- Advertisement -
சமையல் குறிப்புகள்

ஸ்டார் ஹோட்டல் ஸ்டைல்ல, சூப்பரான வெஜிடபிள் புலாவ்! கஷ்டப்படாம 20 நிமிஷத்துல செஞ்சு முடிச்சிடலாம்.

கொஞ்சம் பெரிய பெரிய ஹோட்டலில், வெள்ளை நிறத்தில் வெஜிடபிள் புலாவ் என்ற ஒரு டிஷ் கிடைக்கும். காய்கறிகள் போட்டு பாசுமதி அரிசியில், பார்ப்பதற்கு கண்ணை பறிக்கும் அளவிற்கு மசாலா பொருட்கள் குறைவாக சேர்க்கப்பட்டு, செய்யக்கூடிய ஒரு ரெசிபி தான் இது. நிறைய பேருக்கு இது ஹோட்டலில் சாப்பிட மிகவும் பிடிக்கும். வீட்டில் முயற்சி செய்தால் அதே சுவையில் வராது. ஹோட்டலில் குறிப்பாக, ஸ்டார் ஹோட்டலில் கொடுக்கப்படும் அதே சுவையில், தான் இன்று இந்த வெஜிடபிள் புலாவை நாமும் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

வெள்ளை நிற வெஜிடபிள் புலாவ் செய்ய தேவையான பொருட்கள்:
கேரட்  – 50 கிராம், பீன்ஸ் – 50 கிராம், பச்சைப் பட்டாணி – 50 கிராம், உருளைக்கிழங்கு – 50 கிராம், ஒரு அளவிற்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பெரிய வெங்காயம் – 1 நீள்வாக்கில் வெட்டியது, தக்காளி பழம் – 1 பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் – 4 லிருந்து 5 குறுக்கே கீனியது.

- Advertisement -

சீரகம் – 1 ஸ்பூன், பட்டை – 1 துண்டு, கிராம்பு – 3, ஏலக்காய் – 3, கல்பாசி – ஒரு சிறிய துண்டு. தாளிப்பதற்கு எண்ணெய் – 3 ஸ்பூன், நெய் – 1 ஸ்பூன். தேவையான அளவு – உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், பாஸ்மதி அரிசி – 1 கப்.

அடுப்பில் ஒரு குக்கரை வைத்துக்கொள்ளுங்கள். அதில் எண்ணெய் நெய் ஊற்றி சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு, கல்பாசி, இவைகளைப் போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை  போட்டு கண்ணாடி பதத்தில் வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்பு தக்காளி பழம் சேர்த்து 2 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வதக்க வேண்டும். கூடவே, பச்சை மிளகாயையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இதோடு பொடியாக நறுக்கிய காய்கறிகளையும் சேர்த்து, 2 சிட்டிகை உப்பு போட்டு, ஒரு நிமிடம் வதக்கினால் போதும். அதன் பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன் சேர்த்து, மீண்டும் 2 நிமிடங்கள் வதக்கி, ஒரு டம்ளர் அளவு பாசுமதி அரிசிக்கு 1 1/2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, நன்றாக கொதிக்க வைத்த பின்பு, 20 நிமிடங்கள் ஊற வைத்த பாசுமதி அரிசியை போட்டு, புலாவை நன்றாக கொதிக்க விட வேண்டும்.

இந்த சமயத்தில் உப்பு சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். குக்கரில் இருக்கும் தண்ணீர் 80% வற்றிய பின்பு குக்கரை மூடி போட்டு விசில் போட்டு, அடுப்பை சிம்மில் வைத்து, ஒரு விசில் வர வேண்டும். அதன் பின்பு, விசில் அடங்கியவுடன் குக்கரை திறந்தால் மிதமான மசாலாவோடு, கமகம வாசத்தோடு வெள்ளை புலாவ் உங்களுக்கு கிடைத்திருக்கும். இறுதியாக மல்லி தழையை தூவி பரிமாற வேண்டியது தான்.

- Advertisement -

இந்த வெள்ளைப் புலாவுக்கு சைட் டிஷ் ஆக காரசாரமான பன்னீர் கிரேவி அல்லது மஸ்ரூம் கேள்வியை பரிமாறலாம். நீங்கள் அசைவப் பிரியராக இருந்தால், சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி வைத்து கூட இந்த சுவையான புலாவை சுவைத்துப் பாருங்கள். வயிறு நிறைவாக இருக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருக்கா? நாளைக்கு மதியம் ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே
இந்த 2 செடிகளை தனித்தனியாக வளர்த்தால் அதிர்ஷ்டம் எட்டிக்கூட பார்க்காது. ஒன்றோடு ஒன்று பக்கத்தில் வைத்துப் பாருங்களேன்! அதிர்ஷ்டலட்சுமியே உங்களிடம் வந்து அதிர்ஷ்டத்தை கடன் கேட்பாள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -