- Advertisement -
ஜோதிடம்

மனசுக்கு புடிச்சவங்களா திருமணம் செய்ய நாள் குறிக்கனுமா? அதுக்கு முன்னாடி இதையெல்லாம் முதல்ல தெரிஞ்சுக்கோங்க.

திருமணம் செய்ய நாள் நட்சத்திரம் எல்லாம் பார்ப்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் கலாச்சாரமாக இருந்து வருகிறது. நாள் குறிக்காமல், நட்சத்திரம் பார்க்காமல் செய்யப்படும் திருமணம் ஆனது எந்த அளவிற்கு நல்லபடியாக கொண்டு செல்லப்படும்? என்பது சொல்ல முடியாது என்று கூறக் கேட்டிருப்போம். அதில் நிறைய உள்ளார்ந்த விஷயங்கள் இருக்கின்றன. இப்போது நடைபெறும் திருமணங்களில் 50% திருமணங்கள் பெற்றோரின் சம்மதம் இல்லாமல், ஜாதகம் பார்க்காமல், அவரவர்களின் இஷ்டப்படி செய்து கொள்கிறார்கள்.

இதைத் தவறு என்று சொல்லவில்லை ஆனால் இவ்வாறு செய்யப்படும் திருமணங்களில் எத்தனை திருமணங்கள் விவாகரத்து வரை செல்கிறது? என்பதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்வது நல்ல விஷயம் தான். ஆனால் நீங்கள் திருமணம் செய்யும் பொழுது இந்த விஷயங்களை பார்த்து விட்டு, நல்ல நாள் குறித்து திருமணம் செய்து கொள்வது உங்களுடைய வாழ்விற்கு மிகவும் நல்லது என்பதை நீங்கள் உணர வேண்டும். அவ்வகையில் திருமணத்திற்கு உகந்த நாட்களாக எப்படி குறிக்கிறார்கள்? அதை நாமே எப்படி தெரிந்து கொள்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

திருமணம் செய்யும் மாதம் மலமாதமாக இருக்க கூடாது. மலமாதம் என்பது ஒரே மாதத்தில் 2 அமாவாசை, பவுர்ணமிகள் என்று வருவதைக் குறிக்கிறது. இந்த மாதத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பார்கள். தமிழ் மாதத்தின் படி சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி இந்த மாதங்களைத் தவிர மற்ற மாதங்களை திருமணம் செய்ய உகந்தது அல்ல என்பது ஜோதிடர்கள் கூறும் விஷயமாக இருக்கிறது. எனவே எந்த மாதங்களில் திருமணம் செய்வது நல்லது என்பதை பார்க்க வேண்டும்.

ஜோதிடத்தில் சுக்ல பட்ச காலத்தில் திருமணம் செய்வது நல்ல பலன் தரும் என குறிப்பிடுகிறது. திருமணத்தை சுக்ல பட்சத்தில் செய்வது நல்லது. திருமணம் செய்ய சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் போன்ற நாட்களை தவிர்த்து புதன், வியாழன், வெள்ளி போன்ற சுப நாட்களை தேர்வு செய்வது மிக மிக நல்லது. மேற்கூறிய நாட்களில் சுபமுகூர்த்தம் இருந்தாலும் இந்த நாட்கள் அதை விட சிறந்தது என்பதை தான் குறிப்பிட்டுள்ளோம்.

- Advertisement -

ஒவ்வொரு நாளும் லக்ணங்களை கொண்டு கடந்து செல்கிறது. அவ்வகையில் சுப லக்னங்களாக விளங்கும் ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய லக்னங்களில் திருமணம் செய்வது நல்லது. திதிகளை பொறுத்தவரை துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, திரயோதசி இவற்றை தவிர மற்ற திதிகளில் திருமணம் செய்வது அவ்வளவு நல்லதல்ல. இவைகளை காலண்டரில் பார்த்தால் நமக்கே தெரிந்துவிடும்.

அக்னி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலங்கள் நடைபெறும் சமயங்களில் திருமணத்தை தவிர்ப்பது நல்லது. திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண்ணிற்கும், ஆணிற்கும் அவரவர்களுடைய ராசியின் படி அன்றைய நாளில் சந்திராஷ்டமம் இல்லாமல் இருப்பது நல்லது. அவர்கள் இருவருடைய ராசிக்கும் அன்றைய நாளில் சந்திராஷ்டமம் இருக்கிறதா? என்பதை கட்டாயம் ஆராய வேண்டும்.

- Advertisement -

அதுபோல் அந்த இருவரின் ஜனனத்தின் போது கணிக்கப்பட்ட ஜென்ம நட்சத்திர நாட்களில் திருமணம் செய்யக்கூடாது. அதே போல அவர்களின் பிறந்த தேதி மற்றும் பிறந்த கிழமைகளில் திருமணம் செய்வதையும் தவிர்ப்பது தான் நல்லது. மணமக்கள் உடைய திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு இருக்கும் லக்னத்திற்கும், அவர்களுடைய ராசிக்கும் எட்டாம் வீட்டில் குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் இடம் பெற்றிருக்கும் சமயத்தில் திருமணம் செய்யக்கூடாது.

இது போன்ற விஷயங்களை ஆராய்ந்து நம்மால் முடிந்த அளவிற்கு நல்ல நாளில் திருமணம் செய்வது மிக மிக நல்லது. திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். இதனை நல்ல நேரம் பார்த்து செய்தால் தான் அந்த வாழ்க்கை வளமாக மாறும் என்பதை கூறி பதிவை முடித்துக் கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
வீட்டின் இந்த இடம் சரியாக இல்லை என்றால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா? எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்.

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -