- Advertisement -
மந்திரம்

பலன்களை அள்ளித்தரும் 108 சிவன் ஸ்தோத்திரம்

வாழ்க்கை என்பது அதன் இறுதி வரை நாம் கற்கும் அனுபவ படமாகும். மனிதனாக பிறந்து வாழ்வை பல வகைகளிலும் அனுபவிக்கும் நாம், அதில் ஏற்படும் பல சங்கடங்களையும், நெருக்கடிகளையும் சந்திக்கும் போது மன பலத்தை இழந்து விடுகிறோம். இத்தகைய காலங்களில் நாம் அனைவரும் கோப உணர்ச்சிகள் போன்றவற்றால் ஆளப்படுகிறோம். எல்லாவற்றையும் அமைதிப்படுத்தும் தன்மை கொண்டவர் சிவ பெருமான். அவரின் புகழ் பாடும் இந்த 108 துதிகளை கூறி சிவபெருமானை வழிபட நன்மைகள் நடக்கும்.

108 சிவன் ஸ்தோத்திரம்

அலகில் சோதியனே போற்றி
அர்த்த நாரிசனே போற்றி
அருணாசலனே போற்றி
அம்பலவாணனே போற்றி
ஆலவாய் அழகனே போற்றி
ஆடிய பாதமே போற்றி
ஆனந்த்க்கூத்தனே போற்றி
இடபவாகனனே போற்றி
இடர்தனைத்தீர்ப்பவனே போற்றி
ஈசனே போற்றி

- Advertisement -

ஈங்கோய்மலை நாதனே போற்றி
உயிரே போற்றி
உடலே போற்றி
உலகநாதனே போற்றி
உமையாள்பாகனே போற்றி
ஊர்த்துவத் தாண்டவனே போற்றி
ஊனைப்படைத்தோனுக்கும் அருள்பவனே போற்றி
எந்தையே போற்றி
எமபயம் தீர்ப்பவனே போற்றி
ஏகாந்தமானவனே போற்றி

எகாம்பரநாதனே போற்றி
ஐங்கரன் தந்தையே போற்றி
ஐந்தொழில் புரிபவனே போற்றி
ஒளியே போற்றி
ஒலியே போற்றி
ஓம் சக்தி நாதனே போற்றி
ஓங்கார நாதனே போற்றி
ஔடதமே போற்றி
ஔவைக்கருள் செய்தவளே போற்றி
கலையே போற்றி

- Advertisement -

கடலே போற்றி
கருவே போற்றி
கனலே போற்றி
கங்காதரனே போற்றி
கைலாசநாதனே போற்றி
காலகண்டனே போற்றி
காமாட்சிப்ரியனே போற்றி
குருவே போற்றி
குவலயமே போற்றி
குஞ்சிதபாதனே போற்றி

சடைமுடியோனே போற்றி
சட்டநாதனே போற்றி
சரபமாய்த்தோன்றியவனே போற்றி
சண்முகன் தந்தையே போற்றி
சச்சிதானந்தனே போற்றி
சத்குருவே போற்றி
சங்கரனே போற்றி
சிவனே போற்றி
சீலமே போற்றி
சோதியே போற்றி

- Advertisement -

சுடரே போற்றி
சைலநாதனே போற்றி
சேய்தனைக்காப்பவனே போற்றி
சிதம்பரனாதனே போற்றி
சிவகாமி மணாளனே போற்றி
தருவே போற்றி
தகவே போற்றி
தண்ணொளியே போற்றி
தயாபரனே போற்றி
தாண்டவமூர்த்தியே போற்றி

தாட்சாயணி நாதனே போற்றி
திங்களைத்தரித்தவனே போற்றி
திரிபுரம் எரித்தவனே போற்றி
நிதியே போற்றி
நிமலனே போற்றி
நீலகண்டனே போற்றி
நீலாயதாட்சி நாதனே போற்றி
நீல்விழியாள் நாதனே போற்றி
நீங்காத நினைவே போற்றி
நீர்மலிவேணியனே போற்றி

நீள்சடையோனே போற்றி
நெற்றிக்கண்ணனே போற்றி
நேசமாய்த்திகழ்பவனே போற்றி
பசுபதியே போற்றி
பனிமலையே போற்றி
பரம்பொருளே போற்றி
பருப்பொருளே போற்றி
பார்வதி நாதனே போற்றி
புலித்தோல் அணிந்தவனே போற்றி
பிட்டுக்கு மண் சுமந்தவனே போற்றி

பிணியைத்தீர்ப்பவனே போற்றி
மஞ்சு நாதனே போற்றி
மணிகண்டன் தந்தையே போற்றி
மலைமகள் நாயகனே போற்றி
மன்மதனை எரித்தவனே போற்றி
மால்மருகன் தந்தையே போற்றி
மல்லிகார்ஜுனனே போற்றி
முதலே போற்றி
முடிவே போற்றி
முக்கண்ணனே போற்றி

முடியடி காணா முதல்வனே போற்றி
மேருவே போற்றி
மேகநாதனே போற்றி
மோனமே போற்றி
மோட்சமளிப்பவனே போற்றி
வளர்பிறை அணிந்தவனே போற்றி
வன்மீகனாதனே போற்றி
வாஞ்சினாதனே போற்றி
விடமுண்ட கண்டனே போற்றி
விஸ்வநாதனே போற்றி

வைத்யனாதனே போற்றி
வீரமே போற்றி
வெற்றியே போற்றி
வெண்மதி தரித்தவனே போற்றி
வேதமே போற்றி
வேள்வியே போற்றி
வேல்முருகன் தந்தையே போற்றி
வேண்டும் வரம் அருள்பவனே போற்றி

போற்றி போற்றி

உலகை இயக்கும் அணுக்களில் நடராஜனாக இருக்கும் சிவ பெருமானை போற்றி இந்த 108 போற்றி துதிகள் இயற்றப்பட்டிருக்கிறது. இந்த துதிகளை சிவ வழிபாட்டிற்குரிய திங்கட்கிழமைகளில் காலையில் ஒரு முறை துதிக்க வேண்டும். அன்று மாலை சிவன் கோவிலுக்கு சென்று, இறைவனை வழிபட்ட பிறகு அக்கோவில் வளாகத்திலேயே ஓரிடத்தில் அமர்ந்து, சிவனை தியானித்து இத்துதிகளை படிக்க எப்படிப்பட்ட மனக்கவலைகள் மற்றும் மனத்துன்பங்களை நீக்கும். அதிகம் கோபப்படும் தன்மை குறையும்.

அண்ட சராசாரங்கள் அனைத்தையும் கட்டிகாப்பவராக சிவ பெருமான் இருக்கிறார். அந்த ஈசன் இல்லறத் தில் இருக்கும் மக்களுக்கு சிறந்த இல்லற ஞானியாகவும், சித்தர்கள் மற்றும் ரிஷிகளுக்கு தலைமை சித்தராகவும், ஞானத்தேடல் கொண்டவர்களுக்கு அனைத்தின் மூலம் மற்றும் முடிவாகவும் இருக்கிறார். தன்னை உள்ளமுருகி வழிபட்டு பக்தி செலுத்தும் அடியவர்களுக்கு அவர்களின் வாழ்விற்கு தேவையான அனைத்தையும் வழங்கி, இறுதியில் மீண்டும் பிறவாமையாகிய முக்தி நிலையை வழங்கும் தன்மை கொண்டவர் சர்வேஸ்வரராகிய சிவன்.

இதையும் படிக்கலாமே:
கண் குறைபாடு போக்கும் மந்திரம்

இது போன்ற மேலும் பல மந்திரங்கள், தூது பாடல்கள் என பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have 108 Shiva stotram in Tamil. This is also called as Lord Shiva 108 stotram in Tamil. One can get good things by chanting this stotram daily.

- Advertisement -