உத்திராடம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

astrology

உத்திராடம்

uthiraadam

நான்கு கால்களைக் கொண்ட கட்டிலின் இரண்டு கால் தடத்தில் அமைந்திருக்கும் இரண்டு நட்சத்திரங்கள் உத்திராடத்தில் அடங்கும். இதை ‘முக்கால் நட்சத்திரம்’ என்கிறது ஜோதிடம். நல்ல காரியங்களும் சுபகாரியங்களும் செய்ய உகந்தது என்பதால், ‘மங்கள விண்மீன்’ என்றும் இதைச் சிறப்பிப்பார்கள். இதன் முதல் பாதம் தனுசிலும் மற்ற மூன்றும் மகர ராசியிலும் அமைகின்றன.

பொதுக் குணங்கள்:

அறிவுப்பசி, ஆசாரம், தெய்வ பக்தி, தர்ம சிந்தனை, நேர்மை, வாய்மை மிகுந்தவர்கள். மனத்தில் பட்டதை சட்டென்று வெளிப்படுத்துவதால், சில தருணங்களில் பலருக்கும் வேண்டாதவர்கள் ஆகிவிடுவர்.நல்ல தோற்றம், பேச்சுத் திறமை, வெற்றியைத் தேடிச் செல்லும் முயற்சி ஆகியவை இவர்களின் பொதுவான குணங்கள்.
astrology wheel

உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதம்:

இதன் அதிபதி குரு. இவர்களிடம் சாஸ்திர அறிவு மிகுந்திருக்கும். நல்லதைப் பிறருக்குச் சொல்வதில் வல்லவர்கள்- நல்ல வழிகாட்டிகள். குரு பக்தி கொண்டவர்கள். பூஜை புனஸ்காரத்தில் ஈடுபாடு கொண்டவர்கள்.

உத்திராடம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்:

இதன் அதிபதி சனி. ஆசை மிகுந்தவர்கள். ஊதாரித்தனமாக பணத்தைச் செலவழிப்பவர்கள். பிறர் கஷ்டங்களை உணராதவர்கள். அதிகாரம் செலுத்துவதில் விருப்பம் மிக்கவர்கள். சாப்பாட்டுப் பிரியர்கள். பழி வாங்கும் இயல்புடையவர்கள். தோல்வியைத் தாங்க முடியாதவர்கள்.
astrology-wheel

உத்திராடம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்:

இதற்கும் சனிபகவானே அதிபதி. 2-ம் பாதத்துக்கு உரியவர்களின் குணங்கள் அனைத்தும் இவர்களுக்கும் உண்டு. தீவிர பக்தி செய்து, உலகியல் பலன்களையும் ஐஸ்வர்யங்களையும் அடைய விரும்புபவர்கள். பிடிவாதக்காரர்கள். பிறரை மதிக்கத் தெரியாதவர்கள். தங்களது இயல்புகளை மாற்றிக்கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை சிறக்கும்.

உத்திராடம் நட்சத்திரம் நான்காம் பாதம்:

இதன் அதிபதி குரு. கருணையும், தர்ம சிந்தனையும் இவர்களது இயல்பு. துணிச்சல் மிக்கவர்கள். தர்மத்தைக் கடைப்பிடிப்பதில் தீவிரமானவர்கள். தீமையை எதிர்த்துப் போராடுபவர்கள். பிறர் நலம் கருதி வாழ்பவர்கள்.

மற்ற நட்சத்திரங்களின் குணங்களை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இது போன்ற மேலும் பல தகவல்களை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.