இந்த 2 செடிகளை தனித்தனியாக வளர்த்தால் அதிர்ஷ்டம் எட்டிக்கூட பார்க்காது. ஒன்றோடு ஒன்று பக்கத்தில் வைத்துப் பாருங்களேன்! அதிர்ஷ்டலட்சுமியே உங்களிடம் வந்து அதிர்ஷ்டத்தை கடன் கேட்பாள்.

thulasi
- Advertisement -

சில விஷயங்களை தனியாக வைத்தால் நமக்கு வரக்கூடிய அதிர்ஷ்டம் குறைவாக இருக்கும். ஒரு விஷயத்தோடு மற்றொரு விஷயத்தை சேர்த்து வைக்கும் போது அதனுடைய பலன் இரட்டிப்பாக நமக்குக் கிடைப்பதை நாம் உணர்ந்திருப்போம். உதாரணத்திற்கு வெற்றிலை பாக்கையும் சேர்த்து வைக்கும் போது இரட்டிப்பு பலன். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ஆசிர்வாதம் செய்யும்போது இரட்டிப்புப் பலன். அந்தவகையில் இரண்டு ஜோடி செடிகளை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த நான்கு செடிகளை தனித்தனியாக நம் வீட்டில் வைத்திருந்தாலே ஏகப்பட்ட அதிர்ஷ்டம் நம் வீட்டை தேடி தரும் என்று சொல்கிறது சாஸ்திரம். இதுபோக இந்த செடிகளை ஜோடிஜோடியாக வைத்துப் பாருங்கள். அதன் பின்பு உங்கள் வீட்டில் நடக்கும் அதிசயத்தை.

thulasi-madam

நமக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகும் அந்த நான்கு ஜோடி செடிகள் என்னென்ன? அந்தச் செடிகளை நம்முடைய வீட்டில் ஜோடி ஜோடியாக வைப்பதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன? என்பதைப் பற்றி இப்போது தெரிந்துகொள்வோமா?

- Advertisement -

நம்முடைய வீட்டில் துளசி செடி இருப்பதாக வைத்துக் கொள்வோம். துளசி செடியை தனியாக பூஜை செய்வதை விட, அந்த துளசி செடிக்கு அருகில் நெல்லி மர குச்சியை வைத்து பூஜை செய்தாலோ அல்லது அந்த துளசி செடியை நெல்லிமரத்தடி நிழலில் வைத்தாலோ நமக்கு கிடைக்கக்கூடிய பலன் இரட்டிப்பாகும். மகாலட்சுமியின் மனம் குளிர வேண்டும் என்றால், மகாலட்சுமி நிறைவாக ஆசீர்வதித்தை இரட்டிப்பாக நமக்கு தர வேண்டும் என்றால், துளசிச் செடியை நெல்லி மரத்தடியில் வைப்பது மிகவும் விசேஷமானது.

keezhanelli

உங்களுடைய வீட்டில் பெரிய அளவில் நெல்லி மரத்தை வளர்க்க முடியாது என்றாலும் பரவாயில்லை. இரண்டு சிறிய தொட்டியை வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு தொட்டியில் நெல்லி செடியையும், மறு தொட்டியில் துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அந்த இரண்டு தொட்டிகளை தனித்தனியாக பிரித்து வைக்காமல், ஒன்றோடு ஒன்று இணைந்தபடி துளசிச்செடி அருகிலேயே, நெல்லி மர தொட்டியை வைத்து துளசிச் செடியை வழிபடும் போது நெல்லி செடியையும் வழிபட்டு பாருங்கள். வாழ்வில் எதிர்பாராத மாற்றங்கள் எதிர்பாராத திருப்பங்கள் நிச்சயம் உங்களைத் தேடி வரும்.

- Advertisement -

இரண்டாவது ஜோடி செடிகள். கற்பூரவள்ளி நமது வீட்டின் முன் வளர்த்தால் மிகவும் நல்லது. அந்த வாசத்திற்கு கொசு தொல்லை இருக்காது. பூச்சி பொட்டுகள் வீட்டில் நுழையாது. இதோடு மட்டுமல்லாமல், இந்த கற்பூர செடியின் வாசனைக்கு, நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் சக்தி உள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது.

karpooravalli

கற்பூரவள்ளிக்கு இணையாக சொல்லப்பட்டுள்ளது தொட்டாசிணுங்கி செடி. தொட்டாசிணுங்கி செடியை பார்த்துவிட்டு செல்லக்கூடிய எந்த காரியமாக இருந்தாலும் அது கட்டாயம் ஜெயம் தான். இப்படிப்பட்ட அதிர்ஷ்டங்களை கொண்ட இந்த இரண்டு செடிகளையும் முடிந்தால் ஒரு பெரிய தொட்டியில் ஒன்றாகவே வளர்க்கலாம். முடியவில்லை என்றாலும் பரவாயில்லை.

thotta-sinungi1

இரு சிறு சிறு தொட்டிகளில் வளர்த்து, அந்த இரண்டு செடிகளை ஜோடியாக வைத்துப் பாருங்கள். நீங்கள் வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் போது, அந்த இரண்டு செடியையும் பார்த்துவிட்டு கிளம்ப வேண்டும். வீட்டில் இருக்கக்கூடிய பலவகையான கஷ்டங்களுக்கு இந்த இரண்டு ஜோடிச் செடிகள் நிச்சயம் ஒரு வழியைக் காட்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -