கு சாஸ்திரத்தில் ஆதாரம் இல்லை. உதாரணமாக, கேட்டை என்பது தமிழ்ச் சொல்; சேட்டன் என்பது மலையாளச் சொல். சேட்டன் என்றால், சகோதரன் என்று பொருள். எதுகை மோனையாக இருப்பதால் யாரோ, எப்போதோ உருவாக்கிய வாசகம் இது. இதையெல்லாம் உண்மையாகக் கருதி, பயப்படக்கூடாது.

- Advertisement -

விருச்சிக ராசியில் சந்திரன் நீசமாக இருப்பதால், இதில் பிறந்தவர்கள் தங்கள் மனத்துக்குப் பிடித்ததை அவசரமாகச் செய்வார்கள். இதனால் வாழ்வில் தவறுகள் ஏற்பட்டு, பின்னர் வருந்தும் சூழல் ஏற்படும். இந்த நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கென ஒரு வழிகாட்டியையோ குருவையோ தேர்ந்தெடுத்து, அவர்களின் வழிகாட்டுதல்படி நடந்தால், பல சிக்கல்களைத் தவிர்க்கலாம்; அல்லது, சமாளிக்கலாம்.

பொதுவான குணங்கள்:
இனிய சுபாவமும், அழகான தோற்றமும் கொண்டவர்கள். பொறுமைசாலிகள். ஏதேனும் பாதிப்பு நேரும்போது பயம், பதற்றம், கோபம் ஆகிய உணர்ச்சிகளுக்கு ஆளாவார்கள். சுகபோகிகள். பாசம் இருந்தாலும், வெளிப்படுத்தத் தெரியாதவர்கள். பிறரது அறிவுரையை விரும்பமாட்டார்கள்.
astrology-wheel

கேட்டை நட்சத்திரம் முதல் பாதம்:

- Advertisement -

இந்த பாதத்துக்கு அதிபதி குரு. அறிவு, திறமை, சாதிப்பதற்கான முயற்சி எல்லாம் இவர்களிடம் உண்டு. நல்லவர்கள், வல்லவர்கள் என்றாலும், உணர்ச்சிவசப்பட்டு அவசரமாகச் செயலாற்றி, அதனால் ஏற்படும் விளைவுகளால் வருத்தம் அடைவார்கள். எப்போதும் எதையாவது யோசித்துக் குழப்பம் அடைவது இவர்கள் வழக்கம். கோபம் அதிகமாக இருக்கும். மனத்தில் பட்டதை பயமில்லாமல் வெளிப்படையாகச் சொல்லிவிடுவார்கள். அதனால் பிறரால் அதிகம் விரும்பப்படாதவராக இருப்பார்கள். ஆனால், இவர்கள் நட்புக்கு முக்கியத்துவம் தருபவர்கள்.

கேட்டை நட்சத்திரம் இரண்டாம் பாதம்:

- Advertisement -

இதற்கு அதிபதி சனி. பொருளும் புகழும் தேடுபவர்கள். உணர்ச்சிவசப்பட்ட செயல்களால், பல தருணங்களில் பொருளையும் பணத்தையும் இழந்து தவிப்பார்கள். கோபம் இருக்கும். குடும்பத்தை நேசிப்பவர்கள். தாராள மனப்பான்மை இருக்கும். தேக சுகத்தை விரும்புபவர்கள். உடல் நலத்தில் கவனம் இல்லாதவர்கள்.
astrology wheel

கேட்டை நட்சத்திரம் மூன்றாம் பாதம்:

இதற்கும் அதிபதி சனி பகவானே! 2-ம் பாதத்துக்கு உரியவர்களுக்கான எல்லா குணங்களும் இவர்களிடமும் இருக்கும். ஆன்மிகத் தேடல், கலைகளில் ஈடுபாடு இருக்கும்.

கேட்டை நட்சத்திரம் நான்காம் பாதம்:

முதல் பாதத்தைப் போல் இவர்களுக்கும் அதிபதி குரு பகவான். நல்ல உடற்கட்டு, சுகபோகங் களில் பிரியம் இருக்கும். இவர்களது வாழ்வில் ரகசியம் மிகுந்திருக்கும். சாஸ்திர ஈடுபாடு, தெய்வபக்தி, பேச்சுத்திறன், எழுத்துத் திறமை எல்லாம் இருக்கும்.

மற்ற நட்சத்திரங்களின் குணங்களை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

English overview:
Here we have discussed about Kettai natchathiram characteristics in Tamil or Kettai nakshatra characteristics in Tamil. Kettai Nakshatra people usually looks beauty and they are good in nature. Kettai natchathiram Dhanusu rasi palangal in Tamil is given here completely. We can say it as Kettai natchathiram palangal or Kettai natchathiram pothu palan or, Kettai natchathiram kunangal for male and female in Tamil.

- Advertisement -