கண் குறைபாடு போக்கும் மந்திரம்

sooriyan-1

“அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது” என தமிழ் மூதாட்டி ஔவையார் பாடியுள்ளார். மனிதர்கள் தங்களின் உடலில் எத்தகைய குறைபாடுகளும் இல்லாமல் பிறந்தாலும் வயது மாற்றும் இன்ன பிற காரணங்களால் உடலில் பல அவயங்களில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. அந்த வகையில் நாம் உலகை பார்க்க உதவும் கண்கள் முக்கியமானது. இந்த கண்களின் பார்வைத்திறன் மேம்படவும், அதில் ஏற்பட்ட குறைகளை போக்கக்கூடிய மந்திரம் தான் இது.

சூரிய சந்திர மந்திரம்

லலிதம் லம்போதரம்
லலிதம் பாஸ்கரம்
லலிதம் பாலச்சந்த்ரம்

நவகோள்களில் சூரியன் மற்றும் சந்திர பகவானை போற்றும் இந்த மந்திரத்தை தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, சூரியன் உதிக்கின்ற நேரத்தில் இந்த மந்திரத்தை 108 முறை துதிக்க வேண்டும். அதே போல் சந்திரனின் வளர்பிறை காலத்தில் அந்த சந்திரனை தரிசித்த வாறே இம்மந்திரத்தை 108 முறை கூறி வணங்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர கண் சம்பந்தமான எல்லா குறைபாடுகளும் நீங்கும். கண்பார்வைத் திறனும் மேம்படும்.

பகல் நேரத்தில் இந்த உலகத்திற்கு சூரியன் ஒளியை தந்து நாம் அனைத்தையும் காண உதவுகிறது. அது போல இரவு நேரங்களில் வளர்பிறை மற்றும் பௌர்ணமி சந்திரன் அந்நேரத்தில் அனைத்தையும் காண ஒளியை தருகிறது. மனித உடலின் யோக விஞ்ஞான ரகசியத்தை அறிந்த சித்தர்கள் மனிதனின் வலது கண் பார்வையை சூரியனும், இடது கண்பார்வையை சந்திரனும் ஆளுகிறது என கண்டுபிடித்தனர். எனவே இம்மந்திரத்தை கூறி வழிபடுபவர்களின் பார்வைத்திறனை இந்த இரு கிரக நாயகர்களும் மேம்படுத்துகின்றனர்.

இதையும் படிக்கலாமே:
துன்பம் போக்கும் குரு பகவான் மந்திரம்

English Overview:
Here we have amntra to improve eye sight in Tamil. It is called as Kan paarvai thelivaga manthiram in Tamil