
நாம் வாழும் வாழ்க்கையானது நல்ல முறையில் வாழ்கிறோமா அல்லது சோகத்துடனும் துன்பத்துடனும் கழிக்கிறோமோ என்பது நம்முடைய சூழ்நிலையை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. சூழ்நிலை என்பது நம்முடைய.வாழ்வாதாரம், உடல்நிலை மனநிலை இவற்றைப் பொறுத்து தான் அமையும்.இவையெல்லாம் சரியாக அமைந்தால் தான் நம்முடைய வாழ்க்கை நல்ல முறையில் கடக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படி இல்லாத வாழ்க்கை நிச்சயம் கவலைக்குரியதாக தான் இருக்கும். இப்படியான வாழ்வை தான் தரித்திர வாழ்வு என்றும் சொல்வார்கள். அந்த நிலையில் வாழ்பவர்கள் தங்களுடைய நிலை மாறி இன்பமாக வாழ்வதற்கு ஆன்மீகத்தில் ஒரு சூட்சம வழி உள்ளது. அதை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
தரித்தரிம் போன்றதொரு கொடுமையான நிலை வேறு எதுவும் இல்லை என்றே சொல்லலாம். ஒரு குடும்பத்தில் தரித்திரம் மற்றும் நிலை கொண்டு விட்டால் போதும் அந்த குடும்பத்தின் நிலை அதோ கெதி தான். வீட்டில் இருப்பவர்களுக்கு சுகம் இல்லாமல் போய்விடும் வீட்டில் பண வரவு இருக்காது வறுமை தாண்டவம் ஆடும் இவை அனைத்திலும் விட மனநிம்மதி கெட்டு ஏன் வாழ்கிறோம் என்கிற விரக்தி நிலைக்கு கூட நம்மை கொண்டு சென்று விடும்.
இப்படியான இந்த தரித்திர நிலையை நாம் உடனே மாற்றி விட வேண்டும். தரித்திரம் நம்மை ஆட்கொள்ள பல காரணங்கள் இருந்தாலும் நாமே ஏற்படுத்திக் கொள்ளும் காரணங்கள் தான் அதிகமாக இருக்கும். தரித்திரம் நம்மை அண்டாமல் இருக்க முதலில் நம்முடைய சோம்பேறித்தனத்தை ஒழித்து உழைப்பில் கவனத்தை செலுத்த வேண்டும். இப்படி உழைத்தாலும் கூட எங்களால் முன்னேற முடியவில்லை வறுமையிலே இருக்கிறோம் இந்த நிலை மாற வில்லை என நினைப்பவர்கள் இந்த ஒரு சூட்சம வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
இந்த வழிபாட்டை பெண்களைப் விட ஆண்கள் செய்வது சிறந்ததாக சொல்லப்படுகிறது ஆண்கள் செய்ய முடியாத பட்சத்தில் அல்லது செய்ய இயலாத குடும்ப சூழ்நிலையில் பெண்கள் செய்யலாம் தவறில்லை. இதற்கு பெரிதாக நாம் ஒன்றும் செய்யத் தேவையில்லை தினமும் ஆலயம் சென்று வழிபாடு செய்ய வேண்டும். வீட்டில் பூஜை புனஸ்காரங்கள் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாதத்தில் ஒரு நாள் ஆலயம் செல்ல வேண்டும் அவ்வளவு தான்.
இந்த விஷயத்தை கேட்கும்பொழுது உங்களுக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கும். மாதத்தில் ஒரு நாள் கோவிலுக்கு சென்றால் சரியாகும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. அதாவது குடும்பத்தில் இருக்கும் ஆண்மகன் மாதத்தில் ஒரு நாள் அதிகாலையில் நடக்கும் ஆலய வழிபாட்டிற்கு செல்ல வேண்டும். அது எந்த ஆலயமாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் அதிகாலையில் நடக்கும் வழிபாட்டிற்கு செல்ல வேண்டும். அப்படி சென்று அங்கு கிடைக்கும் அபிஷேக நீரை வீட்டிற்கு கொண்டு வந்து தெளிக்க வேண்டும்.
இதுதான் சூட்சம பரிகாரம் அல்லது வழிபாடு எது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இந்த தண்ணீரைக் கொண்டு வந்து வீட்டில் தெளிப்பதன் மூலம் வீட்டில் இருக்கும் தரித்திர சூழ்நிலை மாறி சுபிக்ஷ நிலை உருவாகும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த முறை செய்வதற்கு காலை வேலை மட்டும்தான் சிறந்தது. இதை மற்ற வேலைகளில் செய்யும் பொழுது இது பலன் தராது என்றும் சொல்லப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சனையை தீர்க்கும் தீர்த்தம்
தினம் தினம் தரித்திரத்தால் நம்முடைய குடும்பத்தினர், நாம் படும் வேதனையில் இருந்து மீள மாதத்தில் ஒரு நாள் இந்த ஒரு பரிகாரத்தை செய்தால் போதும் என்று சொல்லப்படுவது ஆச்சரியமான தகவலாக இருக்கலாம். இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இதை செய்து பலன் அடையலாம் என்ற தகவலுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.