
கடனால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் தங்களுடைய வாழ்க்கையை இழந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இருப்பினும் அவர்களால் அந்த கடனிலிருந்து வெளிவர முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். புதிதாக கடன்களை வாங்கி அதில் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்களும் கடனில் இருந்து மீள வேண்டும் என்று நினைப்பவர்களும் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யும்பொழுது செய்யக்கூடிய ஒரு எளிமையான சூட்சம முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வெள்ளிக்கிழமை என்றதுமே நம் நினைவிற்கு வருவது பெண் தெய்வங்களின் வழிபாடுதான். அதிலும் குறிப்பாக மகாலட்சுமியின் வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. யார் ஒருவர் வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுபவர்களுக்கு கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்கும் என்றும் செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அப்படி செய்யக்கூடிய ஒரு மகாலட்சுமி வழிபாட்டை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
பொதுவாக மகாலட்சுமி தாயாருக்கு வாசனை மிகுந்த பொருட்கள் என்பது மிகவும் பிடிக்கும். எவ்வளவு வாசனை மிகுந்த பொருட்களாக இருக்கிறதோ அந்த அளவிற்கு மகாலட்சுமி தாயாரின் அருளும் அதிகமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட வாசனை மிகுந்த பொருட்களுள் தாழம்பூவும், மல்லிகை பூவும் முக்கியமாக கருதப்படுகிறது. தாழம்பூவை தெய்வங்களுக்கு வைத்து வழிபடக்கூடாது என்பதால் மகாலட்சுமி தாயாருக்கு தாழம்பூ குங்குமத்தை வாங்கி தர வேண்டும்.
இதோடு வாசனை மிகுந்த மல்லிகை பூவை உதிரி பூவாக வாங்கி நாமே நம்முடைய கைகளால் மாலையாக தொடுத்து மகாலட்சுமி தாயார் தரவேண்டும். இதோடு சேர்த்து மகாலட்சுமி தாயார் வீட்டிற்கு கூடிய தாமரை பூவையும் வாங்கிக் கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் எல்லாவித பூஜைகளையும் முடித்துவிட்டு அருகில் இருக்கக் கூடிய மகாலட்சுமி ஆலயத்திற்கு சென்று மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யும் பொழுது இந்த தாழம்பூ குங்குமம், மல்லிகைப்பூ, தாமரைப்பூ இவை மூன்றையும் மகாலட்சுமி தாயாருக்கு கொடுத்து விட வேண்டும்.
பிறகு அங்கேயே அமர்ந்து நம்முடைய கடன் பிரச்சினைகள் என்ன என்பதை மனதார அம்மனிடம் கூற வேண்டும். எவ்வளவு நிதானமாகவும் பொறுமையாகவும் நாம் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்கிறோமோ அந்த அளவிற்கு நமக்கு அருள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி நிதானமாக நாம் வழிபாடு செய்து முடித்துவிட்டு அர்ச்சகர் இடமிருந்து சிறிது மல்லிகை பூவையும் தாமரைப் பூவையும் சிறிதளவு மட்டும் குங்குமத்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வரவேண்டும்.
இப்பொழுது வீட்டிற்கு வந்து ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்து அதில் நீங்கள் யாருக்கு கடன் தர வேண்டுமோ அவர்களின் பெயரும் எவ்வளவு தர வேண்டுமோ அந்த தொகையையும் எழுதி அதில் நாம் கோவிலில் இருந்து வாங்கி வந்த குங்குமம் சிறிதளவு, மல்லிகை பூ, தாமரை பூ இவற்றை வைத்து மடித்து உங்களுடைய பீரோவிலோ அல்லது பூஜை அறையிலோ வைத்து விட வேண்டும்.
இப்படி தொடர்ச்சியாக 5 வாரங்கள் செய்து வரும் பொழுது கண்டிப்பான முறையில் கடன் பிரச்சினைகள் தீருவதை நம்மால் கண்கூடாக காண முடியும். பெண்களால் இந்த வழிபாட்டை தொடர்ச்சியாக ஐந்து வாரங்கள் செய்ய முடியாது. அப்படி செய்ய முடியாத வாரத்தில் வீட்டில் இருக்கக்கூடிய ஆண்களையோ அல்லது குழந்தைகளையோ கோவிலுக்கு சென்று இந்த முறையில் வழிபாடு செய்து வர சொல்ல வேண்டுமே தவிர அடுத்த வாரம் என்று தள்ளி போடக்கூடாது.
தொடர்ச்சியாக 5 வாரமும் ஒரே நபரின் பெயரை மட்டுமே எழுதி வைக்க வேண்டும். அவரின் கடன் முழுமையாக அடைந்த பிறகு பேப்பரையும் அதற்குள் இருக்கும் மலர்களையும் ஓடுகின்ற தண்ணீரில் போட்டு விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: சொந்த வீடு அமைய வாஸ்து நாளில் செய்ய வேண்டிய பரிகாரம்
மிகவும் எளிமையான அதே சமயம் மகாலட்சுமி தாயாரின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு உதவக்கூடிய இந்த வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்து கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் வெளியில் வரலாம் என்பதை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.