
ஒருவருடைய வாழ்க்கையில் காரிய தடை என்பது மிகப்பெரிய பாதிப்பை தரக்கூடியது. ஒரு நல்ல காரியத்தை செய்ய வேண்டும் என்று நாம் ஆசைப்படுவோம். ஆனால் அந்த காரியத்தை செய்வதற்குள் நமக்கு பல தடைகள், தடங்கல்கள் என்பது ஏற்படும். ஒரு சிலருக்கு கடைசிவரை அந்த காரியம் கைகூடாமல் சென்று விடும். இப்படி தாங்கள் செய்யக்கூடிய நியாயமான காரியங்களில் தடைகள் ஏற்பட்டுவிட்டது, அந்த தடைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றாலும், தடையில்லாமல் ஒரு காரியம் நடைபெற வேண்டும் என்றாலும், சுபகாரியங்கள் நல்லவிதமாக நடந்தேற வேண்டும் என்றாலும் விநாயகர் பெருமானை நினைத்து நாம் தரவேண்டிய தானத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாக காரியத்தடை நீங்க வேண்டும் என்றால் அதற்கு விநாயகப் பெருமானை தான் வழிபட வேண்டும். ஒருவர் செல்லக்கூடிய காரியம் வெற்றியடைய வேண்டும் என்னும் பட்சத்தில் விநாயகப் பெருமானை வழிபாடு செய்து விட்டு சிதறு தேங்காய் உடைத்து பிறகு செல்வார்கள். அதே போல் விநாயகப் பெருமானின் ஆலயத்தில் காரிய தடை நீங்க வேண்டும் என்பதற்காக பல பரிகாரங்களும் இருக்கின்றன.
அந்த பரிகாரங்களையும் செய்வார்கள். இப்படி நாம் பரிகாரங்களை செய்வதன் மூலம் காரியத்தடை என்பது விலகும். ஆனால் நாம் தானம் செய்யும் பொழுது காரிய தடை விலகுவதோடு நம்முடைய கர்ம வினைகளும் நீங்கும். அந்த வகையில் இந்த பதிவில் நாம் விநாயகர் பெருமானை வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
இந்த வழிபாட்டிற்கு விநாயகப் பெருமானுக்குரிய திதியான சதுர்த்தி திதி என்பது சிறப்பாக இருக்கும். வளர்பிறை சதுர்த்தியாக இருந்தாலும் தேய்பிறை சதுர்த்தியாக இருந்தாலும் ஏதாவது ஒரு சதுர்த்தியை தேர்வு செய்து அன்றைய தினம் விநாயகப் பெருமானை முழுமனதோடு வழிபாடு செய்துவிட்டு மூன்று பொருட்களை பிறருக்கு தானமாக தர வேண்டும்.
அவை வெல்லம், மஞ்சள், அன்னதானம் இது மூன்றில் ஏதாவது ஒன்றையோ அல்லது மூன்றையும் யாருக்காவது நாம் தானமாக தருகிறோம் என்றால் நம்முடைய கர்ம வினைகள் அனைத்தும் நீங்குவதோடு காரிய வெற்றியும் ஏற்படும். பொதுவாக வெல்லத்தை நாம் தானமாக தரும் போது காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கும் என்று கூறப்படுகிறது. தடைப்பட்ட காரியங்கள் விரைவிலேயே நடைபெற மஞ்சளை தானமாக தர வேண்டும்.
அன்னதானம் செய்யும்பொழுது நம்முடைய கர்ம வினைகள் நீங்குவதோடு மங்களகரமான சுபகாரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடந்திடும் என்று கூறப்படுகிறது. இதை தொடர்ச்சியாக தங்களுடைய காரியம் முடியும் வரை செய்ய வேண்டும். இப்படி தானம் செய்வதன் மூலம் காரிய தடைகள் நீங்குவதோடு கர்ம வினைகளும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். இதனால் வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும்.
இதையும் படிக்கலாமே செல்வங்கள் சேர தசாங்க தீபம்
விநாயகப் பெருமானை நினைத்து விநாயகப் பெருமானுக்குரிய திதியான சதுர்த்தி திதி அன்று இந்த முறையில் நாம் பிறருக்கு தானம் தருவதன் மூலம் விநாயகப் பெருமானின் அருளை பரிபூரணமாக பெறுவதோடு காரிய தடைகளையும் நீக்கி காரிய வெற்றியை அடையலாம். முழு மனதுடன் செய்து முழு பலனையும் பெறலாம்.