
யாரிடமும் கூறவே முடியாமல் கஷ்டத்தில் இருந்து வெளியே வர முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டே இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தப்பிக்க இறைவன் காட்டிய வழி ஒன்றே துணை என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். இந்த கஷ்டத்தில் இருந்து தப்பிக்கவே முடியாது என்று நினைத்து தவறான முடிவை எடுக்கக் கூடிய நபர்களும் இருக்கிறார்கள். இனிமேல் உயிர் வாழ்வதில் எந்தவித அர்த்தமும் இல்லை என்று நினைக்கக் கூடியவர்கள் கூட நரசிம்மரை இந்த ஒரு மந்திரத்தை கூறி வழிபாடு செய்ய அவர்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போவதோடு நல்ல வாழ்க்கை வாழ்வதற்குரிய வழியையும் நரசிம்மர் காட்டுவார். அந்த மந்திர வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
முழுமனதோடு யார் ஒருவர் தெய்வத்தை நினைத்து வேண்டுகிறாரோ அவருக்கு தெய்வமே காட்சி அளிக்கும் என்பதற்கு உதாரணமாக திகழக்கூடியது தான் நரசிம்மரின் கதை. முழு மனதோடு நாராயணர் இருக்கிறார் என்று கூறியதன் பலனால் தான் நரசிம்மர் அவதாரமே தோன்றியது. அப்படிப்பட்ட நரசிம்மரை நாமும் முழுமனதோடு நம்பி வழிபாடு செய்தோம் என்றால் நரசிம்மர் நாம் வேண்டிய வரத்தை அருள்வார்.
பொதுவாக நரசிம்மரை வழிபாடு செய்வதற்கு மாலை நேரம் என்பது உகந்தது. இதோடு நரசிம்மர் வழிபாட்டிற்கு உகந்த தினமாக கருதப்படுவது சுவாதி நட்சத்திரம் வரக்கூடிய தினம். இன்று சுவாதி நட்சத்திரம் புதன்கிழமை. இன்றைய தினத்தில் மாலை நேரத்தில் நரசிம்மரை நாம் வழிபாடு செய்தோம் என்றால் நரசிம்மனின் அருள் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும். இந்த வழிபாட்டை செய்வதற்கு ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இயன்றவர்கள் நரசிம்மர் ஆலயத்திற்கு செல்லலாம். அருகில் நரசிம்மரின் ஆலயம் இல்லை என்பவர்கள் பெருமாள் ஆலயத்திற்கும் செல்லலாம். ஆலயத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் வீட்டிலேயே நரசிம்மர் அல்லது பெருமாளின் படத்திற்கு முன்பாக இந்த வழிபாட்டை செய்யலாம்.
இந்த வழிபாட்டை மாலை 4:30 மணிக்கு மேல் செய்வது மிகவும் சிறப்பு. பின்வரும் இந்த ஸ்லோகத்தை ஒரு நாளைக்கு மூன்று முறை கூறவேண்டும். இயன்றவர்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஒரு முறையும், உச்சி காலமான 12 மணியிலிருந்து 1 மணிக்குள் ஒரு முறையும், மாலை 6 மணிக்கு ஒரு முறையும் என்று மூன்று வேளைகளும் கூற வேண்டும். அவ்வாறு மூன்று வேளைகளும் கூற முடியாது என்பவர்கள் பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது மாலை நேரத்திலோ மூன்று முறை கூறலாம்.
இந்த மந்திரத்தை கூறுவதற்கு முன்பாக பெருமாளின் படத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். நரசிம்மரை மனதார நினைத்துக் கொண்டு பானகத்தை தயார் செய்து நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இந்த மந்திரத்தை கூற வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 48 நாட்கள் எந்த கஷ்டம் தீர வேண்டும் என்று நினைத்து இந்த மந்திரத்தை கூறுகிறோமோ அந்த கஷ்டம் நம்மை விட்டு விலகும். இதோடு மட்டுமல்லாமல் நம்முடைய கண்ணுக்குத் தெரிந்த தெரியாத எதிரிகளின் பிரச்சினைகள் முற்றிலும் நீங்கும். கோர்ட் கேஸ் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்.
“உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வ தோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்”
இதையும் படிக்கலாமே:கஷ்டங்களை தீர்க்கும் கால பைரவர் தீபம்
இந்த ஒரு மந்திரத்தை தொடர்ச்சியாக 48 நாட்கள் மூன்று முறை கூறுபவர்களுக்கு நரசிம்மரின் பரிபூரண அருள் கிடைக்க பெற்று அவர்களின் பிரச்சனைகள் அனைத்தும் காணாமல் போகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.