- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வங்கள் சேர தசாங்க தீபம்

செல்வங்கள் சேர தசாங்க தீபம்

- Advertisement -

ஒவ்வொருவருடைய வீட்டிலும் பூஜை அறை என்பது இருக்கும். அந்த பூஜை அறையில் தீபம் ஏற்றும் வழக்கமும் இருக்கும். தினமும் காலையிலும் மாலையிலும் தீபம் ஏற்றி வழிபாடு செய்பவர்களும் இருக்கிறார்கள். ஏதாவது ஒருவேளை மட்டும் தீபம் ஏற்று வழிபாடு செய்பவர்களும் இருக்கிறார்கள். இப்படி தினமும் ஏற்ற முடியவில்லை என்றாலும் முக்கியமான நாட்களாக கருதக்கூடிய செவ்வாய், வெள்ளி கிழமையில் மட்டுமாவது தீபம் ஏற்றி வழிபாடு செய்பவர்கள் இருக்கிறார்கள். ஆக மொத்தம் ஒரு வீட்டில் கண்டிப்பான முறையில் வாரத்தில் ஒருமுறையாவது தீபம் ஏற்று வழிபாடு செய்யும் பழக்கம் என்பது இருக்கும். அப்படி நாம் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும்பொழுது செய்யக்கூடிய ஒரு எளிமையான தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

எந்த நல்ல காரியமாக இருந்தாலும் அந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து பிறகுதான் தொடங்க ஆரம்பிப்போம். சுப காரியமாக இருக்கும் பட்சத்தில் சுமங்கலி பெண்களின் கைகளால் குத்து விளக்கு ஏற்றி வைக்கப்பட்டு பிறகு அந்த சுப காரியத்தை நடத்த ஆரம்பிப்போம். இப்படி தீபத்திற்கு என்று சில வழிமுறைகள் இருக்கின்றன. இந்த வழிமுறைகளை பின்பற்றி நாம் வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஒரு தீபத்தை நாம் ஏற்றும்பொழுது அந்த இடத்தை சுற்றி இருக்கக்கூடிய இருளானது விலகிவிடும். அதேபோல் தான் நம்முடைய வீட்டில் நாம் தீபம் ஏற்றும் பொழுது நம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களும் விலகி நேர்மறை ஆற்றல்களான தெய்வ சக்தி நம் வீட்டிற்கு குடியேறும் என்று கூறப்படுகிறது. இப்படி அற்புதமான பலன்களை தரக்கூடிய தீபத்தை நாம் ஏற்றுவதால் வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நன்மைகள் உண்டாகும். இப்பொழுது சரித்திரம் நீங்கி செல்வ வளம் சேரவும் கஷ்டங்கள் பிரச்சனைகள் தீரவும் ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி பார்ப்போம்.

இந்த தீபத்தை காலையில் ஏற்றலாம். மாலையிலும் ஏற்றலாம். தினமும் ஏற்றலாம். செவ்வாய், வெள்ளிக்கிழமையில் ஏற்றலாம். அமாவாசை, பௌர்ணமி போன்ற தினங்களில் ஏற்றலாம். இந்த தீபத்தை அகல் விளக்கு, பித்தளை விளக்கு என்று எந்த விளக்கில் வேண்டுமானாலும் ஏற்றலாம். இந்த தீபத்திற்கு நாம் பயன்படுத்தக்கூடிய எண்ணெய் என்பது சுத்தமான மர செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்யாக இருக்க வேண்டும். அதில் கவனம் செலுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக நமக்கு தேவைப்படுவது இரண்டு பொடிகள். ஒன்று துளசி பொடி, மற்றொன்று தசாங்க பொடி. இந்த தீபத்தை ஏற்றுவதற்கு எந்த திரியை வேண்டுமானாலும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். மகாலட்சுமி அம்சம் கொண்டதாக திகழ்கிறது துளசி. துளசி இருக்கும் இடத்தில் மகாலட்சுமி வாசம் என்பது நிச்சயமாக இருக்கும். பெருமாளின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.

இதேபோல்தான் ஒரு வீட்டில் தெய்வ சக்தி ஏற்பட வேண்டும் என்றால் தசாங்கத்தை தூபமாக போட்டு காட்ட வேண்டும் என்று கூறுவோம். நம் வீடு எந்த அளவிற்கு மணமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு தெய்வ சக்தி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் வீட்டில் தசாங்க தூபம் போட வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் அன்றைய காலத்தில் கூறியிருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த இரண்டு பொருட்களையும் நாம் தீபம் ஏற்றும் பொழுது பயன்படுத்தினோம் என்றால் நமக்கு அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும். எப்படி பயன்படுத்துவது? விளக்கை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள். அடுத்ததாக அதில் திரியை போட்டு அதற்கு மேல் ஒரு ஸ்பூன் அளவிற்கு தசாங்க பொடியும், ஒரு ஸ்பூன் அளவிற்கு துளசி பொடியையும் போட்டு தீபத்தை ஏற்றி விடுங்கள்.

அமாவாசை, பௌர்ணமி போன்ற தினங்களில் 24 மணி நேரமும் தீபம் எரிவது போல் போடுவது என்பது மிகவும் சிறப்பு. இந்த தீபம் வீட்டில் எரிய எரிய வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கும். எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி விட்டாலே அந்த இடத்தில் நேர்மறை ஆற்றல் என்பது குடியேறும். பிரச்சினைகள் தீரும் நன்மைகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே பிரச்சினைகள் தீர முருகன் வழிபாடு

மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த இரண்டு பொடிகளையும் பயன்படுத்தி நாம் வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். மேலும் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பு அதிகரிக்கும்.

சற்று முன்