- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

உலகில் தோன்றிய முதல் சிவன் கோவில் எங்குள்ளது தெரியுமா?

உலகம் முழுக்க பல்லாயிரம் சிவாலயங்கள் இருக்கின்றன. அனால் உத்திரகோசமங்கை என்னும் திருத்தலமே உலகில் தோன்றிய முதல் சிவன் கோவிலாக கருதப்படுகிறது.

நாம் கண்ட பழம் பெரும் கோவில்கள் அனைத்திலும் நவகிரகங்கள் 9 இருக்கும். அனால் இந்த கோவிலில் சூரியன், சந்திரன், செவ்வாய் என மூன்றே மூன்று கிரகங்கள் தான் உள்ளன. காரணம் என்ன வென்றால், நவகிரகங்கள் 9 என்று அறியப்படாத காலத்திற்கு முன்பே கட்டிய கோவில் இது. அப்படியானால் இதன் பழமையை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேசுவரம் செல்லும் வழியில் உள்ள இக்கோவில் எப்போது கட்டப்பட்டது என்பதை அறிய முடியவில்லை. மகா பாரதப் போர் கிமு 3100 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததாக கருதப்படுகிறது. அதன் பின்பே கலியுகம் பிறந்தது. அனால் கலியுகம் பிறப்பதற்கு முன்பே இந்த கோவில் இருந்துள்ளது. ஏன் மகாபாரதத்திற்கு முந்தைய காலமான இராமாயணக் காலத்திலும் கூட இந்த கோவில் இருந்ததற்கான கல்வெட்டு குறிப்புக்கள் உள்ளன.

இலங்கைவேந்தன் ராவணனின் மனைவி மண்டோதரிக்குக் காட்சி தருவதற்காக இங்கிருந்து சிவன் இலங்கைக்கு சென்றுவந்ததாக கூறப்படுகிறது. சுவாமி சன்னதியின் சுவற்றில் மண்டோதரி பெயர் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. அதோடு மிக சிறந்த சிவ பக்தனான ராவணனுக்கும் மண்டோதரிக்கும் இங்கு தான் திருமணம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

பொதுவாக எந்த சிவாலயங்களிலும் சிவனுக்கு தாழம் பூவை சார்த்தி வழிபடுவதில்லை. நான் முகனுக்கு ஆதரவாக, அவர் சிவனின் முடியை கண்டதாக தாழம்பூ பொய் சாட்சி கூறியதே இதற்கு காரணம். அனால் இந்த கோவிலில் மட்டும் சிவனுக்கு தாழம் பூவை சார்த்தி வழிபாடு நடக்கிறது. ஆகையால் பிரமனும் பெருமாளும் சிவனின் அடி முடி தேடி சென்ற காலத்திற்கு முன்பே இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. அதனாலேயே இங்கு தாழம்பூ வழிபாடு விடுபடாமல் நடக்கறது என்பதை அறியலாம்.

இங்குள்ள நடராசருக்கு வருடம் ஒரு முறை மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். அன்று மட்டும் அவரைக்களைந்த திருக் கோலத்தில் தரிசிக்கலாம். அதன் பிறகு அவர் சந்தனக் காப்பிட்ட கோலத்தில் தான் இருப்பார். ஆண்டு முழுக்க ஆடல் வல்லான் திரு மேனியில் இருந்த சந்தனம் களையப் பட்ட பின்பு அதை வாங்குவதற்காக இங்கு பக்தர்கள் போட்டி போடுவார்கள்.

கோவிலின் பெயர் காரணம்.
(ருத்திரன்) + கோசம் + மங்கை = உத்தர கோசமங்கை. அதாவது மங்கையான பார்வதி தேவிக்கு உத்திரன்(சிவன்) வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம்.

மிகவும் சக்திவாய்ந்த இந்த சிவன் கோயிலிற்கு சென்று வந்தால் வாழ்வில் நல்ல மாற்றங்கள் இருக்கும் என்பது நம்பிக்கை.

- Advertisement -