ஒருவர் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அவருடைய கையில் எந்த அளவிற்கு பணம் இருக்கிறதோ அந்த அளவிற்கு தான் அவருக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். மேலும் ஒருவர் கையில் இருக்க கூடிய பணத்தைப் பொறுத்துதான் அவருடைய இன்பத் துன்பங்கள் அனைத்தும் நிர்ணயிக்கப்படுகிறது. இக்கட்டான சூழ்நிலையில் கையில் பணம் இருக்கும் பட்சத்தில் யாரையும் எதிர்பார்க்காமல் அந்த சூழ்நிலையை எளிதில் சமாளித்து விட முடியும். இதே கையில் பணம் இல்லாத பட்சத்தில் பிறரிடம் இருந்து கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பிறகு அந்த கடனை அடைப்பதற்காக கஷ்டப்பட வேண்டிய நிலையும் ஏற்படும். அதனால் நாம் எவ்வளவு சம்பாதித்தாலும் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் நம்முடைய கையில் என்றென்றைக்கும் பணம் நிரந்தரமாக இருக்க வேண்டும். அப்படி நிரந்தரமாக இருப்பதற்கு ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பணவரவை அதிகரிக்க வேண்டும் என்று பரிகாரங்கள் இருக்கின்றன. வீண் விரயத்தை தவிர்க்க வேண்டும் என்ற வழிபாடுகளும் இருக்கின்றன. எவ்வளவுதான் பணவரவு வந்தாலும் வீண்விரயம் தவிர்க்கப்பட்டாலும் நம்முடைய கையில் எந்த அளவிற்கு பணம் இருக்கிறது என்பதை தான் நாம் முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படி நம்முடைய கையில் என்றென்றைக்கும் பணம் இருந்து கொண்டே இருப்பதற்கு மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக ஏற்ற வேண்டிய ஒரு தீபத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
கை நிறைய பணம் இருக்க தீபம்
இந்த தீபத்தை வெள்ளிக்கிழமை தோறும் ஏற்ற வேண்டும். தொடர்ச்சியாக 16 வெள்ளிக்கிழமை ஏற்றலாம். பிறகு இரண்டு மூன்று வாரங்கள் விட்டுவிட்டு மறுபடியும் திரும்பி 16 வாரங்கள் ஏற்றலாம். இப்படி தொடர்ச்சியாக இந்த தீபத்தை நாம் ஏற்றுக் கொண்டே வரலாம். இந்த தீபத்தை பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஏற்றுவது என்பது சிறப்பு. இயலாதவர்கள் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் சுக்கிர ஹோரையில் ஏற்றலாம். அதுவும் இயலாது என்று நினைப்பவர்கள் மாலை நேரத்தில் இந்த தீபத்தை ஏற்றலாம்.
இந்த தீபத்தை ஏற்றுவதற்கு நமக்கு திரி தேவைப்படும். கடைக்கு சென்று வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய காட்டன் துணியை வாங்கிக்கொண்டு வரவேண்டும். அதேபோல் ஒரு பாட்டில் பன்னீரையும் வாங்கிக்கொண்டு வரவேண்டும். வீட்டிற்கு வந்ததும் ஒரு பாத்திரத்தில் இந்த பன்னீரை ஊற்றி அந்த பன்னீருக்குள் நாம் வாங்கி வந்த துணியை போட்டு நன்றாக நினைக்க வேண்டும். அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை அந்த துணி பன்னீரில் நன்றாக ஊறட்டும். பிறகு துணியை எடுத்து பிழியாமல் அப்படியே நிழலில் உலர்த்த வேண்டும். இது நன்றாக காய்ந்ததும் இதை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
வெள்ளிக்கிழமை எந்த நேரத்தில் நாம் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த நேரத்தில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் அந்த காட்டன் துணியை எடுத்து இரண்டு திரிகளை மட்டும் நறுக்கி எடுத்து ஒன்றாக சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு வெள்ளி விளக்கு இருக்கும் பட்சத்தில் அந்த வெள்ளி விளக்கில் இந்த தீபத்தை ஏற்றுவது நல்ல பலனை தரும். இயலாதவர்கள் மண் அகல் விளக்கிலோ பித்தளை விளக்கிலோ ஏற்றலாம். சுத்தமான பசு நெய்யை ஊற்றி அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த பன்னீர் திரியை போட்டு நன்றாக திரித்துவிட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த தீபம் மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக ஏற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஏற்றிய பிறகு மகாலட்சுமி தாயாருடைய மந்திரங்களையோ, ஸ்லோகங்களையோ, கவசங்களையும் பாராயணம் செய்ய வேண்டும். நம்மால் இயன்ற ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். வாசனை நிறைந்த மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நாம் இந்த பன்னீர் தீபத்தை ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் மகாலட்சுமி மனம் மகிழ்ந்து என்றென்றைக்கும் நம்முடனே இருப்பாள் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:மீண்டும் பிறவா நிலை பெற பரிகாரம்
இந்த தீபத்தை முழுமனதோடு மகாலட்சுமி தாயாருக்கு ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு பணம் இல்லை என்ற ஒரு நிலையே வராது என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.