
கத்திரிக்காயை வைத்து சமைக்கும் உணவுகளில் இந்த எண்ணெய் கத்திரிக்காய் காரக்குழம்பு பலரின் பிடித்தமான உணவாக இருக்கும். கத்திரிக்காய் பிடிக்காது எப்பவர்கள் கூட எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு என்றால் கொஞ்சமாவது சாப்பிட்டு பார்க்கலாம் என்று நினைப்பார்கள். அப்படியான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பை இந்த மசாலா சேர்த்து செய்யும் போது இன்னும் சுவை கூடுதலாக இருக்கும். வாங்க அது என்ன மசாலா எப்படி அதை சேர்த்து எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு வைப்பது எப்படி இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
முதலில் இந்த குழம்புக்கு ஒரு மசாலாவை அரைத்து விடுவோம். அதற்கு அடுப்பில் கடாய் வைத்து 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானவுடன், 10 சின்ன வெங்காயம், 5 பல் பூண்டு, கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து வெங்காயம் வேகும் வரை வதக்கிய பிறகு அதை எடுத்து தனியாக தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அதே கடாயில் மீதம் இருக்கும் எண்ணெயில் கால் கிலோ கத்திரிக்காயை நாலாக கீறல் மட்டும் போட்டு எண்ணெயில் சேர்த்து முக்கால் பாகம் வரை வதக்கி அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் ஒரு சின்ன எலுமிச்சை பழ அளவு புளியை ஊற வைத்து கரைத்து தண்ணீரை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதற்குள்ளாகவே நாம் ஏற்கனவே அரைத்து வைத்த வெங்காயம், பூண்டு ஆறி இருக்கும். அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் 1ஸ்பூன் சோம்பு, 1 ஸ்பூன் சீரகம், 1/2 ஸ்பூன் மிளகு, மிளகாய் தூள் 1 1/2 டீஸ்பூன், தனியாத் தூள் 3 டீஸ்பூன் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளுங்கள்.
அடுப்பில் மீண்டும் அதே கடாய் வைத்து மீதம் இருக்கும் எண்ணெயுடன் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றிய பிறகு 1ஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் வெந்தயம், 1 கொத்து கருவேப்பிலை, 5 சின்ன வெங்காயம், 5 பல் பூண்டு, 1/4 டீஸ்பூன் பெருங்காயத் தூள், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த் தூள் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கருகி விடாமல் வதக்கிக் கொள்ளுங்கள். இவையெல்லாம் வதங்கிய பிறகு ஒரு பெரிய தக்காளியை நறுக்கி அதையும் இத்துடன் சேர்த்து தக்காளி குழைந்து வரும் வரை மிதமான தீயில் வதக்கிக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக தக்காளி முழுவதுமாக குழைந்து வதங்கிய பிறகு நாம் ஏற்கனவே அரைத்து வைத்த வெங்காய மசாலா பேஸ்ட்டை இதில் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள். அதன் பிறகு வடிகட்டி எடுத்து வைத்து புளிக்கரைசலை இத்துடன் சேர்த்து ஒரு ஸ்பூன் உப்பையும் சேர்த்து நன்றாக கலந்து நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது அரை முடி தேங்காயை அரைத்து பால் மட்டும் ஒரு கப் அளவு எடுத்து அதையும் இந்த குழம்பில் சேர்த்து விடுங்கள். இப்பொழுது மூடி போட்டு குழம்பை 10 நிமிடம் வரை மிதமான தீயில் கொதிக்க விடுங்கள்.
இதையும் படிக்கலாமே: பீட்ரூட்டில் இப்படி வரை செய்து கொடுத்தால் யார் தான் பீட்ரூட்டை வேண்டாம் என்று சொல்லுவார்கள். அசத்தலான மொறுமொறு பீட்ரூட் வடை ரெசிபி இதோ உங்களுக்காக.
குழம்பு நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வந்த பிறகு வதக்கி வைத்த கத்தரிக்காயை இதில் சேர்த்து ஒரு சிறிய துண்டு வெல்லத்தை சேர்த்த பிறகு மீண்டும் ஒரு முறை கொதித்தவுடன் கொஞ்சமாக கறிவேப்பிலை இலையை மேலே தூவி குழம்பை இறக்கி விடுங்கள். சுடச்சுட சாதத்துடன் இந்த குழந்தை போட்டு சாப்பிட்டு பாருங்க சுவை அட்டகாசமாக இருக்கும்.