
ஒவ்வொரு மாதமும் நமக்கு நல்ல மாதமாக அமைந்து விடாதா? நம் வாழ்க்கையில் நன்மைகள் நடைபெறாதா? என்று பலரும் பல கேள்விகளுடன் ஒவ்வொரு மாத பிறப்பையும் எதிர்நோக்கி காத்திருப்பார்கள். சென்ற மாதம் இருந்த கஷ்டங்கள் நீங்கி இந்த மாதத்திலாவது நிம்மதியாக இருக்க வேண்டும் என்று கடவுளை வணங்குபவர்களும் பலர் இருக்கின்றார்கள். அந்த வகையில் ஐப்பசி மாதம் யோகமான மாதமாக இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஒவ்வொரு நபரும் அவர்களுடைய ராசிக்கேற்றவாறு எந்த தெய்வத்தை வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒவ்வொருவருக்கும் குலதெய்வம் என்ற ஒன்று இருக்கும். குலதெய்வத்தோடு சேர்த்து தங்களுக்கென்று இஷ்ட தெய்வமும் இருக்கும். இவர்கள் இருவரையும் முழுமனதோடு தினமும் வழிபாடு செய்யும்பொழுது பல நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. இதோடு சேர்த்து ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு ராசிக்கும் உகந்த தெய்வங்கள் என்று இருக்கும். அந்த தெய்வங்களை உணர்ந்து அதற்குரிய நாளில் சென்று வழிபாடு செய்தோம் என்றால் அந்த மாதம் சிறப்பான மாதமாக அமையும். அந்த வகையில் ஐப்பசி மாதம் சிறப்பான மாதமாக அமைவதற்கு வழிபட வேண்டிய தெய்வங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசிக்காரர்கள் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். இப்படி வழிபாடு செய்வதன் மூலம் ஐப்பசி மாதம் வசந்தமான மாதமாகவும், யோகமான மாதமாகவும் மாறுவதோடு, குடும்பத்திலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ரிஷப ராசிக்காரர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும். இப்படி வழிபாடு செய்வதன் மூலம் அவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த நல்ல காரியங்கள் சிறப்பாக நடைபெறும்.
மிதுன ராசிக்காரர்கள் சனிக்கிழமை தோறும் பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும். இப்படி வழிபாடு செய்வதன் மூலம் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கி குவிக்கும் யோகம் உண்டாகும். கடக ராசிக்காரர்கள் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அவர்களைத் தேடி வாய்ப்புகள் வரும். அந்த வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்தினால் மிகவும் சிறப்பான மாதமாக மாறும்.
சிம்ம ராசிக்காரர்கள் அஷ்டமி மற்றும் திங்கட்கிழமை தோறும் காலபைரவரை வழிபாடு செய்ய வேண்டும். இப்படி வழிபாடு செய்வதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கன்னி ராசிக்காரர்கள் புதன்கிழமை தோறும் பெருமாளை வழிபட வேண்டும். இப்படி வழிபாடு செய்வதன் மூலம் புதிய வாய்ப்புகள் அவர்களை வந்து சேரும். அதன் மூலம் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ முடியும்.
துலாம் ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் மகாலட்சுமியை வழிபாடு செய்ய வேண்டும். இப்படி வழிபாடு செய்வதன் மூலம் தொழிலிலும் வாழ்க்கையிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். இப்படி வழிபாடு செய்வதன் மூலம் அவர்களைத் தேடி வாய்ப்புகள் வரும் அந்த வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்திக் கொண்டால் நன்மைகள் உண்டாகும்.
தனுசு ராசிக்காரர்கள் வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அனைத்து வகையிலும் வருமானம் அதிகரிக்கும். மகர ராசிக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமை தோறும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். இப்படி வழிபாடு செய்வதன் மூலம் அவர்கள் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும்.
கும்ப ராசிக்காரர்கள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் இக்கட்டான சூழ்நிலையில் எதிர்பாராத நபர்களால் உதவிகள் உண்டாகும். அந்த உதவிகளை அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மீன ராசிக்காரர்கள் சனிக்கிழமை தோறும் விநாயகர் மற்றும் தக்ஷிணாமூர்த்தியை வழிபாடு செய்ய வேண்டும். இப்படி வழிபாடு செய்வதன் மூலம் அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும்.
இதையும் படிக்கலாமே:கை நிறைய பணம் இருக்க ஏற்ற வேண்டிய தீபம்
இந்த வழிபாட்டை ஆலயத்திற்கு சென்று தான் செய்ய வேண்டும் என்று இல்லை. வீட்டில் இந்த தெய்வத்தின் படத்தை வைத்து வழிபாடு செய்யலாம். முழுமனதோடு தெய்வங்களை வழிபாடு செய்வதன் மூலம் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.