- Advertisement -

நவராத்திரியின் நற்பலன்கள்! மனக்கவலை நீங்க நவராத்திரியின் 6ஆம் நாள் வழிபாட்டை நம்முடைய வீட்டில் சுலபமாக எப்படி செய்வது?

அலை மகளான மகாலட்சுமி தேவியின் வழிபாட்டை நிறைவு செய்யக்கூடிய நாள் தான் நவராத்திரியின் ஆறாம் நாள். மகாலட்சுமியின் அருளை முழுமையாகப் பெற இந்த நாளை நம்முடைய வீட்டிலேயே சுலபமாக எப்படிக் கொண்டாடப் போகிறோம் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மகாலட்சுமியின் வழிபாட்டை நிறைவு செய்யும் இந்த தினத்தில், மகாலட்சுமிக்கு உகந்த ஒரு மந்திரத்தை நம் உச்சரித்து இந்த வழிபாட்டை நிறைவு செய்வது மேலும் சிறப்பு. பல பேர் அறிந்த, சில பேர் அறியாத, ஆதிசங்கரர் அருளிய கனகதார ஸ்தோத்திரத்தை தான் இன்று நாம் முதலில் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த கனகதாரா ஸ்தோத்திரம் உருவான கதையை இத்திருநாளில் சுருக்கமாக நாம் தெரிந்துகொள்வோமா?

ஒருமுறை, யாசகம் வேண்டி மூதாட்டி ஒருவரின் வீட்டிற்கு செல்கின்றார், ஆதிசங்கரர். ஆனால், அந்த மூதாட்டி ஏழ்மை நிலையில், தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர். இருப்பினும் யாசகம் கேட்டு வந்த ஆதிசங்கரரின் பசியைப் போக்குவதற்காக, அந்த மூதாட்டி தன்னிடம் இருந்த, ‘தனக்கும் தன் கணவரின், பசியை போக்குவதற்காக வைத்திருந்த காய்ந்த ஒரே ஒரு நெல்லிக்கனியை,’ யாசகம் கேட்டு வந்த ஆதிசங்கரருக்காக கொடுத்து விட்டார்.

- Advertisement -

அந்த மூதாட்டியின் வறுமை நிலையை உணர்ந்த ஆதிசங்கரர், ‘இந்த நிலைமையிலும் யாசகம் கேட்டு வந்தவருக்கு ‘இல்லை’ என்ற வார்த்தையை சொல்லாமல், பிச்சை வழங்கிய அந்த மூதாட்டிகாக’, அந்த மூதாட்டியின் ஏழ்மை நிலையை போக்குவதற்காக, மகாலட்சுமி தேவியை வேண்டி, மனமுருகி இந்த கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடினார், ஆதிசங்கரர்.

இந்தப் பாடலுக்கு மனம் உருகிய மகாலட்சுமி, அந்த மூதாட்டியின் வீட்டில் பொற்காசு மழையை பொழிய வைத்ததாக கூறுகிறது வரலாற்று கதை. எவரொருவர் சுயநலமற்ற, தான தர்ம காரியங்களில் ஈடுபட்டு, அடுத்தவர்களது பசியைப் போக்கி, மகா லட்சுமி தாயாரை வேண்டிக்கொண்டு, இந்த ஸ்தோத்திரத்தை உச்சரித்தாலும் சரி, நிச்சயம் அவர்களது வீட்டிலும் பணமழை பொழியும் என்பதில் சந்தேகமே கிடையாது. உங்களுக்கான அந்த கனகதாரா ஸ்தோத்திரம் இதோ!

- Advertisement -

வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே

இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை, முறைமை நல்குமே.

- Advertisement -

செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர், உய்ய நல்குமே.

நீறு பூசினீர், ஏற தேறினீர்
கூறு மிழலையீர், பேறும் அருளுமே.

காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர், சேமம் நல்குமே.

பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே.

மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்
கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே.

அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே.

அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்
இயலும் மிழலையீர், பயனும் அருளுமே.

பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர், பிரிவ தரியதே.

காழி மாநகர், வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே.

– திருஞானசம்பந்தர்

இன்றைய தினம் அம்பாளை ‘சண்டிகா தேவி’ என்ற பெயர் கொண்டு வழிபட வேண்டும். அம்பாளுக்கு உகந்த பூ, சிவப்பு செம்பருத்தி. நார்த்தம்பழம் இன்றைய தினத்தில் அம்பாளுக்கு உகந்த கனியாக சொல்லப்பட்டுள்ளது. நைவேத்தியமாக, தேங்காய் சாதம் செய்து பிரசாதமாக கொடுப்பது மேலும் சிறப்பினை தேடித்தரும். வீட்டில் இருக்கும் பெண்கள் கிளி பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொள்ள வேண்டும்.

கிளி பச்சை நிறத்தில் ரவிக்கை துணி, வளையல்களை சுமங்கலிப் பெண்களும் கன்னிப் பெண்களுக்கும் தானமாக கொடுப்பது நல்லது. இந்த முறைப்படி உங்களுடைய வீட்டில் வழிபாடு செய்தால் மனக்கவலை நீங்கும். வீட்டில் சந்தோஷம் நிறைந்திருக்கும். துன்பத்தை எதிர்கொள்ளும் மன உறுதியை அதிகரிக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நவராத்திரியின் நற்பலன்கள்! எந்த வரத்தைக் கேட்டாலும், அது உடனே கிடைக்க, நவராத்திரியின் 5ஆம் நாள் வழிபாட்டை நம்முடைய வீட்டில் சுலபமாக எப்படி செய்வது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -