- Advertisement -
சமையல் குறிப்புகள்

பூ போன்ற இட்லி செய்வது எப்படி

இட்லி தமிழர்களின் பாரம்பரிய உணவாக இருக்கிறது. நமது பண்டைய தமிழ் நூலான “ஆசாரக்கோவை” தினமும் காலையில் அவித்த வேக வைத்த உணவுகளை உண்பது ஆரோக்கியத்திற்கு சிறந்தது என வலியுறுத்துகிறது. இதற்கு சிறந்த உதாரணமாக இருக்கும் காலை உணவான இட்லியை செய்யும் முறை பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.

இட்லி செய்வதற்கு வேண்டிய பொருட்கள்

தோல் நீக்கப்பட்ட முழு உளுந்து – 1 கப்
இட்லி அரிசி – 4 கப்
உப்பு – 3 டீ ஸ்பூன்
வெந்தயம் -1/2 டீ ஸ்பூன் (தேவைப்பட்டால்)

- Advertisement -

எத்தனை பேர் சாப்பிடலாம்: 2

செய்முறை

- Advertisement -

முதலில் இட்லி மாவை செய்வதற்கு அரிசியையையும், உளுந்தையும் 3 மணி நேரத்திற்கு தனித்தனி பாத்திரங்களில் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.

ஊற வைக்கப்பட்ட உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயத்தை முதலில் கிரைண்டரில் போட்டு அரைக்க வேண்டும். அப்படி செய்யும் போது அந்த பருப்புகள் ஊற வைத்த நீரை சிறிது சிறிதாக விட்டு நன்றாக மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

இதன் பின்னர் இந்த மாவை வழித்து எடுத்துவிட்டு, ஊறவைக்கப்பட்ட அரிசியை கிரைண்டரில் போட்டு சிறிது சிறிதாக நீர் விட்டு நன்கு மாவு பதத்திற்கு அரைக்க வேண்டும்.

பின்பு இந்த அரிசி மாவு கலவையையும், உளுந்து வெந்தயம் மாவு கலவையையும் ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்.

பின்பு அப்பாத்திரத்தை மூடி ஒரு குளுமையான இடத்தில் குறைந்தது 8 மணி நேரத்திற்கு அந்த மாவு கலவையை புளிக்க விட வேண்டும்.

இவ்வளவு நேரத்திற்கு பிறகு அம்மாவு கலவையை பார்க்கும் போது அதில் நுரைகள் அதிகம் காணப்படும். இது மாவு சரியான பதத்தில் இருப்பதை காட்டும் அறிகுறியாகும்.

இப்போது இட்லி அவிக்கும் குண்டாவில் அதன் காலளவு நீரால் நிரப்பி அடுப்பில் சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.

இட்லி தட்டில் சுத்தமான பருத்தியால் ஆன வெள்ளை துணியை நன்கு பரப்பி, அதில் இட்லி மாவை ஊற்றி அடுப்பில் இருக்கும் குண்டாவை திறந்து, அந்த இட்லி தட்டை வைத்து மூடி அவிக்க வேண்டும்.

அதிகபட்சம் 15 லிருந்து 20 நிமிடங்கள் வரை இட்லிகளை வேக வைப்பதால் மிருதுவான இட்லிகள் கிடைக்கும்.

இந்த நேர அளவுக்குமேல் இட்லிகளை வேக வைப்பதால் இட்லிகள் மிகவும் இறுகிவிடக்கூடும்.

இது போன்ற மேலும் பல சமையல் குறிப்புகள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have soft Idli preparation in Tamil and also Soft Idli recipe in Tamil language. It is also called as soft Idli Samayal kurippu in Tamil or Malligai poo idli recipe in Tamil.

- Advertisement -