வாழ்க்கையில் எதிரிகளால் சில பேருக்கு பெரிய அளவில் பிரச்சனைகள் இருக்கும். அதற்காக ஒரு மனிதனால் எதிரியே இல்லாமலும் வாழ முடியாது. வேலை பார்க்கும் இடத்தில், தொழில் செய்யும் இடத்தில், நம் வீட்டு அக்கம் பக்கத்திலும் கூட நமக்கு எதிராக பேசுபவர்கள், எதிரிகளாக இருக்கத்தான் செய்வார்கள். அதையெல்லாம் பெருசாக எடுத்துக் கொண்டு நம்முடைய எதிரிகள் எல்லாம் அழிந்து போக வேண்டும் என்று என்றைக்குமே சாமி கும்பிடக் கூடாது.
ஆனால் ஒரு சில பேர் வாழ்க்கையில், ஒரு சில எதிரிகளால் பெரும் அளவில் பாதிப்பு ஏற்படும். நம்மை வாழவே கூடாது என்று நமக்கு ஏவல் பில்லி சூனியம் போன்ற எதிர்மறை ஆற்றலை ஏவி விடுவது, நம்முடைய குடும்பத்தை அழிப்பதற்கு ப்ளான் செய்வது, வேண்டுமென்றே வந்து நம்முடைய தொழிலை கெடுப்பது, வேண்டுமென்றே வந்து நாம் வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சனை செய்து வேலையை விட்டு நம்மை தூக்கும் அளவுக்கு கலகம் ஏற்படுத்துவது போன்ற பிரச்சனைகளை ஒரு சில பேர் செய்வார்கள்.
இப்படிப்பட்டவர்களை எல்லாம் நம்மிடம் நெருங்க விடக்கூடாது. இப்படிப்பட்டவர்களை நம்மிடம் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும். எதிரிகள் அழிய வேண்டாம். எதிரிகள் நம் பக்கம் தலை வைத்து கூட படுக்கக் கூடாது. நம் வாழ்க்கையில் எதிரிகள் இடர்பாடுகளை உண்டாக்க கூடாது என்றால் நாம் செய்ய வேண்டிய இரண்டு வழிபாடுகளை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த இரண்டு வழிபாடுகளையும் நீங்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று செய்தாலே போதும். எதிரிகளிடமிருந்து சுலபமாக தப்பிக்கலாம்.
சரபேஸ்வரர் வழிபாடு
முதல் வழிபாடு எதிரிகளை அழிப்பதற்கு சரபேஸ்வரர் வழிபாடு. சரபேஸ்வரரை சிவனின் அம்சமாக சொல்கிறார்கள். பெருமாள், பக்த பிரகலாதனை அழிப்பதற்கு நரசிம்ம அவதாரம் எடுத்து ரொம்பவும் உக்கிரத்துடன் கோபத்துடன் இருந்தார். அவரை சாந்தம் செய்ய யாராலும் முடியவில்லை.
அந்த நேரத்தில் சிவபெருமான், சரபேஸ்வரராக அவதாரம் எடுத்து, நரசிம்மரை கட்டி அனைத்து அவருடைய கோபத்தை தணித்ததாக சொல்லப்பட்டுள்ளது. இந்த சரஸ்வீஸ்வரரை வணங்குபவர்களுக்கு எதிரி தொல்லை, கண் திருஷ்டி தொல்லை, ஏவல் பில்லி சூனியத்தால் தொல்லை, என்பது இருக்காது.
சரஸ்வதேஸ்வரரை வணங்குவதற்கு உகந்த நேரம் பிரதோஷ நேரமாகும். பிரதோஷம் வரும்போது சர்பேஸ்வரரை மனதார நினைத்து ‘ஓம் சரபேஸ்வரரே போற்றி போற்றி’ என்ற மந்திரத்தை உச்சரித்து வழிபடுவது சிறப்பு. ஞாயிற்றுக்கிழமை வரக்கூடிய ராகு கால நேரத்தில் இந்த சரபேஸ்வரரை வழிபாடு செய்யலாம். ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6 மணி வரை ராகுகால நேரம்.
இந்த நேரத்தில் சரபேஸ்வரரை மனதார நினைத்து உங்களுக்கு இருக்கும் எதிரி தொல்லைகள் நீங்க வேண்டும் என்று ‘ஓம் சரபேஸ்வரரே போற்றி’ என்ற மந்திரத்தை 27 முறை உச்சரித்து வழிபாடு செய்தால் உங்களுக்கு இருக்கும் எதிரி தொல்லை நீங்கும். உங்கள் வீட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டும் சரபேஸ்வரரை மனதார நினைத்து மேல் சொன்ன வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
எதிரி தொல்லை விலக சூரிய பகவான் வழிபாடு
ஞாயிற்றுக்கிழமை காலை 5:30 மணி அளவில் எழுந்த உடன், குளித்துவிட்டு சூரியன் நமஸ்காரம் செய்ய வேண்டும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வந்தாலும் உங்களுக்கு எதிரிகளால் பிரச்சனை இருக்காது. இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளாவது சூரிய நமஸ்காரம் செய்யுங்கள் சூரியனை நமஸ்காரம் செய்துவிட்டு ‘சத்ரு நாசாய ஓம் ஹ்ரீம் க்ரீம் சூர்யாய நமஹ !’ என்ற இந்த மந்திரத்தை காலை 6:00 மணி அளவில் 27 முறை சொல்லி வந்தாலும் உங்களுடைய வாழ்க்கையில் எதிரி பிரச்சனை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: யோக பஞ்சமி வழிபாடு
மேலே சொன்ன இரண்டு வழிபாடும் ஞாயிற்றுக்கிழமை செய்யக்கூடிய வழிபாடுகள் தான். மேலே சொன்ன இரண்டு வழிபாடுகளையும் சேர்த்து செய்வதாக இருந்தாலும் சரிதான். முடியாது ஏதாவது ஒரு வழிபாடு தான் செய்ய முடியும் என்றாலும் செய்து கொள்ளுங்கள். பலன் நீங்கள் எதிர்பார்க்காத அளவு அபரிவிதமாக கிடைக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.