
நம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் பிறரிடம் இருந்து கடனாக பணத்தை வாங்கி இருப்போம். அதே போல் ஏதாவது ஒரு சூழ்நிலையில் பிறருக்கு நாம் பண உதவி செய்திருப்போம். இந்த பண உதவி என்பது கடனாகவும் கொடுத்திருக்கலாம் அல்லது தங்களால் இயலும் பட்சத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் திருப்பித் தரலாம் வட்டி எதுவும் தேவையில்லை என்று கூறி இருக்கலாம். அப்படி நம் கையில் இருந்து பிறருக்கு போன பணம் திரும்பவும் நம் கைக்கு வராமல் தடைப்பட்டு கொண்டே இருக்கிறது என்று நினைப்பவர்கள் வெற்றிலையை வைத்து செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
ஒருவர் கஷ்டப்படும் சூழ்நிலையில் நம்மிடம் இருக்கக்கூடிய பணத்தை அவருக்கு உதவியாகவோ அல்லது கடனாகவோ தந்திருப்போம். அவர் நல்ல நிலைக்கு வந்த பிறகும் அந்த பணத்தை திரும்பத் தராமல் ஏமாற்றினாலோ அல்லது அவர்களால் திரும்ப தர முடியாத ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தாலும் அதனால் நமக்கும் பலவிதமான பிரச்சனைகள் உண்டாகும். அந்த பிரச்சினையை தீர்த்து நமக்கு வரவேண்டிய பணம் விரைவிலேயே வருவதற்கு செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
இந்த பரிகாரத்தை புதன்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். புதன்கிழமையில் வரக்கூடிய புதன் ஹோரையில் தான் செய்ய வேண்டும். புதன் ஹோரை என்பது காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் வரும். இந்த மூன்று நேரத்தில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். இதற்கு கிழியாத நல்ல நிலையில் இருக்கக்கூடிய பச்சை நிறத்தில் உள்ள வெற்றிலை வேண்டும். இந்த வெற்றிலையை சுத்தமான தண்ணீரை கொண்டு பயன்படுத்தி ஈரம் இல்லாமல் துடித்துக் கொள்ளுங்கள்.
பிறகு உங்களுடைய சுண்டு விரலை பயன்படுத்தி நெய்யை எடுத்து அந்த வெற்றிலையின் மீது முழுமையாக தடவ வேண்டும். இவ்வாறு ஐந்து வெற்றிலைகளையும் தடவி ஒரு வெற்றிலையின் மேல் மற்றொரு வெற்றிலை என்று 5 வெற்றிலையும் அடுக்கிக் கொள்ளுங்கள். கடைசியாக மேலே இருக்கக்கூடிய வெற்றிலையில் ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து வைத்து ஒரு நூலை பயன்படுத்தி வெற்றிலையை மடித்து நன்றாக கட்டி விடுங்கள்.
கட்டிய இந்த வெற்றிலையை பணம் இருக்கும் இடத்திலோ அல்லது பூஜையறிலோ வைக்க வேண்டும். பூஜை அறையில் வைத்து முழுமனதோடு வரவேண்டிய பணம் எந்தவித தடைகளும் இல்லாமல் வந்து சேர வேண்டும் என்றும் முழு மனதோடு வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு இதை எடுத்து பணம் இருக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் இந்த வெற்றிலை பணம் இருக்கும் இடத்தில் இருக்க வேண்டும். ஐந்தாவது நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த வெற்றிலையை எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு அதில் இருக்கக்கூடிய ஐந்து ரூபாயை மட்டும் தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
குலதெய்வ ஆலயத்திற்கு எப்பொழுது செல்கிறீர்களோ அப்பொழுது அந்த நாணயத்தை உண்டியலில் சேர்த்து விட வேண்டும். ஒவ்வொரு புதன்கிழமை தோறும் தொடர்ச்சியாக 5 வாரங்கள் எந்த பணம் நமக்கு வந்து சேர வேண்டும் என்று இந்த பரிகாரத்தை செய்கிறோமோ அந்தப் பணம் விரைவிலேயே நம்மை வந்து சேரும்.
இதையும் படிக்கலாமே:முருகனின் அருளை பெற உதவும் தீபம்
எளிமையான இந்த வெற்றிலை பரிகாரத்தை முழுமனதோடு செய்பவர்களுக்கு விரைவிலேயே அவர்கள் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.