நவராத்திரியின் நற்பலன்கள்! எந்த வரத்தைக் கேட்டாலும், அது உடனே கிடைக்க, நவராத்திரியின் 5ஆம் நாள் வழிபாட்டை நம்முடைய வீட்டில் சுலபமாக எப்படி செய்வது?

mahalashmi

நவராத்திரியின் ஐந்தாம் நாள், அலை மகளான மகாலட்சுமி தேவியை வழிபடக்கூடிய, இரண்டாவது நாள். நவராத்திரியின் நடு நாள் என்று கூட இந்த தினத்தை சொல்லலாம். குறிப்பாக இந்த நாளில் நாம் மகாலட்சுமியை என்ன பெயர் கொண்டு வழிபட போகின்றோம்? எந்த முறைப்படி வழிபாடு செய்தால் அஷ்ட லட்சுமிகளின் அருளைப் பெற முடியும், என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இன்றைய அவசர வாழ்க்கையில், நம்முடைய குழந்தைகளுக்கு, நம்முடைய பாரம்பரிய பண்டிகைகளின் அவசியம் என்னவென்றே தெரியாமல் போய்க் கொண்டிருக்கின்றது.

முடிந்தவரை, உங்களுடைய வீட்டில் பண்டிகைகளைக் கொண்டாடும் போது, அந்த பண்டிகையின் மகத்துவத்தை, உங்களுடைய வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்து, மகிழ்ச்சியாக கொண்டாட செய்வது, மிகவும் நல்லது. நம்முடைய குடும்ப பாரம்பரிய வழக்கங்களை, அடுத்த சந்ததியினருக்கு கொண்டுபோய் சேர்க்கக்கூடிய கடமையும் நம்மிடம் உள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு இந்த பதிவினை தொடங்கலாம்.

இந்த நவராத்திரியின் ஐந்தாவது நாளில் அம்பாளை மோகினி என்ற பெயரைக் கொண்டு வழிபட போகின்றோம். உங்களுடைய வீட்டு வாசலில் பறவைகள் வடிவில் இருக்கக்கூடிய கோலத்தை போடுவது மிகவும் நல்லது. அதாவது மயில், அன்னப்பறவை இப்படிப்பட்ட கோலங்களை வரைந்து வண்ணங்களை தீட்டலாம்.

madhulai

நவராத்திரியின் 5-வது நாளான இன்று குறிப்பாக மாதுளை பழத்தை நெய்வேதியம் வைப்பது மேலும் சிறப்பினை தேடித்தரும். முடிந்தால் மாதுளை பழத்தை உரித்து, அதன் உள்ளே இருக்கும் முத்துக்களை ஒரு கிண்ணத்தில் தனியாக போட்டு, உங்கள் வீட்டில் இருக்கும் அம்பாளின் திருவுருவப் படத்திற்கு ‘ஓம் மகாலட்சுமியே போற்றி’ என்ற மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்வது நம் வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொண்டுவரும். அர்ச்சனை செய்த அந்தப் பழத்தை குழந்தைகளுக்கு தானமாக கொடுக்கலாம்.

- Advertisement -

இன்றைய தினத்தில் தயிர்சாதம் நைவேத்தியமாக படைக்க வேண்டும். சிவப்பு நிறத்தில் வீட்டில் இருக்கும் பெண்கள் ஆடைகளை அணிந்து கொள்வது வீட்டுக்கு மங்களத்தை தேடித்தரும். உங்கள் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கும், சுமங்கலிப் பெண்களுக்கும் சிவப்பு நிற வளையல், சிவப்பு நிற ரவிக்கைத் துணியை தானமாக கொடுக்கலாம். அம்பாளுக்கு பாரிஜாத மலரை சூட்ட வேண்டும்.

ashtalakshmi

அஷ்ட லட்சுமிகளில் எந்த லட்சுமியின் அருள் உங்களுக்கு தேவையோ, அந்த லட்சுமியை நினைத்து பூஜை செய்யலாம். மிகவும் பயந்த சுபாவம் உள்ளவர்கள், தைரியலட்சுமி நினைத்து பிரார்த்தனை செய்யலாம். குழந்தை வரம் வேண்டும் என்று நினைப்பவர்கள் சந்தானலட்சுமி நினைத்து பிரார்த்தனை செய்யலாம். வீட்டில் அரிசி, பருப்பு, தானியங்கள் குறைவில்லாமல் இருக்க வேண்டும், விவசாயத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தானியலட்சுமி நினைத்து வழிபாடு செய்யலாம். இப்படியாக உங்களுக்கு விருப்பமான லட்சுமியை வேண்டி மனதார பிரார்த்தனை செய்தால் கைமேல் பலன் நிச்சயம் உண்டு.

Kondai Kadalai

நவராத்திரியின் ஒன்பது நாட்களையும் உங்களால் கொண்டாட முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. இந்த நவராத்திரி முடிவதற்குள் ஏதாவது ஒரு நாளில், ஏதாவது ஒரு தானியத்தில் வெறும் சுண்டலை நைவேத்தியமாக செய்து, அந்த சுண்டலை அம்பாளுக்கு படைத்து, உங்கள் அக்கம் பக்கம் இருக்கும் குழந்தைகளை உங்கள் வீட்டிற்கு அழைத்து, அவர்களுக்கு அந்த பிரசாதத்தை வினியோகம் செய்வது, மிகவும் நல்லது.

praying-god

எதுவுமே உங்களால் செய்ய முடியாட்டியும், வெறும் சுண்டல் மட்டும் செய்தாவது, அம்பிகையை வழிபட வேண்டும். நவராத்திரியின் இந்த ஒன்பது நாளில் நாம் எந்த ஒரு வேண்டுதலை அம்பாளிடம் வேண்டிக் கொண்டாலும், அந்த வேண்டுதல் வெகு சீக்கிரமே நிறைவேறி விடும். ஏனென்றால், இந்த நவராத்திரி தினத்தில் அம்பாளின் மனது குளிர்ந்திருக்கும். அம்பாள் சந்தோஷமாக இருக்கக்கூடிய இந்த சமயத்தில் வரங்களைப் பெற நாம் தவறி விடக்கூடாது, என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நவராத்திரியின் நற்பலன்கள்! மகாலட்சுமியை நம் வீட்டிற்குள் அழைக்க, செல்வ செழிப்பான வாழ்க்கையை பெற, நவராத்திரியின் நான்காம் நாள் வழிபாட்டை நம் வீட்டில் எப்படி செய்வது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.