இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதோடு மட்டுமல்லாமல் தங்களுக்கு என்று சில விஷயங்களை செய்ய வேண்டும், சில காரியங்களை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படி ஆசைப்படக்கூடிய முக்கியமான ஒன்றாக கருதப்படுவது தான் சொந்த வீடு வாங்குவது. மிகப்பெரிய பணக்காரராக இருந்தாலும் அவருடைய வாரிசுகள் வளர்ந்த பிறகு அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
இதே நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களும், ஏழைகளும் வாடகையாக மாத மாதம் வேறொருவரிடம் பணத்தை கொடுப்பதற்கு பதிலாக சொந்தமாக வீட்டை வாங்கினால் நிம்மதியாக இருக்க முடியுமே என்று நினைப்பார்கள். எந்த பிரச்சினையும் இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவார்கள். இந்த ஆசையை நிறைவேற்றக்கூடிய தெய்வமாக திகழ்பவர் முருகப்பெருமான். அப்படிப்பட்ட முருக பெருமானுக்கு எந்த நாளில் எப்படி தீபம் ஏற்றினால் சொந்த வீடு அமைவதற்குரிய யோகம் உண்டாகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாக ஒரு வருடத்தில் குறிப்பிட்ட நாட்களை மட்டும் தான் வாஸ்து நாள் என்று கூறுவோம். அந்த வாஸ்து நாளில் வீடு கட்ட ஆரம்பிப்பது, கடைக்கால் போடுவது, கிணறு தோன்றுவது, போர் போடுவது என்று பூமி தொடர்பான அனைத்து காரியங்களையும் நாம் செய்வோம். அப்படிப்பட்ட வாஸ்து நாள் அன்று செய்யக்கூடிய ஒரு தீப வழிபாட்டை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
சொந்தமாக வீடு வாங்க வேண்டும், இடம் வாங்க வேண்டும், வாகனம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அவர்கள் கையில் பணம் இருந்தாலும் செவ்வாய் பகவானின் அருள் இருந்தால்தான் இவற்றை வாங்க முடியும். இவை அனைத்திற்கும் அதிபதியாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான். செவ்வாய் பகவானுக்கு அதிபதியாக திகழக்கூடியவர் முருகப்பெருமான். அதனால் முருகப்பெருமானை வழிபாடு செய்ய நம்முடைய சொந்த வீடு வாங்கும் கனவு என்பது நிறைவேறும்.
பொதுவாக முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்றால் முருகப்பெருமானுக்கு உகந்த கிழமையான செவ்வாய்க்கிழமை அன்று தான் வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். சொந்த வீடு வாங்க வேண்டும், சொந்தமாக இடம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வாஸ்து நாளில் முருகப்பெருமானுக்கு தீபம் ஏற்றி வழிபட விரைவிலேயே அவர்களுடைய கனவு நினைவாகும் என்று கூறப்படுகிறது.
வாஸ்து நாள் அன்று வாஸ்து நேரம் என்று வரும். அந்த நேரத்தில் வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய முருகனின் படத்தை சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்து விட்டு அவருக்கு முன்பாக அரிசிமாவினால் ஒரு கோலத்தை போட்டுக் கொள்ளுங்கள். அது நட்சத்திர கோலமாக இருப்பது மிகவும் சிறப்பு. பிறகு அந்தக் கோலத்தின் நான்கு மூலைகளிலும் அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி சிவப்பு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த தீபம் கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். இப்படி தீபம் ஏற்றிய பிறகு உங்களுடைய வேண்டுதல் என்னவோ அதாவது சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற வேண்டுதலை முருகப்பெருமானிடம் மனதார வைத்துக் கொள்ளுங்கள். தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்து இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.
இதையும் படிக்கலாமே கடன் தீரவும் சகல ஐஸ்வரியம் பெருகவும் பரிகாரம்
இப்படி வாஸ்து நாள் வரும் பொழுதெல்லாம் வாஸ்து நேரத்தில் இந்த முறையில் முருகப் பெருமானுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய விரைவிலேயே முருகப்பெருமானின் அருளால் சொந்த வீடு அமைவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.