
ஒரு வீட்டில் சமையல் அறை அமைப்பு வாஸ்துபடி சரியாக அமைந்து விட்டால், பாதி பிரச்சனை குறைந்தது என்று கொள்ளலாம். அந்த அளவிற்கு சமையலறை அமைப்பும், அதை பயன்படுத்தும் முறையும், ரொம்பவே முக்கியமானதாக பகிரப்படுகின்றது. ஒருவருக்கு கடன் சுமை அதிகம் ஆவதற்கும், குறைவதற்கும் இந்த சமையலறை எப்படி பங்கு பெறுகிறது? என்பதைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை அறிந்து கொள்வோம் வாருங்கள்.
நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் எல்லாம் ஒரு விஷயத்தை கேள்வி பட்டிருப்போம். இரவில் தேவாதி தேவதைகள் நம் வீட்டிற்கு உலா வருவார்களாம். அதனால் அந்த சமயத்தில் சமையலறையை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பார்கள். மேலும் அடுப்பின் மீது இந்த ஒரு பொருளை தவறாமல் வைத்திருக்க வேண்டும் எனவும் கூறவார்கள். அது உண்மை தான்.
தேவதைகள் நம் வீட்டில் இரவில் வருகை தருவது உண்டு. அந்த சமயத்தில் அடுப்பங்கரை சுத்தமில்லாமல் இருந்தால், நமக்கு கடன் சுமை அதிகரிக்கும். எச்சில் பாத்திரங்களை இரவில் அப்படியே போட்டு வைத்தால், கடன் பாரம் அந்த குடும்பத்தினர் ஏற்க வேண்டி இருக்கும். கடன் சிக்கலில் இருந்து மீள முடியாமல் தவிப்பார்கள். அதனால் தான் இரவில் பாத்திரங்களை சுத்தமாக கழுவி கவிழ்த்து விட வேண்டும்.
அப்படி சுத்தம் செய்யும் பொழுதும், அடுப்பங்கரையில் ஒரு பருக்கை கூட இல்லாமல் எல்லாவற்றையும் துடைத்து விடக்கூடாது என்பார்கள். அடுப்பின் மீது ஒரு சிறு பாத்திரத்தில் கொஞ்சம் சாதத்தை வைத்து தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். அதிதேவதைகள் வரும் பொழுது நமக்காக சாப்பிட ஏதோ வைத்திருக்கிறார்கள் என்று மனம் மகிழ்ச்சி கொண்டு, நமக்கு வரம் அளிப்பார்கள். எதுவுமே சாப்பிட இல்லை என்றால் சாபம் கொடுப்பார்கள்.
இரவில் மீந்து போன சாதத்தை தண்ணீர் ஊற்றி எப்பொழுதும் வைத்து விட வேண்டும். சாதம் மீந்து போகாமல் இருந்தாலும், ஒரு கைப்பிடி அளவிற்கு சாதத்தையாவது ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி வையுங்கள். அதுவுமே இல்லை என்றாலும், வெறும் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பின் மீது வைக்க வேண்டும். அடுப்பை காலியாக வைத்திருக்கக் கூடாது. இது கடன் சுமையை அதிகரிக்க வழிவகை செய்யும். சமையலறையில் குப்பைகளை, துடைப்பத்தை வைக்கக் கூடாது. தண்ணீரை ஒழுக விடக் கூடாது. இரவு நேரங்களில் ஈர துணிகளை போடக் கூடாது. அடுப்பங்கரையை இப்படி வைத்துக் கொண்டால் கடன் சேரவே சேராது.
இதையும் படிக்கலாமே:
நிலை வாசல் கதவை திறக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்
எத்தனை அடுப்பு இருந்தாலும், அத்தனை அடுப்புகளிலும் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடி வையுங்கள். காலையில் எழுந்ததும் அந்த நீரை செடிகளுக்கு ஊற்றி விடுங்கள். பழைய சாதத்திற்கு வெளிநாடுகளில் எல்லாம் எவ்வளவு டிமாண்ட் தெரியுமா? இரவு சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்தால் மறுநாள் காலையில் அந்த தண்ணீரில் நுண்ணுயிர் பெருக்கம் அதிகரித்திருக்கும். இந்த நுண்ணுயிர்கள் உடலில் பல்வேறு நன்மைகளை நமக்கு செய்யக்கூடியது. உடல் உஷ்ணத்தை தனித்து நவீன கால பல நோய்களை விரட்டியடிக்க கூடியது. சாதத்தை நம்மால் சாப்பிட முடியாவிட்டாலும், சாதத்தை நன்கு கரைத்து விட்டு அதன் தண்ணீரை மட்டுமாவது வெறும் வயிற்றில் காலையில் குடித்து விடுங்கள். நீங்கள் குடிக்காவிட்டாலும், வீட்டில் வளரும் செடி, கொடிகளுக்கு ஊற்றி பாருங்கள் நல்ல ஊட்டச்சத்துக்கள் அதற்கு கிடைத்து செழித்து செழிப்பாக வளரும்.