
வாழ்க்கையில் பலருக்கும் பலவிதமான கஷ்டங்கள் ஏற்படுவதுண்டு. இதில் பெரும்பாலான கஷ்டங்கள் பணத்தால் ஏற்படக்கூடிய கஷ்டங்கள் தான். தங்களிடம் பணம் இல்லாத சூழ்நிலையில் ஏதாவது ஒரு செலவு ஏற்படும் பொழுது அந்த நேரத்தில் அவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியாத சூழ்நிலை உண்டாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையை தான் பண நெருக்கடி என்று கூறுகிறோம். இப்படி பண நெருக்கடி ஏற்படும் போதுதான் பலரும் கடன் வாங்கி அதை சமாளிப்போம் என்று முடிவெடுப்பார்கள். இந்த கடன் வாங்கும் சூழ்நிலையை தவிர்க்கவும், பண நெருக்கடி வராமல் இருப்பதற்கும் பஞ்சமி திதி அன்ற வாராகி அம்மனை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
இக்கட்டான சூழ்நிலையாக இருந்தாலும் அந்த சூழ்நிலையை சமாளிக்கும் அளவிற்கு பணவரவு நமக்கு வந்துவிட்டால் கடன் வாங்க வேண்டும் என்ற சூழ்நிலையே வராது. அப்படி பணவரவு ஏற்படுவதற்காக நாம் பல தெய்வங்களை வழிபட்டாலும் சிறப்பு மிகுந்த திதிகளுக்குரிய தெய்வங்களை நாம் வழிபடும் பொழுது அதன் பலன் இன்னும் அதிகமாக இருக்கும். அந்த வகையில் இன்று பஞ்சமி திதி அதுவும் ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்ந்து வருகிறது இன்றைய தினத்தில் வாராகி அம்மனை நாம் மிகவும் எளிமையான முறையில் வழிபாடு செய்து பண நெருக்கடியை தவிர்க்க முடியும்.
மாலை ஆறு மணியிலிருந்து ஏழு முப்பது மணிக்குள் வீட்டிலேயே இந்த வழிபாட்டை நாம் செய்யலாம். வராகி அம்மனின் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்பவர்களாக இருந்தாலும் வீட்டில் இந்த முறையில் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு பல நன்மைகள் உண்டாகும். ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் வாசனை நிறைந்த மலர்களை பரப்பிக் கொள்ளுங்கள். அதன் நடுவே ஒரு அகல் விளக்கை வைக்க வேண்டும். இந்த அகல் விளக்கில் ஐந்து எண்ணிக்கையில் மஞ்சள் குங்குமம் வைத்திருக்க வேண்டும். பிறகு இதில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுங்கள். இந்த தீபத்திற்கு முன்பாக தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.
இந்த தீபம் வடக்கு பார்த்தவாறு தான் எரிய வேண்டும். இந்த தீபத்தை சற்று உற்று நோக்கி அந்த தீபத்தில் வாராகி அம்மன் வீற்றிருப்பது போல் உணர்ந்து கொள்ளுங்கள். பிறகு உங்களுடைய பண நெருக்கடிகள் அனைத்தும் தீர வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்துவிட்டு அந்த தீபத்தை மூன்று முறை வலம் வர வேண்டும். இவ்வாறு வலம் வரும்பொழுது வாராகி அம்மனின் ஒரு மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரத்தை உச்சரித்தவாறு தீபத்தை வலம் வந்து வணங்குவதன் மூலம் வாராகி அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெறும் பண நெருக்கடிகள் எதுவும் ஏற்படாது. கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகாது. செலவுக்கேற்ற பணவரவு என்பது வந்து கொண்டே இருக்கும்.
இதையும் படிக்கலாமே:எதிரி தொல்லை நீங்க சரபேஸ்வரர் வழிபாடு
இந்த எளிமையான வழிபாட்டு முறையை நாமும் இன்று மாலை வாராஹி அம்மனை நினைத்து செய்து பண நெருக்கடிகள் எதுவும் ஏற்படாமல் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வோம் என்ற தகவலை கூறு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.