வீட்டின் இந்த இடம் சரியாக இல்லை என்றால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா? எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்.

vastu-home

ஒரு வீடு என்பது சாதாரணமான விஷயமல்ல. ஒரு வீட்டில் இருந்து நாம் இன்னொரு வீட்டிற்கு குடி போகிறோம் என்றால் புதிதாகக் குடி புகுந்த வீட்டில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரலாம். இது சொந்த வீடு மட்டுமல்ல வாடகை வீட்டிலும் இதே நிலை தான். அந்த வீட்டில் இருக்கும் பொழுது நாங்கள் நன்றாக தான் இருந்தோம். இந்த வீட்டிற்கு வந்து நிறைய பிரச்சனைகள் வருகிறது என்று பலரும் கூறுவதை நாம் கேட்டிருப்போம். வீட்டிற்கும் நம் வாழ்க்கைக்கும் நிச்சயம் தொடர்பு உண்டு என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

home

இதைத் தான் வாஸ்து சாஸ்திரத்தில் பலவாறாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. நீங்கள் குடியிருக்கும் வீட்டின் ஒவ்வொரு திசையும் வாஸ்து முறைப்படி அமைந்து இருந்தால் பிரச்சனையே இல்லை. அப்படி இல்லை என்றால் என்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு? என்பதைத் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

ஒருவருடைய வீட்டில் பிரதான வாசல் தெற்கு, தென்மேற்கு பகுதியில் அமைந்து இருந்தால் மற்றும் தென்மேற்கு பகுதியில் இருக்கும் அறையானது வரவேற்பரையாக அல்லது போர்டிகோ அமைப்பு அமைந்து இருந்தால் அந்த வீட்டில் தலைவராக இருப்பவருக்கு விருப்ப ஓய்வு எனப்படும் விஆர்எஸ் வாங்கும் நிலை வரும்.

old-age-people

வீட்டின் தென்மேற்கு, வடமேற்கு பகுதியில் உட்புறமாக தவறாக படிக்கட்டுகள் அமைந்திருப்பது, வீட்டிற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ தெற்குப் பகுதியில் நடுப்பகுதி மற்றும் தென்மேற்கு பகுதியில் போர்வெல், தரைத்தள தண்ணீர் தொட்டி, கிணறு, செப்டிக் டேங்க் போன்றவை அமைந்து இருந்தால் அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

- Advertisement -

உங்கள் வீட்டில் தென்கிழக்குப் பகுதியில் நீர் சார்ந்த போர்வெல், தரைதள தண்ணீர் தொட்டி, செப்டிக் டேங்க், கிணறு, கழிப்பறைகள் போன்றவை அமைந்திருந்தால் அந்த வீட்டிலிருக்கும் குடும்ப தலைவிக்கு கருப்பை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.

stomach-pain

ஒரு வீட்டிற்கு தெருக்கூத்து, தெரு பார்வை என்பது மிகவும் முக்கியமான அம்சமாக வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகிறது. தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் இவைகள் அமைவது சரியானது அல்ல. தென்மேற்கு பகுதியில் முக்கியமாக இருக்கக்கூடிய கேட் தவறாக அமைந்திருப்பது மற்றும் தெருக்கூத்து, தெருப்பார்வை வருவதும், கழிவறைகள் தவறாக அமைத்து இருப்பதும், தவறான பூஜையறை அமைப்புகள் வந்திருப்பது மற்றும் பிரதான வாசல் சரியாக அமையாமல் அந்த இடத்தில் இருப்பதும் அந்த வீட்டில் இருக்கும் நபர்களுக்கு விபத்துக்கள் ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. குறிப்பாக உடலில் வலது புறத்தில் நிறைய பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

elumbu-murivu

அதுபோல் வடமேற்கு பகுதியில் தவறான தெருக்குத்து, தெருப்பார்வை வருவதும், வெட்டப்பட்ட அமைப்பில் கட்டிடம் அமைந்து இருப்பதும், மேல்தளம் உயரம் குறைவாக இருப்பதும் உடலின் இடது புறத்தில் பிரச்சனைகளும், எலும்பு முறிவுகளும் ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. ஆகவே இந்த குறிப்பிட்ட அமைப்புகள் சரியாக அமையாமல் இருந்தால் மேற்கூறிய பாதிப்புகள் வருவதற்கு நிச்சயம் வாய்ப்புகள் உள்ளன என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அதனால்தான் ஒவ்வொரு திசையையும் சரியாக அமைக்கும்படி வாஸ்து சாஸ்திரம் வலியுறுத்துகிறது. சிலருக்கு இதன் மேல் நம்பிக்கை இல்லாவிட்டாலும் பலரும் தங்களுடைய அனுபவத்தில் உணரும் படியாக மாறி வருகிறது என்பது தான் உண்மை.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டின் வடகிழக்கில் இதெல்லாம் இருந்தால்! இந்த கஷ்டங்கள் எல்லாம் உங்களுக்கு நிச்சயம் வரும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான வாஸ்து சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.