- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

இன்று இவரை வணங்கினால் சனியால் உங்களுக்கு பிரச்சினையே இல்லை

‘அஞ்சனை மைந்தா போற்றி அஞ்சினை வென்றாய் போற்றி
வெஞ்சினைக்கதிர்பின் சென்று பிழுமறையுணர்ந்தாய் போற்றி
மஞ்சன மேனிராமன் மலர்ப்பதம் மறவாய் போற்றி
எஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென விருப்பாய் போற்றி’

என்று அஞ்சனை மைந்தனின் அருங்குணங்களை வியந்து போற்றுகிறார் கம்பர்.

- Advertisement -

அஞ்சனையின் மைந்தனாகத் தோன்றியவனும்; ஐம்புலன்களை வென்றவனும், சூரியதேவனிடம் வேதங்களின் பொருள் உணர்ந்தவனும், ராமபிரானின் மலரடிகளை மறவாத மனம் கொண்டவனும், நித்திய சிரஞ்சீவியாகத் திகழ்பவர் என்று அனுமனைப் போற்றுகிறார் கம்பர்.

நித்திய சிரஞ்சீவியாகத் திகழும் அனுமன் இன்றும் நம்மோடு சூட்சும வடிவில் இருக்கும் தெய்வம். மனமுருகிப் பிரார்த்திப்பவர்க்கு பிரத்யட்சமாகத் தோன்றி அருள்புரியும் தெய்வம். எங்கெல்லாம் ராமநாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் தோன்றுபவர்.

- Advertisement -

அனுமன் ஜயந்தி அனைத்துக் கோயில்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்பெறும். ‘அறிவு, ஆற்றல், இசை ஞானம், உடல் வலிமை, துணிவு, புகழ், அடக்கம், ஆரோக்கியம், சொல்லாற்றல்’ என்று அனைத்துக்குமே எடுத்துக்காட்டாக விளங்குபவர் அனுமன் என்று கம்பர் கூறுகிறார்.

அனுமன் ஜயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையிலேயே குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி உபவாசம் தொடங்க வேண்டும். அருகில் இருக்கும் ராமர் அல்லது அனுமன் கோயிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். வசதி இருந்தால் வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு சாத்தியும் வணங்கலாம். அன்று ஸ்ரீராமஜெயம் எழுதுவது நல்ல பலன்களை அளிக்கும். பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம்.

- Advertisement -

காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே பருகி உபவாசம் இருக்க வேண்டும். மதிய வேளையில் உணவு எடுத்துக்கொள்ளலாம். இரண்டு நாள்களில் சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது. சனிபகவானை வெற்றிகொண்ட வீர ஆஞ்சநேயரை அனுமன் ஜயந்தி நாளில் வணங்கினால் சனிதோஷங்களிலிருந்து பாதுகாப்பினைப் பெறலாம். சகல ஆனந்தங்களையும் அள்ளித்தருபவர் ஆஞ்சநேயர் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவனையும் திருமாலையும் ஒன்றிணைக்கும் தெய்வமாக விளங்குபவர் ஆஞ்சநேயர், எனவே இவரை வணங்கி அளவில்லாத ஆனந்த நிலையினைப் பெறலாம்.

இதையும் படிக்கலாமே:
சனி பெயர்ச்சி 2017-2020 – 12 ராசிகளுக்கான பரிகாரங்கள்

‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,
வாயுபுத்ராய தீமஹி, தந்தோ
ஹனுமன் ப்ரசோதயாத்’

என்ற இந்த அனுமன் காயத்ரி மந்திரத்தை உச்சரித்து சகல பாவங்களில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் நிவர்த்தி பெறலாம்.

- Advertisement -