இந்த பொருட்களை எல்லாம், பக்கத்து வீட்டில் போய் கடனா கேக்காதீங்க! நீங்களும் யாருக்கும் கடனாக தராதீங்க! தேவையில்லாத கஷ்டம் தான் வரும்.

vilakku-milk

பொதுவாகவே சில பொருட்களை அடுத்தவர் வீட்டில் இருந்து கடனாக கேட்க கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். இதேபோல் சில பொருட்களை கடனாகவும் கொடுக்கக் கூடாது. முடிந்த வரை கடன் கேட்பதை தவிர்ப்பது நல்லது. நம் வீட்டில் இருப்பதை வைத்ததே, நம் வேலைகளை முடித்துக் கொள்ள வேண்டும். இல்லாத பொருட்களை அடுத்தவரிடம் போய் கடன் கேட்பது மிகவும் தவறு. அதிலும் குறிப்பாக செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, நல்ல நாள் கிழமை, விளக்கு வைத்த நேரம், இப்படி என்று எதுவுமே பாராமல் சிலபேர், சில வீடுகளுக்கு சென்று கடனாக சில பொருட்களை கேட்பார்கள், என்ன செய்வது? நாள் கிழமைகளில் கடனாக வந்து கேட்டாலும், சில பேர் எதையும் பொருட்படுத்தாமல் தங்கள் வீட்டிலிருந்து, வந்திருப்பவர் கேட்கும் பொருளை தூக்கி கொடுத்து விடுவார்கள். ஆனால் இது மிகவும் தவறான ஒன்று என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட பொருட்கள் என்னென்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ainthu-muga-vilakku

இந்த பொருட்கள் எல்லாம் நமக்கு தெரிந்த பொருட்களாக இருந்தாலும், இந்த தவறுகளை நாம் சில சமயங்களில் செய்து விடுவோம். முதலில் அந்த பொருட்கள் என்னென்ன என்பதை பார்த்து விடலாம். குறிப்பாக தண்ணீர், சுண்ணாம்பு, சர்க்கரை, பால், தயிர், இப்படிப்பட்ட வெள்ளைநிறப் பொருட்களை விளக்கு வைத்த வைத்த பின்பு நம் வீட்டில் இருந்து வெளி ஆட்களுக்கு கொடுக்கவே கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். அதற்காக தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று சொல்லவில்லை.

சில பேர் எல்லாம் அடுத்தவர்கள் வீட்டிலிருக்கும் ஐஸ்வர்யம் தனக்கு வரவேண்டும் என்று தெரிந்தே, இது வேண்டும்! அது வேண்டும்! என்று விளக்கு வைத்த சமயத்தில் அடுத்தவர் வீட்டிற்குப் போய் கேட்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். ஆனால், அவர்கள் வீட்டிலிருந்து எதையுமே கொடுக்க மாட்டார்கள். இப்படி இருக்க, நாம் மட்டும் ஏன் நம் வீட்டு ஐஸ்வர்யத்தை அடுத்தவர்களுக்கு தூக்கிக் கொடுக்க வேண்டும். சற்று சிந்தித்துப் பாருங்கள்!

curd

அதாவது நம் முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே இந்த சாஸ்திர குறிப்புகளை எல்லாம் நமக்கு சொல்லி வைத்துள்ளார்கள். நம் பாட்டிமார்கள் நமக்கு சொல்லுவார்கள், விளக்கு வைத்த பின்பு இந்த பொருட்களை எல்லாம் அடுத்தவர்களுக்கு கொடுக்கக் கூடாது என்று. ஆனால் மூடப்பழக்கம் என்று காலப்போக்கில் அதெல்லாம் இன்று மாறிப் போய்விட்டது.

- Advertisement -

ஆனால் இப்படிப்பட்ட பொருட்களை நாம் அடுத்தவர்களுக்கு விளக்கு வைத்த சமயத்திலோ அல்லது வெள்ளிக்கிழமை செவ்வாய்க் கிழமைகளிலோ தூக்கி கொடுக்கும் போது, நம்முடைய ஐஸ்வரியம் குறைந்து போகும் என்பது ஒரு பக்கம் இருக்க, நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் சுவையும் குறைந்து போகும் என்று சொல்லப்பட்டுள்ளது. நம் வாழ்க்கையில் இருக்கும் சந்தோஷம், இன்பமும் குறைந்து போனால் பரவாயில்லை என்று நினைப்பவர்கள் வேண்டுமென்றால், இந்தப் பொருட்களையெல்லாம் மற்றவர்களுக்கு தானமாக கொடுக்கலாம்.

lakshmi-devi

ஆனால், சற்று சிந்தித்துப் பார்த்தால் நம்முடைய பழக்க வழக்கங்கள் ஒவ்வொன்றாக மாறிக்கொண்டே வரவர, நமக்கு பிரச்சனைகளும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது என்று கூறலாம். அவர்கள் சொல்லி விட்டுச் சென்ற குறிப்புகள் எல்லாம் ஒருவேளை சரியாகத்தான் இருக்குமோ! என்று சிந்திக்கும் நிலைமையில் இன்று நாம் இருக்கின்றோம் என்று சொன்னால் அது கட்டாயம் பொய்யாகாது. நம்பிக்கை உள்ளவர்கள் இவைகளை கடைப்பிடிக்கலாம். நம்பிக்கையில்லாதவர்கள் தவிர்த்துவிடலாம். அது அவரவர் இஷ்டம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
செல்வ வளங்களை பெற்றுத்தரும் இந்த 5 மரங்களில் ஏதாவது 1 உங்கள் வீட்டில் இருந்தால் கூட நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் தான்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Aanmeega thagaval tamil tips. Aanmeega ragasiyam. Aanmeega seithigal in Tamil. Aanmeega thagaval in Tamil. Aanmeega tips Tamil.