- Advertisement -
ஆரோக்கியம்

பாகற்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

நாம் சாப்பிடும் உணவுகள் சத்து நிறைந்ததாக இருக்க, உணவுடன் சேர்த்து எடுத்து கொள்ளப்படும் பதார்த்தங்கள் காய்கள் கொன்டு செய்யப்பட்டதாக இருப்பது அவசியம். பல வகையான காய்கள் இருந்தாலும், பலரும் சுலபத்தில் சாப்பிட விரும்பாத அதே நேரத்தில் நன்மைகள் பலவற்றை தரும் ஒரு காயாக பாகற்காய் இருக்கிறது. இந்த பாகற்காய் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பாகற்காய் நன்மைகள்

பருக்கள்
பாகற்காயை சாப்பிடுபவர்களுக்கு முகத்தில் உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் ஆகியவை எளிதில் நீங்கும். பாகற்காயை சாறு பிழிந்து, அதனுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து, தினந்தோறும் வெறும் வயிற்றில் ஆறு மாதம் பருகி வந்தால் மேற்கூறிய பிரச்சனை இருப்பவர்கள் சிறப்பான பலன்களை பெறலாம்.

- Advertisement -

நீரிழிவு

நீரிழிவு நோயில் டைப் 2 வகை நீரிழிவு நோய் சற்று கடுமையான நோயாக இருக்கிறது. இதை வகையான நீரிழிவு நோய்க்கு எதிராக பாகற்காய் சிறப்பாக செயல்படுகிறது. பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப்பொருள் இன்சுலின் போல செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இதனால் நீரிழிவு பிரச்சனை கொண்டவர்களுக்கு நன்மையை உண்டாக்குகிறது பாகற்காய்.

- Advertisement -

மலச்சிக்கல்

நார்ச்சத்து நிறைந்துள்ள காய்களில் பாகற்காயும் ஒன்று. இதன் காரணமாக இதை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் உணவு நன்றாக செரிமானம் ஆக உதவுகிறது. மேலும் தீவிரமான மூலம், மலச்சிக்கல் பிரச்சனைகளையும் சுலபத்தில் பாகற்காய் தீர்க்கிறது.

- Advertisement -

சிறுநீரகங்கள்

சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைப் மற்றும் அதை சார்ந்த உறுப்புக்கள் சிறப்பாக செயல்பட பாகற்காய் உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் இது பாகற்காய் உதவுகிறது. சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட விரும்புபவர்கள் வாரம் ஒருமுறை பாகற்காய் சமைத்து சாப்பிடுவது நல்லது.

உடல் எடை

இன்று பலருக்கும் தங்களின் உடலின் அதீத எடையை குறைப்பதே தலையாய பிரச்சனையாக உள்ளது. பாகற்காய் சாப்பிடுபவர்கள் உடலின் செரிமான மண்டலத்தை நன்றாக தூண்டப்பட்டு உணவு நன்றாக செரிமானம் ஆகச் செய்கிறது. இதனால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் மட்டும் உணவில் இருந்து எடுக்கப்பட்டு வேகமாக உடல் எடையை குறைக்கிறது.

புற்று நோய் தடுப்பு

நமது உடலில் இருக்கும் செல்களில் ஏற்படும் பல மாற்றங்களாலும், உடலில் சேரும் பல வகையான நச்சுக்களின் சேர்மானத்தினாலும் புற்று நோய் ஏற்படுவது அதிகரிக்கிறது. அன்றாடம் பாகற்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை சாப்பிடுவதால் எந்த ஒரு வகையான புற்று நோய்களும் தோன்றுவது மிகவும் குறைவாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதயம்

நமது உடலின் முக்கிய உறுப்பான இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருந்தாலும், இதயத்திற்கு நலத்தை தருகின்ற உணவுகள் மற்றும் மூலிகைகளை சாப்பிட்டு வருவது நல்லது. பாகற்காய் சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.

நோயெதிர்ப்பு சக்தி

பாகற்காய் இயற்கையிலேயே மிகுந்த காரத்தன்மை மற்றும் அமிலத்தன்மை கொண்ட ஒரு காயாக இருக்கிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தி அதிகரித்து உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பல்வேறு வகையான தொற்று கிருமிகளின் பாதிப்பிலிருந்து உடலை காக்கும்.

கல்லீரல்

சிலருக்கு கல்லீரலில் அதிகளவு நச்சுகள் சேருவதாலும், அதீத அழற்சியினாலும் கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது. இந்த பிரச்னையை சரி செய்வதில் பாகற்காய் ஒரு சிறந்த இயற்கை மருத்துவ உணவாக இருக்கிறது. வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை பாகற்காய் சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் நீங்கி கல்லீரல் வீக்கம் குணமாகிறது.

ஊட்டச்சத்து

வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் பாகற்காயில் நிறைந்துள்ளன இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாகற்காய் சாப்பிடுவவதால் பல நன்மைகள் பெறலாம்.

இதையும் படிக்கலாமே:
கரும்பு பயன்கள்

இது போன்று மேலும் பல சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Pavakkai benefits in Tamil. It is also called as Pavakkai payangal in Tamil or Pavakkai maruthuvam in Tamil or Pavakkai gunangal in Tamil or Pagarkai maruthuva payangal in Tamil.

- Advertisement -