- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்பீட்ரூட்டில் இப்படி வடை செய்து கொடுத்தால் யார் தான் பீட்ரூட்டை வேண்டாம் என்று சொல்லுவார்கள். அசத்தலான...

பீட்ரூட்டில் இப்படி வடை செய்து கொடுத்தால் யார் தான் பீட்ரூட்டை வேண்டாம் என்று சொல்லுவார்கள். அசத்தலான மொறுமொறு பீட்ரூட் வடை ரெசிபி இதோ உங்களுக்காக.

- Advertisement -

பீட்ரூட், யாருக்குமே பிடிக்காத ஒரு காய். இதை பொரியல் செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருமே சாப்பிட மாட்டார்கள். ஆனால் இதை சாப்பிட வைக்க பல ஐடியாக்கள் உள்ளது. அதில் ஒன்றுதான் இன்று நாம் பார்க்க போகும் இந்த வடை ரெசிபி. மொறுமொறுப்பாக இப்படி பீட்ரூட் மசால் வடை செய்து கொடுத்தால் போதும் எல்லோரும் எனக்கு ஒன்று உனக்கு ஒன்று என்று கேட்டு கேட்டு போட்டி போட்டு வாங்கி சாப்பிடுவார்கள். ருசி தரும் ஆரோக்கியம் தரும் இந்த பீட்ரூட் வரையை பக்குவமாக சுலபமாக எப்படி செய்வது. தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

செய்முறை

இதற்கு முதலில் நமக்கு இரண்டு பருப்புகளை ஊற வைக்க வேண்டிய வேலை உள்ளது. வடை செய்வதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக ஒரு பாத்திரத்தில் 1/4 கப் துவரம்பருப்பு, 1/4 கப் கடலைப்பருப்பு, போட்டு நன்றாக கழுவி பிறகு நல்ல தண்ணீரை ஊற்றி 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

- Advertisement -

இந்த பருப்பு வகைகள் நன்றாக ஊறியதும், தண்ணீர் ஒரு சொட்டு கூட இல்லாமல் நன்றாக வடித்து விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போடவும். இதோடு வரமிளகாய் – 4, சோம்பு – 1 ஸ்பூன், இஞ்சி தோல் சீவியது – 1 இன்ச், உப்பு – தேவையான அளவு, போட்டு இதை அரைக்க வேண்டும். கொரகொரப்பாக திக்காக இந்த மாவை அரைக்க வேண்டும். தண்ணீர் ஊற்றக்கூடாது. அரைத்த இந்த மாவை தனியாக ஒரு பௌலில் மாற்றிக் கொள்ளுங்கள்.

பௌலில் இருக்கும் இந்த மாவோடு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது – 1, மீடியம் சைஸ் பீட்ரூட் துருவல் – 1, பொடியாக நறுக்கிய – கருவேப்பிலை கொத்தமல்லி தழைகளை, போட்டு உங்கள் கையை கொண்டு இந்த மாவை நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். மசால்வடை மாவு பக்குவத்திற்கு ஒரு மாவு தயாராக ஆகி இருக்கும். ஒரு வேலை பக்குவம் தவறி மாவு கொஞ்சம் தள தளவென தண்ணீராக ஆகிவிட்டது என்றால் பயப்பட வேண்டாம். இதோடு கொஞ்சம் அரிசி மாவு சேர்த்து பிசைந்தால் மாவு செட் ஆகி விடும்.

- Advertisement -

தயார் செய்த இந்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக அழுத்தம் கொடுத்து பிடித்து, உள்ளங்கைகளில் வைத்து அழுத்தி மசால் வடை போலவே தட்டி தட்டி சுட சுட இருக்கும் எண்ணெயில் விட்டு மிதமான தீயில் பொன்னிறம் வரும் வரை சிவக்க விட்டு எடுத்தால் சூப்பரான பீட்ரூட் வடை தயார். கூடவே ஒரு தேங்காய் சட்னி இருந்தால் இன்னும் கூடுதல் ருசி கிடைக்கும். ஈவினிங் டீ கூட இதை ஸ்னாக்ஸா பரிமாறி பாருங்கள். ஆரோக்கியமான இந்த வடை வயிற்றுக்குள் இறங்குவதே தெரியாமல் இறங்கும்.

இதையும் படிக்கலாமே: ஸ்டார் ஹோட்டலுக்கு போனாலும் இந்த ஸ்நாக்ஸை சாப்பிட முடியாது. உருளைக்கிழங்கை வைத்து ஐந்தே நிமிடத்தில் சூப்பரான ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்வது எப்படி?

குழந்தைகள் பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பும் போது இந்த வடையை கட்டாயம் செய்து கொடுக்கலாம். ஆரோக்கியம் நிறைந்த இந்த ரெசிபி உங்களுக்கு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்