- Advertisement -

கேட்டதை கொடுக்கும் முருகன் வழிபாடு

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் நாம் அனுபவிக்க கூடிய அனைத்து விதமான கஷ்டங்களுக்கும், தடைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் காரணமாக திகழ்வது நம்முடைய கர்ம வினைகளே. நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையில் தான் நம்முடைய வாழ்க்கையே அமைகிறது என்று கூட கூறலாம். இப்படிப்பட்ட கர்ம வினைகளை நீக்கி நல்வாழ்க்கையை அமைப்பதற்கு பலவிதமான வழிபாடுகளும் பரிகாரங்களும் திகழ்கின்றன. இருப்பினும் ஒரு சில தெய்வங்களை நாம் தொடர்ச்சியாக வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய எப்பேற்பட்ட கர்ம வினைகளும் பலனளிக்காமல் நல்ல விதத்தில் வாழ்க்கையை வாழ முடியும். அப்படிப்பட்ட தெய்வங்கள் மிகவும் முக்கியமான ஒரு தெய்வமாக திகழ்பவர் தான் முருகப்பெருமான்.

முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு விதியால் எந்த வித பாதிப்புகளும் ஏற்படாது என்றும் எப்பேர்பட்ட மோசமான விதியாக இருந்தாலும் அந்த விதியை மாற்றி அமைத்து நல்ல தலைவிதியை எழுதக்கூடிய அற்புதமான கடவுளாகவும் முருகப்பெருமான் திகழ்கிறார். அப்படிப்பட்ட முருகப் பெருமானை நாம் அனுதினமும் பல விதங்களில் வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருந்தாலும் நீண்ட நாட்களாக கேட்டது கிடைக்கவில்லை என்ன செய்தும் நினைத்தது நடக்கவில்லை என்பவர்கள் இந்த முறையில் முருகப் பெருமானை வழிபாடு செய்தால் போதும். அப்படிப்பட்ட ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

கேட்டதை கொடுக்கும் முருகன் வழிபாடு

முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு பலவிதமான வழிமுறைகள் இருக்கின்றன. வீட்டிலேயே முருகப்பெருமானுக்காக தீபமேற்றி வைத்து வழிபாடு செய்யும் வழக்கமும் இருக்கிறது. ஆலயத்திற்கு சென்று தீபமேற்றி வழிபாடு செய்யும் வழக்கமும் இருக்கிறது. விரதம் இருந்தும் வழிபாடு செய்யலாம். விரதம் இல்லாமலும் வழிபாடு செய்யலாம். முருகப்பெருமானுக்குரிய பாடல்களை பாடியும் வழிபாடு செய்யலாம். இவற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு வழிப்பாடாக தான் முருகனுக்குரிய பாடல்களை பாடி முருகனை வழிபாடு செய்வது. உள்ளம் உருகி அவரை நினைத்து பாடி நாம் செய்யக்கூடிய வழிபாட்டிற்கு அதிக அளவு பலன் இருக்கிறது என்று பலவிதமான சான்றுகள் இருக்கின்றன. அப்படிப்பட்ட பாடல்களுள் மிகவும் முக்கியமான ஒரு பாடலாக திகழ்வதுதான் திருமுருகாற்றுப்படை.

இது நக்கீரலால் பாடப்பட்ட பாடல்கள் ஆகும். முருகப்பெருமானின் அருளால் நக்கீரர் இந்த திருமுருகாற்றுப்படையை பாடினார் என்றும், இதுதான் அறுபடை வீடுகளைப் பற்றி பாடப்பட்ட முதல் பாடல் என்றும், இந்த பாடலில் தான் முதல் படை வீடு திருப்பரங்குன்றம், இரண்டாம் படை வீடு திருச்செந்தூர், மூன்றாம் படை வீடு திருஆவினன்குடி, நான்காம் படை வீடு சுவாமிமலை, ஐந்தாம் படைவீடு திருத்தணி, ஆறாம் படைவீடு பழமுதிர்சோலை என்று முறைப்படுத்தப்பட்டு பாடப்பட்டது என்றும் கூறப்படுகிறது. யார் ஒருவர் இந்த திருமுருகாற்றுப்படையை அனுதினமும் முருகப் பெருமானுக்காக ஒரே ஒரு தீபத்தை ஏற்றி வைத்து பாடுகிறார்களோ அவர்களுக்கு அவர்கள் வேண்டியது கிடைக்கும் என்பது உறுதி. இதை தவிர்த்து நம்முடைய வாழ்க்கையை செம்மைப்படுத்துவதற்கு எதுவெல்லாம் வேண்டுமோ அது அனைத்தையும் முருகப்பெருமான் அருள்வார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: பணக்கார யோகம் பெற

முழு நம்பிக்கையோடு முருகப்பெருமானை நினைத்து முருகப் பெருமானுக்குரிய இந்த பாடலை பாடி வழிபாடு செய்பவர்களுக்கு முருகனின் அருளால் அனைத்தும் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -