சனி பெயர்ச்சி 2017-2020 – 12 ராசிகளுக்கான பரிகாரங்கள்

sani-peyarchi-parikaaram

இந்த மாதம் 19 ஆம் தேதி (19.12.2017) சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். அதன் காரணமாக சனி பகவான் சில ராசிகளுக்கு நல்ல பலன்களையும் சில ராசிகளுக்கு சற்று மந்தமான பலன்களையும் தர உள்ளார். நல்ல பலன்களை கொண்ட ராசிக்கார்கள் கீழே உள்ள பரிகாரத்தை செய்வதன் மூலம் மேலும் சிறந்த பலன்களை அடையலாம். மந்தமான பலன்களை கொண்ட ராசிக்கார்கள் கீழே உள்ள பரிகாரத்தை செய்வதன் மூலம் சனி பகவான் தாக்கத்தில் இருந்து சற்று விடுபடலாம்.

உங்கள் ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்களை படிக்க இதை கிளிக் செய்யுங்கள்

மேஷம்:

meshamபசியால் வாடும் ஏழைகளுக்கு உங்களால் முடிந்தவரை அன்னதானம் அளியுங்கள். தினமும் முருகனை வழிபடுங்கள். ‘‘ஓம் சரவணபவ’’ என்ற மந்திரத்தை தினமும் 11 முறை கூறுவது சிறந்தது. ஏகாதசி நாளில் அருகில் உள்ள பெருமாள் கோயிலிற்கு சென்று பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் சிறந்த பலன்களை பெறலாம்.

ரிஷபம்:

rishabamகல்விக்கு பணம் இன்றி தவிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவுங்கள். உங்கள் வீட்டருகில் இருக்கும் பெருமாள் கோயிலிற்கு சென்று அங்குள்ள ஆண்டாளை வழிபட்டால் நல்ல பலன் உண்டு. திருவொற்றியூரில் அருள்பலிக்கும் ஆதிபுரீஸ்வரரையும் வடிவுடையம்மனையும் வழிபட்டால் உயர்வு உண்டு.

- Advertisement -

மிதுனம்:

midhunamகோவிலை புதுப்பிக்கும் பனி எங்கேனும் நடந்தால் உங்களால் முடிந்து உதவியை செய்யுங்கள். சனிக்கிழமைகளில் வீட்டருகில் உள்ள பெருமாள் கோயிலிற்கு சென்று பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து அர்ச்சனை செய்துவாருங்கள்; மகிழ்ச்சி நிலைக்கும். தினமும் “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை கூறுவதன் பயனாக உயர்வு உண்டு.

கடகம் :

kadagamஆதரவின்றி தவிக்கும் முதியோர்களுக்கு உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள். வீட்டருகில் உள்ள அம்மன் கோயிலிற்கு சென்று அம்மனுக்கு வேப்பிலை சார்த்தி வழிபட்டு வந்தால் பண வரவு அதிகரிக்கும். திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பரை தரிசித்து வந்தால் வாழ்வில் வளர்ச்சி காணலாம்.

சிம்மம்:
simmamமருத்துவ செலவிற்கு பணம் இன்றி தவிக்கும் ஏழைகளுக்கு மருத்துவ உதவு செய்யுங்கள். அருகில் உள்ள சிவன் கோயிலிற்கு சென்று இளநீர் அபிஷேகம் செய்தால் நல்ல பலன்களை பெறலாம். “ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை தினமும் துதித்து வாருங்கள்.

கன்னி:
kanniபெற்றோரின்றி தவிக்கும் பிள்ளைகளுக்கு உங்களால் இயன்றவரை உதவுங்கள். திருவாதிரை நட்சத்திர நாளில் அருகில் உள்ள ஸ்ரீநாகேஸ்வரர் கோயிலிற்கு சென்று வில்வம் சாற்றி வழிபட்டு வாருங்கள். “ஓம் ஸ்ரீசாஸ்தாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 5 முறை கூறி வாருங்கள். நல்ல பலன் உண்டு.

துலாம்:
thulamவீட்டருகில் உள்ள பசுவிற்கு அகத்தி கீரை மற்றும் வாழைப்பழத்தை அவ்வப்போது கொடுங்கள். அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு வாரத்தில் ஒருநாளாவது சென்று வழிபடுங்கள். பிரதோஷ நாளில் சென்றால் மேலும் சிறப்பு. “ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்மியை நமஹ” என்ற மந்திரத்தை கூறி வாருங்கள் வருமானத்திற்கான தடை நீங்கும்.

விருச்சிகம்:
virichigamநடக்க இயலாத முதியோருக்கு முடிந்த உதவியை செய்யுங்கள். திருக்கடையூர் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அமிர்தகடேஸ்வரரை வழிபடுவதால் முயற்சிகள் அனைத்தும் கைகூடும். அருகில் உள்ள அம்மன் கோயிலிற்கு சென்று “ஓம் ஸ்ரீம் துர்க்காயை நமஹ” என்ற மந்திரத்தை ஜபித்து அம்மனை வழிபடுங்கள், எதிர்ப்புகள் விலகும்.

தனுசு:
dhanusuகோயிலிற்கு வெளியே அமர்ந்து தானம் கேட்கும் முதியோர்களுக்கு அன்னதானம் அளியுங்கள். குச்சனூரில் சுயம்பு வடிவாக அருள்பாலிக்கு சனிபகவானை ஒரு முறை தரிசித்து வாருங்கள், துன்பங்கள் பறந்தோடும்.

மகரம்:
magaramஏழை பெண்களின் திருமண செலவிற்கு உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனூர் என்னும் ஊரில் வாலியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சனீஸ்வர பகவானை வணங்கி வாருங்கள். “ஓம் ஸ்ரீம்கணபதயே நமஹ” என்ற மந்திரத்தை தினமும் கூறிவாருங்கள் வளம் பெருகும்.

கும்பம்:
kumbamஏகாதசி திதி நாளில் அருகில் உள்ள பெருமாள் கோயிலிற்கு சென்று பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். எப்போதெல்லாம் முடிகிறது அப்போதெல்லாம் கந்தனை வழிபட்டு வாருங்கள். ” ஓம் சரவணபவ” என்று மந்திரத்தை தினமும் ஜபித்து வாருங்கள், நன்மைகள் அதிகரிக்கும்.

மீனம்:
meenamசனிக்கிழமைகளில் ஸ்ரீலட்சுமி சமேத ஸ்ரீலட்சுமி நாராயணரை தரிசித்து வாருங்கள். சித்தர்களின் சமாதிக்கு சென்று வழிபட்டு வாருங்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உங்களால் இயன்றவரை உதவுங்கள். நன்மைகள் பெருகும்.