- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

ஒவ்வொரு பெண்ணும் சமையலறையில் கட்டாயம் செய்யும் ஒரு தவறு. தெரியாமல் இந்த தவறை செய்திருந்தால் இனி திருத்திக் கொள்ளுங்கள்.

இது எந்த தவறைப் பற்றிய பதிவு என்று தெரிந்து கொள்வதற்கு முன்பாக, இந்த தவறை நீங்கள் தெரியாமல் செய்திருந்தால் அந்த தவறை தாராளமாக திருத்திக்கொள்ள முடியும். ஆனால், தெரிந்தே சில பெண்கள் செய்யும் இந்த தவறு மிகப் பெரிய தப்பு. தெரிந்தே செய்தால் அது தப்பு தானே! பிழை என்று உணர்ந்து, இன்றோடு இந்த தவறை நீங்கள் திருத்திக் கொள்வீர்கள் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டு, பின்பு இந்த பதிவினை படிக்கத் தொடங்கலாம். உடனடியாக திருத்திக் கொள்ளும் அளவிற்கு அவ்வளவு பெரிய பிழையா? என்னவாக இருக்கும்? என்று தானே சிந்திக்கிறீர்கள்! இது ஒரு சிறிய தவறு தான். ஆனால் நம்முடைய வீட்டிற்கு பெரிய பாதிப்பை தேடித் தருவதாக சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய வீட்டில் இருப்பவர்களை கேட்டால் சொல்வார்கள். இது எத்தனை பாதிப்பை ஏற்படுத்தும் என்று!. ஏனென்றால், நீங்கள் செய்யும் இந்த தவறுக்கான கஷ்டத்தை, வீட்டில் இருப்பவர்கள் தான் அனுபவித்திருப்பார்கள். அது என்ன தவறு? தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்!

சமையலறையில் சமைக்கும் போது பெண்கள் சில சமயம் கவனக்குறைவினால், சமைப்பதை கருக விட்டுவிடுவார்கள். அதாவது, தீய விட்டு விடுவார்கள் என்றும் சொல்லலாம். சமைக்கும் சாப்பாடு, கருகும் போது, அதிலிருந்து ஒரு வாடை வரும். அன்ன லட்சுமியை என்றுமே தீயில் வைத்து கருகவிடக் கூடாது. குறிப்பாக இதில் இருந்து வரக்கூடிய தீய்ந்த வாடை என்று சொல்லுவார்கள் அல்லவா, அந்த வாடை கட்டாயம் வீட்டில் இருக்கும் லட்சுமி தேவிக்கு பிடிக்கவே பிடிக்காது.

- Advertisement -

இந்தத் தவறை சில பேர் தெரியாமல் செய்வார்கள். சில பெண்கள், கோபத்தை சமையலறையில் காட்டி விடுவார்கள். வேண்டுமென்றே தீய விடும் பெண்களும் இருக்கிறார்கள் என்று சொன்னால் அது கட்டாயம் பொய்யாகாது. சிலபேரது வீட்டில் சண்டை வரும்போது, சமையலறையில் சமைக்கும் போது, பாத்திரத்தை உடைக்கும் பழக்கமும், சில பெண்களுக்கு இருக்கிறது. குறிப்பாக பாத்திரத்தை அதிக சத்தத்தோடு அடுப்பின் மேல் வைக்கவே கூடாது. அதாவது கோபத்தில் பட்டென்று அடுப்பில் வைப்பது அன்னலட்சுமியின் தலையில் அடிப்பதற்கு சமம்.

அக்கினி பகவானை அவமானப்படுத்துவதாக அர்த்தம். கூடவே, சமையலில் உப்பும், உறைப்பும் தூக்கலாக இருக்கும். அதாவது காரத்தைக் கொட்டி சமைத்து வைப்பார்கள். அந்த சமையல், சமையலாகவே இருக்காது. தயவுசெய்து மன கஷ்டத்தோடு, மனக் குழப்பத்தோடு எந்த ஒரு பெண்ணும் சமையலறைக்கு செல்லக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சமைக்கப்படும் சாப்பாடு கட்டாயம் தோஷம் சேர்ந்ததாக இருக்கும்.

- Advertisement -

உங்கள் வீட்டு சமையல் அறையை நீங்களே அவமானப்படுத்துவதற்க்கே சமம். இப்படி மன நிறைவு இல்லாமல் சமைப்பதற்கு, அன்று நீங்கள் சமைக்காமலே இருந்து விடலாம். எந்தக் காரணத்தைக் கொண்டும் எந்த கோபத்தையும் நம் வீட்டு சமையல் அறையில் நாம் காட்டவே கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படி செய்யும் பட்சத்தில் நம் வீட்டின் உடைய நிம்மதி குறையக்கூடும். அடுத்த சில தினங்களில் பெரிய பிரச்சனையை சந்திக்க கூட வாய்ப்பு உள்ளது. முடிந்தவரை வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த தவறை செய்யாமல் இருப்பது நல்லது. நீங்கள் தெரியாமல் செய்திருந்தால் திருத்திக் கொள்ளுங்கள். தெரிந்தே செய்யும் சிலரை திருத்துவது கொஞ்சம் கஷ்டம்தான்.

வீட்டில் இருக்கும் பெண்கள் சமைத்த சாப்பாட்டை தான் அந்த வீட்டில் இருக்கும் வயதானவர்களும், குழந்தைகளும், கணவரும் சாப்பிட வேண்டியிருக்கும். நீங்கள் கோபத்தோடு சமைத்த சாப்பாட்டை அவர்களுக்கு, கோபத்தோடு பரிமாறும்போது எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. குறிப்பாக, வயதானவர்களுக்கு நீங்கள் உப்போடு, காரத்தோடு, கோபத்தோடு போடப்படும் சாப்பாட்டினால், அவர்கள் அனுபவிக்கும் கஷ்டம் கட்டாயம் அதிகமாக இருக்கும்.

- Advertisement -

குறிப்பிட்டுச் சொல்லப் போனால் பெண்கள் செய்யும் பாவச் செயலில் இதுவும் ஒன்றாக சொல்லப்பட்டுள்ளது. எத்தனையோ குடும்பங்கள் சில பெண்களின், முன் கோபத்தினால் இன்னும் கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. பெண்கள் முடிந்த வரை முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு, குறிப்பாக சமையலறையில் எந்த ஒரு கோபத்தையும் காட்டக் கூடாது, என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த பொருட்களை எல்லாம், பக்கத்து வீட்டில் போய் கடனா கேக்காதீங்க! நீங்களும் யாருக்கும் கடனாக தராதீங்க! தேவையில்லாத கஷ்டம் தான் வரும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:.
Here we have Kitchen tips in Tamil. Samayal in Tamil. Samayalarai tips. Samayalarai tips in Tamil.

- Advertisement -